மிர்சா குலாமின் பொய் முன்னறிவிப்பு - மன்சூர் முகம்மதுவுக்கு ஆண் குழந்தை

மன்சூர் முகம்மதுவுக்கு ஆண் குழந்தை முன்னறிப்பு- மிர்சா குலாம்
-----------

மிர்சா காதியானி 1902 முதல் review of religions என்ற சஞ்சிகையை மாதாமாதம் வெளியிட்டு வந்தார்.

அதில் ,

"மன்சூர் முகம்மதுவுக்கு ஆண்குழந்தை பிறப்பதாக நாம் கனவில் கண்டோம். அவரது பெயரை பற்றி நாம் கேட்டோம்.  கனவின் நிலை வஹியுடைய நிலைக்கு மாறியது.   " பஷீர் அத்-தவ்லா" என (குழந்தையின் பெயர்) கூறப்பட்டது. ஆனால் மன்சூர் முகம்மது என்பதன் மூலம் நாடப்பட்டதை நான் அறியமாட்டேன்.
(Review of religions , பக்கம் 122, மார்ச் 1906)

நான்கு மாதங்களுக்கு பின்,

"மன்சூர் முகம்மது என்பவர் இவர்தான் (தன்சீடர்) என நாம் அறிவிக்கப்பட்டோம்..  அவரது தற்போதைய மனைவிக்கு ஒரு ஆண்மகன் பிறப்பான். அவன் பஷீர் அத்-தவ்லா என பெயரிடப்படுவான். அம் மகன் இப்போதைய கர்ப்பத்திலுள்ளவர் அல்லாமல் இருக்க முடியும், ஆனால் அடுத்ததில் இருப்பார்.  எது எப்படியிருப்பினும், அவன் பிறப்பான் என்பது தடுக்க பட முடியாது.. அவன் இறைவனின் அத்தாட்ணியாக இருப்பான்"
(Review of religions , June 1906)

"மன்சூர் முகம்மதுவுக்கும் அவரது மனைவிக்கும் பஷீர் அத்-தவ்லா எனும் பெயரில் மகன் பிறப்பான் என எனக்கு வஹி வந்துள்ளது.
(ரூஹானி கஸாயின் , பாகம் 22, பக்கம் 103)

இதன் மூலம் அல்லாஹ், மிர்சாவை பொய்யர் என நிரூபிக்க நாடிவிட்டான்.

அவரது பொய்மையை தன் வாயாலேயே வெளிப்பட இறைவன் விதித்தான்,

ஜூலை 1906 இல், மன்சூர் அஹ்மதின் மனைவி பெண் குழந்தையை பெற்றார்.

ஆனாலும் மிர்சா மீண்டும் தன் வாயை வைத்து சும்மா இருக்கவில்லை..

" மன்சூர் முகம்மதின் மனைவி , சிறந்த ஆண்குழந்தையை பெற்று இத்தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றாமல் மரணிக்க மாட்டார்"
(Review of religions , June 1907)

ஆனால், அல்லாஹ் மிர்சா குலாம் பொய்யர் என இதன் மூலம் நிரூபிப்பதற்காக, ஆண் குழந்தையை பிறக்க செய்யாமலேயே அப்பெண்ணை மரணமடைய செய்து,

"மிர்சா அல்லாஹ்வின் மேல் இட்டுகட்டிய பொய்யர்" என நிரூபித்தான்.

ஆனால், அல்லாஹ் பிடிவாதக்காரர்களின் உள்ளத்தில் முத்திரை இட்டுவிட்டதால், அவர்கள் இதைபற்றி சிந்திக்காமல் அவர்களது தலைமைபீடம் இவ்வாறு சொன்னது:

"இறந்துவிட்ட மன்சூர் முகம்மதுவின் மனைவி (மனைவி இறந்துட்டார்) மூலமாக மிர்சா குலாம் கூறிய தீர்க்கதரிச நிறைவேற்றம், எப்போது எப்படி நிறைவேறும் என அல்லாஹ்வே அறிவான்"
(அல் புஷ்ரா , பாகம்2, பக்கம் 116)

சைத்தான் எப்போதும் தன் வேலையை விட மாட்டான் பார்த்தீர்களா??

மிர்சாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறாமல் போனதை கூட, எப்போது எப்படி நிறைவேறும் என அல்லாஹ் அறிவான் என கூறி தம் நிலையை சரிகாண்கிறார்கள் பார்த்தீர்களா??

இதுபோன்று தான், அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டும் பிடிவாதமாக அதற்கு போலியான சமாளிப்புகளை கூறி தம் நிலையை சரிகண்டு கொள்வோரே அநேகராய் உள்ளனர்... அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் முத்திரை இட்டுவிட்டான்!!!

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.