ஈசா நபி மரணித்துவிட்டார்களா? காதியானிகொள்கைக்கு நம் மறுப்பு 2
காதியானிகள் யார்?
அவர்களது கொள்கை என்ன??
ஈசா நபியும் பொய்யர்களான போலி ஈசாக்களும்!
பாகம் 2
----------------------------------------------------------------------------------------
முஸ்லிம்களான நாம் நபிகளார்(ஸல்) அவர்கள் முதல் அனைத்து சஹாபாக்களும் நேர்வழிபெற்ற இமாம்களும் இன்றுவரை ஈசா நபிவிசயத்தில் ஒன்றுபட்டுள்ளார்கள்.
அதாவது, ஈசா இப்னு மர்யம் (அலை) அவர்களை காஃபிர்கள் சிலுவையில் அறைந்து கொல்ல தயாரானபோது, அன்னாரை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்தி காப்பாற்றினான். அவருக்கு பதிலாக அவரைப்போல ஒப்பாக்கப்பட்ட ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார்.. மறுமை நெருங்கும்போது அவர் இரண்டு வானவர்களின் இறக்கைகளில் கையை வைத்தவாறு இறங்குவார், தஜ்ஜாலையும் அவனது படையையும் அழிப்பார்...
ஜிஸ்யா வரியை நீக்கி மக்களிடமிருந்து இஸ்லாத்தை மட்டுமே ஏற்றுகொள்வார்.. அவரது காலத்தில் செலவம் பெருகும் என்றெல்லாம் நபிகளார் கூறியதில் ஒருமித்த கருத்தில் இருந்து வருகிறோம்!!
ஆனாலும் சில கயவர்கள் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி , குர்ஆனை திரித்து , பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து இதை பொய்ப்பித்து,,
"ஈசா நபி ஏற்கனவே மரணித்துவிட்டார். மறுமை நாள் வரும்போது வரும் ஈசா நான் தான்" என வாதிட்டு மக்களை காஃபிராக்கியுள்ளார்கள்.
அவர்களில் குறிப்பாக
1.பஹாஉல்லாஹ் என்ற ஈரானிய பொய்யன் கி.பி. 1844 அளவில் தன்னை ஈசா நபி என வாதிட்டான்.
2. மிர்சாகுழாம் அகமது என்ற பொய்யரும் கி.பி 1880-1890களில் தன்னை ஈசா என வாதிட்டார். பொய்யராக காஃபிராக மரணித்தார்.
3.இப்போது முனீர் அகமது அஸீம் என்ற பொய்யனும் தன்னை மஹ்தி , மசீஹ் என வாதிடுகிறார்... இவர் காதியானியாக இருந்து இப்போது புதுநபியாக அறிவித்திருக்கிறார்.
எனவே இதுபற்றி குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன என பார்ப்போம்:
1.ஈசா நபி சிலுவையில் அறைப்படவுமில்லை. கொல்லப்படவுமில்லை. மாறாக அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான்!
👇👇👇
இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(அல்குர்ஆன் : 4:157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:158)
வேதமுடையவர்களில் எவரும் அவர் (ஈசா) இறப்பதற்கு முன் அவர் மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
(அல்குர்ஆன் : 4:159)
இவ்வசனங்களில்,
அவரை கொல்லவே இல்லை என சொல்லிவிட்டு, அல்லாஹ் தன் பக்கம் உயர்த்திகொண்டான் என சொல்கிறது குர்ஆன்.
கொல்லவே இல்லை என்று சொல்லிவிட்டு, இப்படி சொல்வதானது, அதற்கு பின் அவர் மரணிக்கவில்லை.. வானத்திற்கு உயர்த்தப்பட்டார் என்பதே ஆகும். இது அல்லாஹ்வின் வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாகும்..
வெறுமனே அந்தஸ்தை உயர்த்துவதை சொல்வதென்றால், அதற்கு பின் அவர் மரணித்தார். பிறகு அந்தஸ்தை உயர்த்தினான் என அல்லாஹ் சொல்லியிருப்பான்.. அப்படித்தான் செய்திருந்தால் அதில் இறைவனின் வல்லமைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாமலாகிவிடும். இவ்வசனத்தின் இறுதி வீணானது போல ஆகிவிடும்.. அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!!
அதற்கு அடுத்த வசனமாகிய 4:159 இல், ,
வேதமுடையவர்களில் எவரும் , ஈசா நபி மரணிப்பதற்கு முன் ஈமான் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என சொல்கிறது.. அதாவது ஈசா நபி மீண்டும் வந்த பின்னால் அவரை நம்பவேண்டிய முறைப்படி நம்பி விடுவார்கள்.
அவர் ஏற்கனவே இறந்திருந்தால் இதில் அர்த்தமே இல்லாமலாகிவிடும்!!
எனவே இவ்வசனங்களே ஈசா நபி மரணிக்கவில்லை என்பதை காட்டுகிறது
--------------------------------------------
2. ஈசா நபி மறுமையின் அடையாளமாவார்! என குர்ஆன் சொல்கிறது.
நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
(அல்குர்ஆன் : 43:61)
இவ்வசனத்திற்கு முந்திய வசனங்களில் ஈசா நபியை பற்றி கூறிவந்து, 61வது வசனத்தில் அவர் மறுமையின் அத்தாட்சி என குர்ஆன் கூறுகிறது.
அவர் ஏற்கனவே மரணித்திருந்தால், அவர் மறுமையின் அத்தாட்சி என்பது அர்த்தமற்றதாகிவிடும்... மறுமை நெருங்கும்போது ஹதீசில் கூறப்பட்டுள்ளபடி வந்தால் மட்டுமே அவரை மறுமையின் அத்தாட்சி என சொல்லலாம்.
இவ்வசனமும் ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்கு ஆதாரமாகும்.
--------------------------------------------
3. ஈசா நபியை கிறிஸ்தவர்கள் கடவுளாக சித்தறித்தனர். அவர்களுக்கு பதிலாக கூறும்போது ," ஈசாவும் அவரது தாயும் உணவு உண்போராக இருந்தனர்" என பதிலளிக்கிறது...
மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் வந்து சென்றுவிட்டனர். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு எவ்வாறு தெளிவாக்கினோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
(அல்குர்ஆன் : 5:75)
அதாவது சாப்பாடு உண்டால் கழிப்பிடம் செல்லவேண்டும் இப்படி பலவீனமானோராக அவ்விருவரும் இருந்தனர். அப்படியிருக்க எவ்வாறு கடவுளாக முடியும் என கேட்கிறான்.
அவர் ஏற்கனவே இறந்திருந்தால்,, இறந்தவரெல்லாம் எப்படி கடவுளாக முடியும் என ஒரேயடியாக பதில்கொடுத்திருப்பான்...
இவ்வசனம் ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு ஆதாரமாகும்.
--------------------------------------------
4. தவஃப்பா, முதவஃப்பீக்க என்பது மரணத்தை மட்டுமே குறிக்கும் வார்த்தைகளா??
"தவஃப்பா" என்பது "முழுமையாக எடுத்துகொண்டான்/ கைப்பற்றினான்" என்பதை குறிக்கும்.. "துவஃப்பா" என்றால் "பூரணமாக கொடுத்தான்" என்று அர்த்தமாகும்.
இவ்வார்த்தை (தவஃப்பா) மரணத்தை குறிக்க பாவிக்கப்பட்டாலும், எல்லா இடத்திலும் அந்த அர்த்தம் வராது.
உதாரணமாக,,
குர்ஆன் 4:15 இல் "தவஃப்பா" என்ற வார்த்தை வெறும் கைப்பற்றுதலையே குறிக்கும்.
"ஹத்தா யதவஃப்பாஹுன்னல் மவ்து" - மவ்த் பெண்களான அவர்களை கைப்பற்றும்வரை
இதில் தவஃப்பாவுக்கு மரணம் என அர்த்தம் வைத்தால் ,, இவ்வசனமே அர்த்தமற்றதாகிவிடும்!!
மேலும் இந்த "தவஃப்பா" என்ற வார்த்தை தூங்க வைப்பதையும் குறிக்கும்...
உதாரணமாக,
குர்ஆன் 6:60
"அவன் தான் உங்களை இரவில் கைப்பற்றிகொள்கிறான் (யதவஃப்பா-கும்)"
இவ்வார்த்தை இங்கே மரணிப்பதை குறிக்கவில்லை என தெளிவாக விளங்கிவிடும்.
இரவில் நமது மூளை,உடல்,இதயம் என அனைத்தும் வேலைசெய்கிறது.
இவ்வார்த்தை இங்கு தூங்கவைப்பதையே குறிக்கும்.
இப்போது குர்ஆன் 3:55 பார்ப்போம்:
👇👇👇
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
(அல்குர்ஆன் : 3:55)
இவ்வசனத்தில் "இன்னீ முதவஃப்பீக வராஃபிஉக இலைய்ய" என உள்ளது.
அதாவது "நிச்சயமாக நான் உன்னை கைப்பற்றிகொள்வேன் மேலும் என் பக்கம் உயர்த்திகொள்வேன்" என்பதாகும்.
இங்கே உள்ள கைப்பற்றுதல் பற்றி தஃப்சீர் இப்னு கசீரில் கூறப்படுவதாவது,,
அல்லாஹ் ஈசா நபியை தூங்க வைத்தான். பிறகு தன் பக்கம் உயர்த்திகொண்டான்
(தஃப்சீர் இப்னு கசீர் , சூரதுல் ஆலஇம்ரான் 55வது வசனத்திற்கான தஃப்சீர்)
அதாவது ஈசா நபியை அல்லாஹ் தூங்கவைத்து தன்பக்கம் உயர்த்திகொண்டான் என்பதே இவ்வசனத்தின் விளக்கமாகும்.
ஆனாலும் காதியானிகள் இவ்வசனத்திலுள்ள "முதவஃப்பீக" என்றால் "முமீதுக-உன்னை மரணிக்க செய்வேன்" என இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறியதை திரித்து தமக்கு சாதகமாக பேசுவர்.
ஆனால், இப்னு அப்பாஸ் (ர) அவர்களின் முழுமையான விளக்கமானது,
"உன்னை என்பக்கம் உயர்த்திகொள்வேன். இறுதி காலத்தில் உன்னை மரணிக்க செய்வேன்" என்றே கூறியுள்ளார்கள்..
மறுமைநாள் நெருங்கும்போது வந்து பூமியில் மரணிப்பதையே அவர் குறிப்பிட்டுள்ளார்... எனவே இதில் காதியானிகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை!!
குர்ஆன் 6:60இல் கூறப்பட்டது போல தூங்க வைப்பதையே 3:55 இல் கூறுகிறது. பின்பு அவரை உயர்த்திகொண்டான்.
காதியானிகள் தம் வாத திறமையால், தவஃப்பா என்பது பில்லைல் அல்லது மனாம் என்பதுடன் சேர்ந்து வந்தால் மட்டுமே தூக்கத்தை குறிக்கும் என்றும் மற்றபடி மரணத்தையே குறிக்கும் என்றும் பிதற்றுகிறார்கள்.
ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை..
அப்படியே 39:42ஐ பார்த்தால், இவர்களது வாதம் எவ்வளவு பித்தலாட்டம் என புரியும்.
"அல்லாஹு யதவஃப்பல் அன்ஃபுஸ #ஹீனமவ்திஹா வல்ல(த்)தீ #லம்_தமுத் ஃபீ மனாமிஹா. ஃபயும்ஸிகுல்ல(த்)தீ கழா அலைஹல் #மவ்த வயுர்சிலுல் உஃக்ரா இலா அஜலிம் முஸம்மா..."
இந்த வசனத்தை பாருங்கள்.
அல்லாஹ் மரணத்தின்போதும் மரணிக்காதவற்றை தூக்கத்தின்போதும் உயிர்களை #கைப்பற்றுகிறான். எதன்மீது #மரணத்தை விதித்துவிட்டானோ அதை நிறுத்திக்கொள்கிளான். ஏனையதை ஒரு குறிப்பிட்ட தவணைவரை அனுப்பிவிடுகிறான்...".
39:42
இங்கே தவஃப்பாவுக்கு மரணம் என அர்த்தம்வைத்தால், வசனமே நகைச்சுவைக்குரியதாக ஆகிவிடும்.
மரணத்தின்போது உயிர்களை மரணிக்கசெய்கிறான். மரணிக்காதவற்றை தூக்கத்தின்போது மரணிக்க செய்கிறான் என்ற அர்த்தம் வரும். இது லூசுத்தனமாஐ இருக்கும்...
மனாமிஹா என்றதை விடுங்கள்..
இப்போ, மரணத்தின்போது உயிர்களை மரணிக்க செய்கிறான் என்று அர்த்தம் வையுங்களேன்..... உடல் மரணிக்குதா உயிர் மரணிக்குதா? காதியானிகளே??
இந்த சின்ன முரண்பாடும் புரியாதா??
இவர்கள் சொல்வதுபோல தவஃப்பாவுக்கு இப்படி அர்த்தம் கொடுத்தால் அது மடத்தனமாகவே இருக்கும்.
தவஃப்பா என்றால் பூரணமாக எடுத்துக்கொள்வதை குறிக்கும்.... துவஃப்பா என்றால் பூரணமாக கொடுக்கப்படுவதை குறிக்கும்.
இந்தபடியே இடத்திற்கேற்றாற்போல மொழிபெயர்க்க வேண்டும்.
ஈசா நபியை அவர்கள் கொல்லவே இல்லை.. மாறாக அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக்கொண்டான்.
(4:157-158)
அவரது மரணதமுக்கு முன்னால் வேதம்கொடுக்கப்பெற்ற எவரும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார். (4:159)
அதாவது ஈசா நபியின் மரணத்துக்கு முன்பாக வேதம்கொடுக்கப்பெற்ற யூதகிறிஸ்தவர்கள் அவரை நம்புவார்கள் என தெளிவாக குர்ஆன் கூறுகிறது.
ஆனால் யூதர்கள் அவரை இன்னும் நம்பவில்லை.. இதன்படி அவர் இன்னும் மரணிக்கவில்லை என காட்டுகிறது.
காதியானிகள் தம் வாத திறமையால், இதில் "கப்ல மவ்திஹி" என்பது வேதக்காரனின் மரணத்தை குறிக்கும் என கூறுகிறார்கள்..
ஆனால் இது ஏற்றுக்கொள்ள முடியாது... ஏனெனில் மரணத்துக்கு முன்னாடி நம்பிவிட்டால், அவர்கள் அனைவரும் முஃமின்கள்வாகிவிடுவர். இது தவறு ஆகும். அப்படி பார்த்தால் கடந்த கால யூதர்களும் ஈசா நபியை நம்பிய பின்பே மரணித்தார்கள் என வரும்... அதன்படி பார்த்தால் முகம்மது நபிவரைக்கும் உள்ள எல்லா யூதர்களும் சுவர்க்கம் போவார்கள் என்று வரும்.... ஏன் ஈசா நபியை திட்டி மர்யமின்மீது அவதூறு கூறியவர்கள்கூட முஃமின்களாக மரணித்தார்கள் என வரும்... ஆகவே இது மிக தவறு ஆகும்.
கப்ல மவ்திஹி என்ற
இது ஈசா நபியை குறிக்குது என நாம் கூறும்போது, தமக்கிருக்கும் அறியாமையை வெளிப்படுத்தும்விதமாக நம்மிடம் ஒரு கேள்வி கேட்பார்கள்.
வேதக்காரர் எவரும் ஈசா நபியின் மரணத்துக்கு முன்னாடி ஈமான் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என்றால், ஏற்கனவே மரணித்த யூதர்கள் எழுப்புவிக்கப்பட்டு நம்பிக்கை கொள்ள வைப்பார்களா என நம்மிடம் கேட்கிறார்கள்.
முதலில் அவ்வசனம் , ஈசா நபி மரணிக்க முன்னாடி இருக்கும் யூதர்களை பற்றியது ஆகும்.
அதாவது ஈசா நபி பூமிக்கு திரும்ப வரும்போது உள்ள வேதகாரர்களை பற்றியது ஆகும்... அது கடந்த காலத்தவர்களை குறிக்காது.
இப்படி நம்மிடம் கேட்க காரணம், இவர்கள் குர்ஆனின் மீது போதிய அறிவு இல்லாததே..
உதாரணமாக, நபிகளார்காலத்து யூதர்களிடம், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், ஏன் நபிமார்களை கொன்றீர்கள்? " என கேட்கிறான்.(2:91)
உங்களை ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம் என சொல்கிறது குர்ஆன்.. நபிகளார் காலத்தில் எந்த ஃபிர்அவ்ன் இருந்தான்??
மேகங்களால் உங்களுக்கு நிழல் கொடுத்தோம்... மன்னு ஸல்வாவை உங்களுக்கு இறக்கிவைத்தோம் என கூறுகிறான்.
நபிகளார் காலத்தில் மன்னு சல்வா இருந்ததா??
இல்லையே!!
அந்த யூதர்களின் முன்னோர்கள் அதை செய்தார்கள்.. கிடைக்கப்பெற்றார்கள்... ஒர் குறிப்பிட்ட பிரிவினரே அதை பெற்றாலும், அவர்கள் இனத்தில் யூதர்கள் ஆவர். அதனால் தான் இனத்தில் யூதர்களான நபிகளார் காலத்து யூதர்களிடம் அவ்வாறு கூறப்படுகிறது.
அதேபோன்று தான், ஈசா நபி வரும்போது உள்ள யூதர்கள் இனத்தால் வேதக்காரர்களில் அடங்குவதால், வேதக்காரர்களில் எவரும் அவரது மரணத்துக்கு முன்னாடி அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள் என கூறப்படுகிறது.
இவற்றின்படி ஈசா நபி மரணிக்கவில்லை என தெளிவாக காட்டப்படுவதால், அதற்கு முரண்படும்விதமாக தவஃப்பாவை மொழிபெயர்ப்பது கூடாது.
-------
5:116-117 இலுள்ள தவஃப்பாவும் இதே கருத்தில் அமைந்ததாகும்!!
👇👇
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.
(அல்குர்ஆன் : 5:116)
“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்)....கூறுவார்
(அல்குர்ஆன் : 5:117)
இவ்வசனத்தின்படி, ஈசா நபி அவருடைய சமூகத்திடம் அவர் கைப்பற்றப்படும்வரை சாட்சியாக கண்காணிப்பவராக இருந்ததாகுவும், கைப்பற்றப்பட்ட பின் அல்லாஹ்வே கண்காணிப்பவனாக இருந்ததாகவும் அவர் மறுமையில் கூறுவார் என இவ்வசனம் கூறுகிறது.
அதாவது , அவர் கைப்பற்றப்படும்வரை அவர் பூமியில் வணங்கப்படவில்லை என இவ்வசனம் கூறுகிறது. கைப்பற்றப்பட்ட பின்பே வழிகேடர்கள் அவரை கடவுளென போதித்தனர்.
இவ்வசனத்திலுள்ள தவஃப்பாவும் ஈசா நபியை தூங்கச்செய்து கைப்பற்றிகொண்டதையே குறிக்கிறது.
காதியானிகள் கூறுவதுபோல மரணத்தை குறிப்பதாக கூறினால், அது வரலாற்று பிழை ஆகும்....
ஏனெனில் காதியானிகளின் நம்பிக்கைப்படி ஈசா நபி 120வது வயதில் மரணித்தார் என்பதாகும்... அதன்படி கி.பி. 120வரை கிறிஸ்தவத்தில் வழிகேடு ஏற்பட்டிருக்க முடியாது... ஆனால் உண்மையில் கிறிஸ்தவர்களில் சில பிரிவினர் கி.பி. 120க்கு முன்னரே வழிபட துவங்கிவிட்டனர்.
மேலும் மிர்சாவே ஒப்புக்கொள்கிறார்.. இயேசுவின் மார்க்கத்தில் அவரை கடவுளாக்கியது பவுல் என்றும்,
அதேபோல 5:116-117க்கு விளக்கமாக ,ஈசா நபி மரணிக்க முன் அவர் வணங்கப்படவில்லை என மிர்சா கூறுகிறார்.
ஆனால் அது வரலாற்று பிழை..
இறைவன் வரலாறில் கோட்டை விடுவானா?? பொய்யர் மிர்சாவும் காதியானிகளும் விடுவார்களா??
ர
எனவே அவர்களது உலரல் விளக்கம் தவறானதாகும்..
உண்மையில் ஈசா நபி தூங்கசெய்யப்படு கைப்பற்றப்பட்டார் என்பதே சரியாகும்!!
--------------------------------------------
5. உமக்கு முன்னர் யாருக்கும் நிலையான வாழ்வை நாம் கொடுக்கவில்லை என்ற வசனத்திற்கு இது முரணானதா??
👇👇
(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
(அல்குர்ஆன் : 21:34)
காதியானிகள் நினைப்பதுபோல இதில் எந்த முரணும் இல்லை!!!
ஏனெனில் ஈசா நபி பூமியில் மரணமேயில்லாமல் வாழ்வார் என நாம் கூறவுமில்லை அவ்வாறு குர்ஆன் கூறவுமில்லை!!! மாறாக அவர் பூமிக்கு வந்து 40 வருடம் வாழ்ந்து மரணிப்பார் என்றே ஹதீஸில் கூறப்பட்டபடி நம்புகிறோம்!!
இதில் எந்த முரணும் இல்லை!!!
--------------------------------------------
6. முஹம்மது நபியிற்கு முன் சென்ற தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டார்கள் என குர்ஆன் கூறுகிறதா??
👇👇
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
(அல்குர்ஆன் : 3:144)
இதில் அனைத்து நபிமாரும் மரணித்துவிட்டனர் என்ற அர்த்தமே இல்லை!!
நபிகளாருக்கு முன் ரசூல்மார் பலர் சென்றுவிட்டனர் என்பதே இதன் அர்த்தம்...
ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பது இதற்கு முரணாகாது... ஈசா நபியும் இப்போது பூமியில் இல்லை!! அவரை இறைவன் தூங்கவைத்து தன்பக்கம் கைப்பற்றி உயர்த்திகொண்டான்....
குறிப்பு
இவ்வசனம் இறங்கியபோது முஹம்மது நபி மட்டுமே பூமியில் நபியாகவும் இறுதி நபியாகவும் இருந்தார்! ஈசா நபி பூமியில் இருக்கவில்லை!!
இவ்வசனத்தை அபூபக்ர் (ர) நபிகளார் மரணித்தபோது ஓதிக்காட்டியதற்கு காரணம்,,
இவ்வசனம் முஹம்மது நபி மரணிப்பார் என்று கூறும் வசனமாகும்.. அதனால் தான் அப்படி ஓதிகாட்டினார்கள்.
அதாவது " அவர் கொல்லப்பட்டாலோ மரணித்தாலோ?" (3:144)
"முஹம்மது நபியை வணங்கியோர் அறிந்துகொள்ளட்டும், அவர் மரணித்துவிட்டார்" என்று அபூபக்ர் (ர) சொன்னதன் அர்த்தமானது,,
காதியானிகள் சொல்வதுபோல "மரணிக்கவில்லை என்று நம்பினால் அது வணங்கியதற்கு சமம்" என்பதோ அல்லது வழிகெட்ட மிசனரிகள் சொல்வதுபோல "முஹம்மது நபியை மக்கள் வணங்கினார்கள்" என்பதோ அல்ல!!
மாறாக, முஹம்மது நபிக்காக அஞ்சி இஸ்லாத்தில் இருந்தோரையே இது குறிக்கிறது... அவர்கள் பிறகு மதமாறி சென்றுவிட்டனர்...
இவ்வசனத்திற்கும் ஈசா நபியின் மரணம் என்பதற்கும் சம்பந்தமே இல்லை!!
மேலும் குறிப்பாக "ஃகலா " என்றால் மரணம் என்று அர்த்தம் வந்தால்,,
35:24 ".. வயின் மின் உம்மதின் இல்லா #ஃகலா ஃபீஹா நதீர்"
காதியானி மொழிபெயர்ப்புப்படி பார்த்தால், "எச்சரிப்பவர் அதில் மரணிக்காத எந்த சமூதாயமும் இல்லை" என்று வரும்..
இப்படி மொழிபெயர்ப்பது தப்பு ஆகும்... அதே வார்த்தை தான் 3:144இலும் வருகிறது.
கடந்து சென்றுவிட்டனர் என்பதே (கத் மழத்) அதன் அர்த்தம்.
ஒரு பேச்சுக்காக மரணம் என வைத்துக்கொண்டாலும்,
அதில் உள்ள "அர்ருசுலு" என்பது எல்லாரையும் உள்ளடக்குமா??..
அப்படி இருக்கவேண்டிய அவசியமே இல்லை..
"அல்" என வந்தாலே அனைவரையும் உள்ளடக்குவர் என பிதற்றுவார்கள் இந்த பொய்யர்கள்.
ஆனால், அதே குர்ஆனில் "வயக்துலூன அந்நபிய்யீன பிஃகைரில் ஹக்" -அவர்கள் நபிமார்களை நியாயமின்றி கொன்றார்கள் (2:61)
காதியானிகளின விளக்கப்படி பார்த்தால், ஈசா நபி ஆதம் நபி நூஹ்நபி ஆகிய எல்லோரையும் யூதர்கள் கொன்றார்கள் என கூற வேண்டிவரும்..
இவர்களுகு அலிஃப்லாம் அல்ஜின்ஸிய்யா பற்றி அறிவில்லாமல் தான் இப்படி உலருகிறார்கள்..
எனவே அவர்களின் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை
3:144 உண்மையில் சொல்லவருவது என்ன?
முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர். அவருக்கு முன்னர் பலதூதர்கள் சென்றுவிட்டனர்- அதாவது முகம்மது நபி முதலாவத தூதர் அல்ல.. முன் சென்ற தூதர்களின் வரிசையில் வந்த மனித தூதர் என்பதை கூறுகிறது.
இதில் காதியானிகளுக்கு சார்பாக எதுவும் இல்லை
குறிப்பு: ஈசா நபி உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் சிர்க் (இணைவைப்பு) என மூடத்தனமாக கூறும் காதியானிகளின் தலைவர் மிர்சாகுழாம்,,
"இவர் தான் அல்லாஹ்வின் வாளிபன் மூஸா. அவர் மரணிக்கவில்லை! வானத்தில் உயிருடன் இருக்கிறார் என நம்புவதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியிருக்கிறான்" என சொல்லியுள்ளார்!!
அவர்களின் வாதப்படி மிகப்பெரிய முஷ்ரிகாக மிர்சா குழாமே இருக்கிறார்!!!
இதை கள்ளத்தனமாக சமாளிப்பதற்கு,
"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படனோரை மரணித்தோர் என கருதாதீர். அவர்கள் தம் இறைவனிடம் உயிரோடுள்ளார்கள்" என்ற வசனத்தை ஆதாரமாக காட்டுகிறார்கள்.
உண்மையில் இவ்வசனம் அவர்கள் மரணித்தனர் கொல்லப்பட்டனர் என்பதை மறுக்கவில்லை!! மாறாக மரணித்தவர்களாகவே அவர்கள் தொடர்ந்து இருக்கமாட்டார்கள். பறவையின் வடிவில் சுவர்க்கத்தில் சந்தோசமாக மறுமைவரை இருப்பார்கள் என்பதையே சொல்கிறது.
"லம் யமூதூ --அவர்கள் மரணிக்கவில்லை" என குர்ஆன் கூறவில்லை..
ஆனால் மிர்சாவோ , மூசா நபியை "லம் யமுத்-- அவர் மரணிக்கவில்லை" என அவதூறாக சொல்லியுள்ளார்.
இவ்விரண்டும் சமமாகாது.... எனவே மிர்சாகுழாமினதும் காதியானிகளதும் வாதப்படி மிர்சா குழாம் மிகபெரிய முஷ்ரிக் ஆவார்..
###
Comments
Post a Comment