காதியானி கொள்கைகளும் நம் மறுப்பும் 1
காதியானிகள் யார்?
அவர்களது நம்பிக்கை என்ன?
பாகம் 1
------------------------------------------------------------------காதியானிகள் தம்மை முஸ்லிம்கள் என கூறிக்கொள்ளும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிய குழு ஆகும். இவர்கள் குர்ஆன்&ஹதீஸ்களை திரித்து தம் வழிகேட்டுக்கு ஆதாரம் உருவாக்குபவர்கள் ஆவர்.
நம் தொழுகையை தொழுது நம் கிப்லாவை பின்பற்றி நாம் அறுப்பதை உண்பதால் மட்டும் ஒருவர் முஸ்லிமாக மாட்டார் அவர் இஸ்லாமிய அடிப்படைகளை நிராகரித்துவிட்டால்....
இவர்களது நம்பிக்கை என்ன?
(இறுதி நபித்துவத்தை மறுத்து, மிர்சாகுழாம் என்ற பொய்யரை இறுதிநபியாக நம்புகிறார்கள்)
நபிகளாரே இறுதி நபி என்ற உண்மையை மறுக்கிறார்கள்
1.அல்லாஹ் நபிகளாரை "ஃகாதமுன் நபிய்யீன்" என குர்ஆனில் 33:40 இல் கூறுகிறான்.
இதன் அர்த்தம் "நபிமார்களின் முத்திரை" என்பதாகும்.
இதே வசனம் "ஃகாதிமுன் நபிய்யீன்" எனவும் ஓதப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் "நபிமார்களில் இறுதியானவர்" என்பதாகும்.
"ஃகாதிம்/ஃகாதம்" எதுவாக இருந்தாலும் இவ்வசனம் குறிப்பது நபிமார்களில் இறுதியானவர் என்பது தான் என நபிகளாரே தன் கண்ணியமான வாயினால் சொல்லியுள்ளார்கள்.
உதாரணமாக
1.எனது நிலையும் இறைதூதர்களின் நிலையும் ஒரு வீட்டைகட்டி , அதை அழகாக அலங்கரித்து ,ஒரு மூலையில் ஒரு கல் அளவிற்கு இடத்தை விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலைபோன்றதாகும். மக்கள் அதை சுற்றிபார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, "இந்த கல் வைக்கப்பட்டிருக்க கூடாதா?" என்று கேட்கலானார்கள். நான் தான் அந்த கல். நான் நபிமார்களில் இறுதியானவர் (ஃகாதிமுன் நபிய்யீன்).
(புகாரி 3535)
2.நான் மற்ற இறைதூதர்களைவிட 6 விசயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.
5வது:நான் முழுமனிதர்களுக்கும் தூதராக ஆக்கப்பட்டுள்ளேன்.
6வது: என்மூலம் நபிமார்கள் முத்திரையிடப்பட்டுவிட்டனர். (நபிமார் வருகை முற்றுபெற்றுவிட்டது)
(முஸ்லிம் 907)
3.ரிசாலத்தும் நுபுவ்வதும் முடிந்துவிட்டது. எனக்குபிறகு ரசூலும் இல்லை. நபியும் இல்லை.
(திர்மிதி 2272)
4.என் உம்மதில் 30 பொய்யர்கள் தோன்றி தம்மை நபி என வாதிப்பர். நானே நபிமார்களின் முத்திரை (ஃகாதமுன் நபிய்யீன்). எனக்குபின் நபி இல்லை.
(திர்மிதி 2219)
5. நான் ஆகிப் (இறுதியானவர்) ஆவேன்.எனக்கு பிறகு இறைத்தூதர் இல்லை.
(முஸ்லிம் 4697,4698)
6.அலீயே! மூசாவிடம் ஹாருனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும் எனக்கு பின் நபி இல்லை.
(முஸ்லிம் 4777,4778)
7.பனூஇஸ்ராயீலை நிர்வகிப்போர் இறைத்தூதர்களாக இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும்போதெல்லாம் மற்றோர் இறைதூதர் வருவார். மேலும் எனக்கு பின் இறைதூதர் இல்லை. ஆயினும் ஃகலீஃபாக்கள் தோன்றுவார்கள்
(புகாரி 3455)
ஈசா நபி நபிகளாருக்கு முன்னுள்ள நபி என்பதால், அவர்கள் நபிகளாரின் பின் திரும்ப வந்தாலும் அவர் புதியவர் அல்ல... ஏற்கனவே பெற்ற நபித்துவத்துடனே ஈசாநபி இருப்பதால், முஹம்மது நபிக்கு பின் வேறு நபியில்லை. ஈசா அவருக்கு முன்னுள்ள நபி ஆவார்(இது சின்ன விளக்கத்துக்காக). இதனால் இவற்றுக்குள் முரண் வராது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் தொட்டு இன்றுவரை அஹ்லுஸ்ஸுன்னாவினர் அனைவரும் இதில் ஏகோபித்து ஒருமித்திருக்கிறார்கள்.
ஆனால் காதியானிகள் , இதை மறுக்கிறார்கள். முஹம்மது நபிக்கு பின் நபி வரலாம் என நம்புகிறார்கள். இதனால் இவர்கள் காஃபிர்களாவர்..
தம் வழிகேட்டுக்கு ஆதாரமாக, பின்வருபவற்றை காட்டுகின்றனர்.
--
**காதியானி பக்கவாதம்:
1.நான் காதமுல் அன்பியா. அலீயே! நீ ஃகாதமுல் அவ்லியா- என்று நபிகளார் கூறியதாக ஒரு செய்தியை ஃகதீப் அல்பக்தாதி (ரஹி) பதிவுசெய்துள்ளார்.
இதை ஆதாரமாக காட்டுகின்றனர்.
முஸ்லிமின் பதில்:
இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும். இதை இட்டுகட்டியவர் "உமர் இப்னு வாசில்" என்ற பொய்யராவார்.
இதில் எந்த ஆதாரமும் இல்லை!!
----
**காதியானி பக்க வாதம்:
2.நான் நபிமார்களில் இறுதியானவர். என் மஸ்ஜித் மஸ்ஜித்களில் இறுதியானது- ஸஹீஹ் முஸ்லிம்
இதை காட்டி மஸ்ஜிதுன் நபவீ கடைசி பள்ளிவாசலா? இல்லைதானே.. அது போன்றே நபிமார்களில் இறுதியானவர் என்பதும் என்கிறார்கள்.
*முஸ்லிமின் பதில்:
இந்த ஹதீசுக்கு விளக்கமாக கன்ஸுல் உம்மாலில் ஒரு ஹதீஸ் உள்ளது.
"நான் காதமுன் நபிய்யீன். என் மஸ்ஜித் நபிமார்களின் மஸ்ஜித்களின் முத்திரை (ஃகாதம்)"
(கன்ஸுல் உம்மால் 34999)
இதன்படி ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீசின் விளக்கமானது, நபிமார்களின் பள்ளிகளில் மஸ்ஜிதுந்நபவீ இறுதியானது என்பதாகும்.
இதற்கும் நபிமார்களின் வருகைக்கும் சம்பந்தம் இல்லை!!
-----
**காதியானி பக்கவாதம்:
சில அறிஞர்களின் கூற்று:
நபிகளாரை ஃகாதமுல் அன்பியா என கூறுங்கள். அவருக்கு பின் நபி யாரும் வரமாட்டார் என கூறாதீர்கள்!
*முஸ்லிமின் பதில்:
ஈஸா நபி முஹம்மது நபிக்கு பின்னால் மீண்டும் வருவார் என்ற அர்த்ததில் சொல்லியிருந்தால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கது.
இல்லாவிட்டால், குப்பையில் தூக்கி வீசப்படவேண்டியதாகும். ஏனெனில் நபிகளார் ஃகாதமுல் அன்பியாவுக்கு "இறுதி நபி" என விளக்கம் கொடுத்துவிட்டார்கள்.
ஈசா நபி ஏற்கனவே நபி... எனவே அவர் வரும்போது புது நுபுவ்வத் இருக்காது. ஏற்கனவே அவர் நபியாக தான் உள்ளார்.
----
**காதியானி பக்கவாதம்:
இனி வஹிவராது என சொல்லாதீர்கள்!
*முஸ்லிமின் பதில்:
ஈசா நபியிற்கு தஜ்ஜாலை கொன்ற பின் , அல்லாஹ் வஹி அறிவித்து அவருடன் இருப்போரை அழைத்து சென்று தூர்மலையில் ஒதுங்கிகொள்ளுமாறு இறைவன் கூறுவான். காரணம் யஃஜூஜ் மஃஜூஜுடன் போராட முடியாது.
இதை அடிப்படையாக வைத்து ஈசா நபிக்கு வஹிவரும் என நம்பினால் இக்கருத்து சரியானது.
மற்றபடி வேறு மனிதர்களுக்கு வஹி வரும் நுபுவ்வத் வரும் என நம்பினால் அது குஃப்ர்!
------
**காதியானி பக்கவாதம்:
நபிகளார் அப்பாஸ்(ர) அவர்களை ஃகாதமுல் முஹாஜிரீன் என்றார்கள். அப்பாஸ் அவர்களக்கு பின் முஹாஜிர் இல்லையா? அல்லது காதம் என்றால் சிறந்தவர் என அர்த்தமா??
முஸ்லிமின் பதில்
மக்காவெற்றிக்குப்பின் (மக்காவிலிருந்து மதீனாவுக்கான) ஹிஜ்ரத் இல்லை
(புகாரி).
இதன் அடிப்படையில் அப்பாஸ் (ர) அவர்களே கடைசியாக மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் போனார்.
இது இஸ்லாமிய வரலாறுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம்.
அதனால் தான் நபிகளார் அப்பாஸை ஃகாதமுல் முஹாஜிரீன் என சொன்னார். அதாவது கடைசி முஹாஜிர்.
---
எனவே இவ்வாதங்களில் இவர்கள் மிகவும் வழிகெட்டு இஸ்லாத்திலிருந்து வெளியேறியோராக உள்ளனர்
--------------------
--------------------
(தொடரும்)
Comments
Post a Comment