Posts

Showing posts from May, 2026

இறுதி நபித்துவம் -முடிவுரை

  பொய்யர் மிர்சா காதியானியின் பார்வையில் இறுதி நபித்துவமும் நம் மறுப்பும் 10.. இத்தகைய போலி நபித்துவ வாதங்கள் ஏன் ? அ . தனக்கென்று கட்டுப்பட்டு நடக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குவது - தலைமைத்துவ பண்பு இல்லாதவர்கள் பொய் சொல்வதன் மூலம் இவ்வாறு தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்காக நபித்துவத்தை வாதிடுகிறார்கள் . ஆ . தன்னை மற்றவர்களை விட சிறப்பானவர் என்று காட்டுவது - நான் மற்ற மக்களை விட சிறந்தவன் என்றும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன் என்று மக்களிடம் வாதிடும் ஒரு தந்திரமான முறையே நபித்துவத்தை போலியாக வாதிடுவது . இ . உலக ஆதாயம் - பெண் மற்றும் பொன் ஆகியவற்றை நேரடியாக கேட்டு அடையாமல் அல்லது உழைத்து பெற்றுக்கொள்ளாமல் ,   தந்திரமாக அடைந்துகொள்வதற்காக பாவிக்கப்படும் ஒரு முறையே போலி நபித்துவ வாதமும் . ஈ . தன் மூடத்தனமான கருத்துக்களை மக்களிடையே திணிப்பது - தன் கருத்துக்களை மக்களிடம் நேரடியாக சொன்னால் ஏற்கமாட்டார்கள் என்பதற்காக , தன்னை நபி என கூறி நம்ப வைப்பதன்மூலம் அத்தகைய கருத்துக்களை எதிர்கேள்வியின்றி செயற்படுத்துவதற்காக பொய்யர்கள் பயன்படுத்தும் உத்தியே இந்த நுபுவ்வத் வாதம...