இரு கிரகணங்களும் அல்மஹ்தியும் காதியானிகளுக்கு மறுப்பு
ரமழான் மாதத்தில் ஏற்படும் சூரிய சந்திர கிரகணங்கள் மஹ்தியிற்கான அடையாளமா???
-----------------------------_------முகம்மதிப்னு அலியை தொட்டு வரும் அறிவிப்பையே காதியானிகள் ஆதாரமாக காட்டுகிறார்கள்.
ஜாபிர் அறிவித்ததாக அம்ர் இப்னு ஷிம்ர் அறிவிக்கிறார்கள் :
முஹம்மது இப்னு அலி கூறினார்கள் மஹதிக்கு இரண்டு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . வானமும் பூமியும் தோன்றிய நாளில் இருந்து இந்த அடையாளம் வேறு எந்த இறைத்தூதருக்காக
வும் நிகழவில்லை . அது என்னவெனில் மஹதியின் காலத்தில் முதலாவதாக , ரமளான் மாதத்தில் முதல் இரவில் ஏற்படும் சந்திர கிரகணமும் இரண்டாவதாக , நடுவே ஏற்படும் சூரிய கிரகணமும் ஆகும் . இந்த அடையாளங்கள் வானமும் பூமியும் தோன்றிய நாள் முதல் எந்த இறைத்தூதருக்காக
வும் நிகழவில்லை
தாரகுத்னி பாகம் 1 பக்கம் 88
இந்த முன்னறிப்பு படி மிர்ஸா குலாம் காலத்தில் 1891நிகழ்ந்தது எனவே அவர் தான் மஹதி என வாதிடுகின்றனர் ( மேலே உள்ள இதை நபியவர்கள் சொன்னதாக ஒரு சகோதரர் நபியின் மீது பொய் கூறியுள்ளார் )
முதலில் இது ஹதீஸே அல்ல !?
ஆம்
இந்த செய்தி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதல்ல அது முஹம்மது இப்னு அலி கூறியது என தான் தாரகுத்னி இல் பதிவு செய்ய பட்டுள்ளது .
மேலும் அறிவிப்பாளர் வரிசையில் இமாம் முஹம்மது பாகிர் இப்னு அலி இடம்பெறவில்லை மாறாக இந்த செய்தியில் வருவது அவரைப் போல் பெயர் கொண்ட யாரோ ஒருவர் .
வாதத்துக்காக இவர் இமாம் முஹம்மது பாகிர் இப்னு அலி என்பதை ஒப்புக் கொண்டாலும் பாகிர் இப்னு அலி பிறந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரணித்து 47 வருடங்களுக்கு பிறகு எனவே இவர் இதை நபியவர்களிடம் செவியேற்கவில்லை , இதை நபியவர்களிடம் கேட்டு அதை அறிவிக்கும் எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லை
மேலும் இந்த செய்தியின் அறிவிப்பவர் தொடரில் வரும் இப்னு அலி மிகவும் பலவீனமான அறிவிப்பவர் இவருக்கு அடுத்து அறிவிப்பவர் வரிசையில் வரும் அம்ர் இப்னு ஷிம்ர் மிகப்பெரிய பொய்யன் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுபவன் ஹதீஸ்களை மறுப்பவன் நபித்தோழர்களை ஏசுபவன் என ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் இவனை பற்றி கூறியுள்ளார்கள்
ஆதாரம் : மீஸானுல் - இஃதிதால் பக் : 262
இந்த செய்தியில் வரும் ஜாபிர் ஜாஃபி என்பவர் பற்றி சரியான தகவல் இல்லை இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்கள் இவனை பொய்யன் என்கிறார்கள்
இன்னும் எந்த அறிவிப்பாளரும் இதை நபியவர்கள் கூறியதாக எவரும் கூறவில்லை
ம் சரி ஒரு வாதத்துக்காக இதை மஹதி பற்றி முன்னறிப்பு செய்யும் ஹதீஸ் என வைத்துக் கொண்டால் இதன் சாராம்சம் இதில் வருவது போல் முதல் தேதியில் சந்திர கிரகணமும் நடுவே சூரிய கிரகணமும் ஏற்பட்டால் நிச்சயமாக அது அற்புதம் தான் ஏனெனில் இயற்கையாக இந்த தேதிகளில் இப்படி நிகழாது
இது கூட இது மிர்ஸாவிற்கு பொருந்தவில்லை என்பது தான் உண்மை அவர் பொய்யர் என்பதற்கு சான்று
அவன் காலத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படும் கிரகணங்கள் இந்த அறிவிப்பில் உள்ளது போல் நடக்கவில்லை ரமளான் முதல் நாள் நடக்க வேண்டிய சந்திர கிரகணம் 13லும் நடுவே ஏற்பட வேண்டிய சூரிய கிரகணம் 28 ல் நிகழ்ந்து மிர்ஸா பொய்யர் தான் என நமக்கு தெளிவாக காட்டுகிறதுகாட்டுகிறது.
இதுபோன்ற கிரகணங்கள் சுமார் 1000 முறைகளுக்கு மேல் நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ( book by mr.keith it's name use of the globe )
அவ்வளவு ஏன் மிர்ஸாவின் காலத்தில் கூட 45 வருடங்ககளில் 3 முறை ஏற்பட்டுள்ளது ( எந்த தேதிகளில் என்பதை கீழே t உள்ளது )
எப்படி பார்த்தாலும் மிர்ஸா பொய்யர் தான் !
அம்மூன்று கிரகணங்களுமாவன (இஸ்லாமிய கலண்டர் தினம் இந்தியா சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது)
1.*சந்திர கிரகணம் -
(1851CE ஜூலை 13 - Hijri 1267 ரமழான் 13
ஆரம்பித்த நேரம்: முற்பகல் 11:21
உச்சம்: பி.ப. 12:51
.
முடிவு: பி.ப. 2:22
இது காதியானில் தென்படவில்லை. காரணம் தென்படும் ஏரியாவில் இந்தியா இருக்கவில்லை. அடுத்து இது இந்தியாவில் பகல் நேரம். அதனால் தென்படாது.
*சூரிய கிரகணம்:
1851 ஜூலை 28- ஹிஜ்ரி 1267 ரமழான் பிறை 28
ஆரம்பித்த நேரம்: பி.ப. 5:47
உச்சம்: இரவு 8:04
முடிவு: இரவு 10:20
இதுவும் காதியானில் தென்படவில்லை. அதாவது இந்தியாவுக்கு தென்படவில்லை.
இந்த இரு கிரகணங்களும் ஏற்பட்ட காலத்தில் மிர்சா காதியானிக்கு வயது 12 அல்லது 16 ஆகும். அதாவது தன்னை மஹ்தி என வாதிட 40 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.
அக்காலத்தில் பஹாயுல்லாஹ் என்பவன் தன்னை மஹ்தி என வாதிட்டுக்கொண்டிருந்தான்.
-----
2. *சந்திர கிரகணம்:
1894 மார்ச் 21 - ஹிஜ்ரி 1311 ரமழான் 14
ஆரம்பித்த நேரம்: இரவு 6:58
உச்சம் : இரவு 7:51
முடிவு : இரவு 8:44
இது காதியானில் தென்பட்டது.
*சூரிய கிரகணம்:
1894 ஏப்ரல் 6 - ஹிஜ்ரி 1311 ரமழான் 28
ஆரம்பம்: காலை 6:45
உச்சம்: காலை 9:24
முடிவு: பி.ப. 12:02
இது காதியானில் தென்பட்டது.
இந்த இரண்டும் மிர்சா தன்னை மஹ்தி என வாதிட்ட பின் நடந்தது.
இதையே தனக்கு ஆதாரமாக வாதிட்டார் மிஸ்டர் பொய்யர்
-------
3. சந்திர கிரகணம்:
1895 மார்ச் 11 - ஹி.1312 ரமழான் 13
ஆரம்ப நேரம் : காலை 7:25
உச்சம்:காலை 9:10
முடிவு 10:54
இது இந்திய நேரத்தில் காலை என்பதால் சந்திரகிரகணம் தென்படவில்லை.
சூரிய கிரகணம்:
1895 மார்ச் 26 - ஹி.1312 ரமழான் 28
ஆரம்ப நேரம்: பி.ப. 2:08
உச்சம்: பி.ப. 3:40
முடிவு: மாலை 5:10
இது கிறீன்லாந்து,இங்கிலாந்து ஆகிய இடங்களில் மட்டும் தென்பட்டது.
-----
இப்படி வழமையாக நடக்கும் ஒன்றே இது ஆகும்.
இது அல்மஹ்தியிற்கான அடையாளம் அல்ல..
அப்படி இருப்பதானால், ஒரு பேச்சுக்கு
அது ஏற்படவேண்டியது
சந்திரகிரகணம் பௌர்னமி நாளில் ஏற்படாமல், வளர்பிறையில் ஏற்பட வேண்டும்.
சூரிய கிரகணம் அமாவாசை நாளில் ஏற்படாமல், பௌர்ணமி நாளில் ஏற்பட வேண்டும்.
அதுகூட பலவீனமான அறிவிப்பே ஆகும்.
இது மிர்சா காதியானிக்கு ஆதாரம் அல்ல
இமாம் மஹ்தி யார்? போலி மஹ்திகள்!
Comments
Post a Comment