இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்
இமாம் அல்- மஹ்தியும் பொய்யர்களும்
--------------------------------------------இறுதி காலத்தில் அல்மஹ்தி என்ற ஆட்சியாளர் தோன்றுவார் என நபிகளார் (ஸல்) அவர்கள் முன்னறிவித்துள்ளார்கள். அவர்கள் ஈசா நபியின் வருகைக்கு முன் ஆட்சிக்கு வந்துவிடுவார் என ஹதீஸ்களில் காண முடிகிறது. ஆனாலும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி சில கயவர்கள் தம்மை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ரசூல் என்றும் நபி என்றும் ஈசா என்றும் வாதிட்டு வழிகெடுத்துள்ளனர் இனியும் வழிகெடுப்பார்கள்.
எனவே "உண்மையில் மஹ்தி யார்? " என ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து காண்பதோடு, இதுவரை தம்மை மஹ்தி என வாதிட்டோரின் பட்டியலையும் காண்போம்.
-------------
அல்-மஹ்தி
-------------மஹ்தி என்றால் நேர்வழிபெற்றவர் என அர்த்தப்படும். நபிமார்கள் , நபித்தோழர்கள் என அனைவரும் மஹ்திய்யூன்களில் அடங்குவார்கள். ஆனாலும் நபி(ஸல்) அவர்கள் தன் குடும்பத்திலிருந்து ஒரு ஆட்சியாளர் வருவார் என்றும் அவரை "அல் மஹ்தி" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதுபற்றி வரும் ஹதீஸ்களை காண்போம்:
ஹதீஸ் 1:
அபூசயீத் அல்-குத்ரி (ர) அறிவித்தார்கள்:
"என் உம்மத்தின் இறுதிக்காலத்தில் அல்மஹ்தி தோன்றுவார். அல்லாஹ் அவருக்கு மழையை கொடுப்பான். பூமி அதன் பலன்களை கொடுக்கும்..... அவர் ஏழு அல்லது எட்டு வருடங்கள் ஆட்சி செய்வார்." என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(முஸ்தத்ரக் அல்ஹாகிம் 4/557-558, ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அல் ஸஹீஹா பாகம்2 பக்கம்336 , ஹதீஸ் 771)
ஹதீஸ் 2:
அலீ(ர) அறிவிக்கிறார்கள்:
"அல்மஹ்தி எங்களைச்சேர்ந்தவர் ஆவார். அவர் என் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அல்லாஹ் அவருக்கு ஒரே இரவில் நேர்வழிகாட்டுவான்."
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத் 2/58 ஹதீஸ் 645 -அஹ்மத் சாகிர், ஸுனன் இப்னுமாஜா 2/1367, ஸஹீஹ் அல்ஜாமிஉஸ் ஸஙீர் 6735)
ஹதீஸ் 3:
அபூசயீத் அல்குத்ரி (ர) அறிவித்தார்:
அல்மஹ்தி என்னிலிருந்து உள்ளவர். விரிந்த நெற்றியுடையவர் மெல்லியவளைந்த மூக்குடையவர். பூமி அநீதியாலும் அநியாயத்தாலும் நிறைந்தருப்பதை போல அவர் பூமியை நீதியாலும் நேர்மையாலும் நிரம்புவார் . மேலும் அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார்.
(அபூதாவூத் (கிதாப் அல்மஹ்தி) 4285 , முஸ்தத்ரக் அல்ஹாகிம் 4/557, ஸஹீஹ் அல்ஜாமிஃ 6736)
ஹதீஸ் 4:
நபிகளார் கூறியதை கேட்டுள்ளதாக உம்முஸலமா (ர) கூறுகிறார்கள்:
அல்மஹ்தி என் சந்ததியும் ஃபாதிமாவின் பிள்ளையிலிருந்து உள்ளவராவார்.
(அபூதாவூத் (கிதாப் அல்மஹ்தி) 4284, இப்னுமாஜா , ஸஹீஹ் அல்ஜாமிஃ 6734)
ஹதீஸ் 5:
அபூஸயீத் அல்குத்ரி (ர) அறிவிக்கிறார்கள்:
"அவர் (அல்மஹ்தி) எம்மில் ஒருவர் ஆவார். அவருக்கு பின்னால் ஈசா இப்னு மர்யம் தொழுவார்." என நபி(ஸல்) கூறினார்கள்.
(அஃக்பாருல் மஹ்தி, ஜாமிஉஸ் ஸஙீர் 5/219, ஹதீஸ் 5796)
ஹதீஸ் 6:
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ர) அறிவித்தார்:
"என் பெயரை ஒத்த பெயருடைய ஒருவர் அரபுகளை ஆட்சி செய்யாதவரை உலகம் அழியாது"
(முஸ்னத் அஹ்மத்5/199, ஹதீஸ் 3573)
வேறொரு அறிவிப்பில், அவரது பெயர் என்னுடைய பெயரை ஒத்திருக்கும். அவரது தந்தையின் பெயர் என் தந்தையின் பெயரை ஒத்திருக்கும்- அபூதாவூத் (கிதாபுல் மஹ்தி) 4282)
----------------------
இவற்றின்படி அல்மஹ்தியானவர்
1.நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்தவர். ஃபாதிமா (ர) அவர்களின் பிள்ளையிலிருந்து தோன்றுபவர். அதாவது குறைஷீ, பனூஹாசிமை சேர்ந்தவர்
2.அவரது பெயர் நபிகளாரின் பெயரை ஒத்திருக்கும். அவரது தந்தையின் பெயர் நபிகளாரின் தந்தையின் பெயரை ஒத்திரிக்கும..
(அதாவது முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வை ஒத்திருக்கும்)
3. அவர் அரபுகளை 7 வருடங்கள் ஆட்சி செய்வார். பூமியை நேர்மையாலும் நீதியாலும் நிரப்புவார்.
4. ஈஸா (அலை) அவர்களை சந்திப்பார். ஈசா (அலை) இமாம் மஹ்தியின் பின்னிருந்தே தொழுவார். அதன்பின்னே தஜ்ஜாலின் படையுடன் யுத்தம் நடக்கும்.
5. அவர் தஜ்ஜாலின் வருகையின்போது உயிருடன் இருப்பார். (ஏனெனில் ஈசா நபி இவருக்கு பின் தொழுவார்).
இவரே இமாம் மஹ்தி ஆவார். அல்லாஹ்வின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்!!!!!!!
------------------------------------------------------------------
தம்மை இமாம் மஹ்தி என வாதிட்ட பொய்யர்கள்:
----------------------1.ஸாலிஹ் பின் தரீஹ்:
தன்னை அல்மஹ்தி என்றும் நபி என்றும் தனக்கு வஹீ வருவதாகவும் வாதிட்டவன். இவன் ஒரு அரசனாக இருந்தவன். இவன் ஃகலீஃபா ஹிஷாம் இப்னு அப்துல் மலிகின் காலத்தில் வாதிட்டான். அதாவது கி.பி. 744 அளவில்..
2,3. சீஆக்களில் இஸ்னாஅஷரிய்யா பிரிவனர் முஹம்மத் இப்னு அல்ஹசன் (கி.பி. 869) என்பவரை 12ம் இமாமாகவும் மஹ்தியாகவும் நம்புகின்றனர். இவர் சிறுவயதில் காணாமல் போனதாகவும் ஈசா நபியின் வருகைக்கு முன் வருவார் என்றும் இவர்கள் நம்புகின்றனர்.
ஆனால் இவர் அப்படி வாதிட்டதாக இல்லை. மேலும் வேறு சீஆ பிரிவினர் இவரை அல்மஹ்தியாக கருதுவதில்லை.
அப்துல்லாஹ் இப்னு முஆவியா (கி.பி. 744) இவரும் தன்னை மஹ்தியாக வாதிட்டதாக இல்லை. இவர் ஜஃபர் இப்னு அபீதாலிபின் பரம்பரையை சேர்ந்தவர். சீஆக்களில் இவரை பின்பற்றியோர் இவரை மஹ்தி என வாதிட்டனர். இதற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை
4.அப்துல்லாஹ் அல்மஹ்தி பில்லாஹ்
5.இப்னு ஸுமார்த்
6.சையத் முஹம்மத் இப்னு சையத் அப்துல்லாஹ் ஜான்பூரி- இந்தியா
இவர் hijri. 901 இல் கஃபாவில் வைத்து தன்னை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என கூறினார்.
7.ஷாஹ் இஸ்மாயீல்
8.அஹ்மத் இப்னு அபீமஹாலி
9.அலீ முஹம்மத் சீராஸீ (பஹாஉல்லாஹ்)
இவன் 1844 இல் தன்னை மஹ்தி என்றும் ஈசா என்றும் மைத்ரேய புத்தா என்றும், கல்கி அவதார் என்றும் வாதிட்டான். இவன் ஈரானை சேர்ந்தவன்.
10. முஹம்மத் அஹ்மத்
இவன் 1881 இல் தன்னை மஹ்தி என வாதிட்டான் . சூடானை சேர்ந்தவன்
11.மிர்சா குலாம் அஹ்மத். (இவரது கும்லுக்கு எதிராகவே இந்த ப்ளாகர்)
இவர் இந்தியாவை சேர்ந்த உலகமாக பொய்யர். இவர் தோன்றியது இந்தியா என்பதாலும் இந்தியாவில் மூடர்கள் அதிகம் என்பதாலும் இவர் தப்பிச்சுக்கிட்டார். மேலும் இவரது காலத்தில் உஸ்மானியர்களுக்கு பிரித்தானியர்களை மிகைக்கும் அளவு பலம் இல்லாததால் இவர் தப்பித்துக்கொண்டார்.
12.ஃபர்த் முஹம்மத்
இவன் தன்னை மசீஹ் என்றும் மஹ்தி என்றும் வாதிட்டனர்.
13.முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல்கஹ்தானி-
இவரது மச்சானின் பேச்சை நம்பி தன்னை தவறாக மஹ்தி என நம்பிவிட்டார். இவரது மச்சான் கனவில் இவரை மஹ்தி என கண்டதாக கூறியதாகவும் அவரது பெயர் தந்தையின் பெயர் நபிகளார் கூறியபடி ஒத்திருப்பதால் இவரும் ஏமாந்து கஃபாவை 1979 நவம்பரில் ஆக்கிரமித்தார். பின் கொல்லப்பட்டார்.
ஈரானில் மட்டும் 3000இற்கு மேற்கட்டோர் சிறையில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தம்மை அல்மஹ்தி என வாதிட்டவர்கள்.
மார்க்க அறிவு இல்லாதவர்களையே இந்த கும்பல்கள் எதிர்பார்க்கிறார்கள்..... நாம் இறையருளை பெற அவனது தீனை கற்போமாக!!
Comments
Post a Comment