ஈசா நபி மரணிக்கவில்லை (ஹதீஸ் ஆதாரம்)! காதியானிகளுக்கு மறுப்பு 3
ஈசா நபியின் மரணிக்கவில்லை (ஹதீஸ்களில் இருந்து)
காதியானிகளுக்கு மறுப்பு 3
------------------------------------------------------------------முந்திய பகுதியில் ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்களை பார்த்ததோடு , காதியானிகள் ஈசா நபி மரணித்துவிட்டார் என்று பிதற்றுவதற்கு ஆதாரமாக எடுத்வைக்கும் வசனங்களின் விளக்கத்தையும் பார்த்தோம்.
இப்பகுதியில் ஸஹீஹான ஹதீஸ்களில் ஈசா நபியின் வருகை பற்றி உள்ள தகவல்களை பார்ப்போம்:
1. ஈசா நபி தஜ்ஜால் வந்து நாற்பதாவது நாளில் , இரண்டு வானவர்களின் இறக்கைகளில் கையை வைத்தவராக டமஸ்கஸிற்கு கிழக்கு பகுதியிலுள்ள வெள்ளை மினாராவில் இறங்குவார்:
👇👇
5629. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் .......
பின்னர், அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து, அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி,அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளிவிட்டு (அவ்விரண்டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார்.
இதற்கிடையே, மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களை அல்லாஹ் (பூமிக்கு) அனுப்பி வைப்பான். அவர் (சிரியாவின் தலைநகர்) ”திமஷ்க்” (டமாஸ்கஸ்) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார்.
அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரு ஆடைகளை அணிந்திருப்பார். அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும்; தலையை உயர்த்தினாலோ வெண்முத்தைப் போன்று நீர்த்துளி வழியும். அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் (அதாவது அவரை நெருங்கும்) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான். அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும்.
பின்னர் ஈசா (அலை) அவர்கள் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள். இறுதியில், (பாலஸ் தீனத்திலுள்ள) ”லுத்து” எனும் நகரத்தின் தலைவாயிலருகே அவனைக் கண்டு, அவனைக் கொன்றொழிப்பார்கள். பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவர்களின் முகங்களை(ப்பரிவோடு) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார்.
இதற்கிடையே, ஈசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், ”நான் என் அடியார்கள் சிலரை வெளி வரச் செய்துள்ளேன். அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது. எனவே, (முஸ்லிமான) என் அடியார்களை (சினாயிலுள்ள) ”தூர்” மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள்” என்று (வஹீ) அறிவிப்பான்........
ஸஹீஹ் முஸ்லிம் 5629
அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
இந்த ஹதீஸ் ஈசா நபி இன்னும் மரணிக்கவில்லை என்பதையும் வானத்திலிருந்து இரண்டு வானவர்களின் இறக்கைகளில் கையை வைத்தவராக இறங்குவார்.. தஜ்ஜால் என்ற மனிதனை கொல்வார் என கூறுகிறது!!
--------------------------------------------
2.. முஸ்லிம்களின் இமாம் (அல்மஹ்தி) முஸ்லிம்களிலுருந்து இருக்கும்நிலையில் ஈசா நபி இறங்குவார்.
👇👇
244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுகை நடத்தும்) இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈசா)உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 244
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
247. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், ”வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!” என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், ”இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்” என்று கூறிவிடுவார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் 247
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
--------------------------------------------
3.ஈசா நபி முஸ்லிம்களை வழிநடத்துவார்.. அதாவது குர்ஆன் மற்றும் நபிகளாரின் சுன்னா முறைப்படி வழிநடத்துவார்..
👇👇
246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக இருந்தால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்களிடம் நான், ”அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு இமாமாக இருக்க (மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால்...)” என இடம்பெற்றுள்ளதே?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் ”மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால்...” என்பதன் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். நான், ”நீங்களே கூறுங்கள்!” என்றேன். அப்போது அவர்கள், ”உங்களுடைய இறைவனின் வேதத்தின்படியும் உங்களுடைய நபியின் வழிமுறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார் என்று பொருள்” என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 246
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
--------------------------------------------
4. ஈசா நபி இறங்கிவந்து பன்றியை கொல்வார். சிலுவையை உடைப்பார்.. ஜிஸ்யாவை வாங்க மறுப்பார்.. உலகில் செல்வம் பெருகும்!!
👇👇👇
243. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா, உங்களிடையே) நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; அப்போது (உயர்ந்த செல்வமான) ஒட்டகங்கள் அப்படியே விடப்படும். அவற்றை யாரும் தேடி அலையமாட்டார்கள். (அந்த நேரத்தில் மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் போட்டி பொறாமையும் அகன்றுவிடும். செல்வங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 243
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
ஜிஸ்யாவை வாங்க மறுப்பார் என்றால்,, இஸ்லாத்தை தவிர வேறு எந்த மதமும் அப்போது உலகில் இருக்காது... அனைவரும் ஈசா நபியுடன் சேர்ந்து முஸ்லிம்களாகிவிடுவர்.
சிலுவையை உடைப்பார் என்பது கிறிஸ்தவம் முடிவுக்கு வந்துவிடும் என்பதை குறிக்கும்.. அப்போது கிறிஸ்தவம் இருக்காது.
பன்றியை கொல்வார் என்றால் அவராக காடுகாடாக போய் கொல்வார் என்பதல்ல... அவர்கள் இருக்கும் இடங்களிலுள்ள பன்றிகள் இல்லாதொழிக்கப்படும்..
மேலும் அக்காலத்தில் மனிதர்களிடையே எந்த பகைமையும் இருக்காது!!! என தெளிவாக ஹதீஸ் கூறுது
அல்லாஹு அஃலம்!!!
--------------------------------------------
5.ஈசா நபி பூமிக்கு வந்த பின் ஹஜ் உம்ரா செய்வார்.!!
👇👇👇
2403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா - மதீனா இடையே உள்ள) ”ஃபஜ்ஜுர் ரவ்ஹா” எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ”முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக!” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக” என்று கூறினார்கள் எனமேற்காணும் ஹதீஸ் துவங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஸஹீஹ் முஸ்லிம் 2403
அத்தியாயம் : 15. ஹஜ்
இந்த ஹதீஸ்களின்படி இன்னும் ஈசா நபி உயிரோடு உள்ளார் என்றும் மரணிக்கவில்லை என்றும் திரும்ப பூமிக்கு வந்து மரணிப்பார் என்பதையும் காட்டுகிறது.
அவர் 40 வருடம் வாழ்ந்து மரணிப்பார் என அபூதாவூதில் ஹதீஸ் உள்ளது.
மேலும் அவர் இமாம் மஹ்தியிற்கு பின்னாலிருந்து தொழுவார் என்பதையும் ஹதீஸ்கள் கூறுகின்றன... அதை இமாம் மஹ்தி பற்றிய பதிவில் எழுதியுள்ளோம்.
மேலும் தஜ்ஜால் என்பவன் தனி நபரான வாளிப மனிதன் என்றும் யஃஜூஜ் மஃஜூஜ் என்போர் குழப்பக்கார கடுமையான மனிதர்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன..
காதியானிகள் கூறுவதுபோல, புகையிரதம் தஜ்ஜால் அல்ல...
இவர்களின் தலைவர் ஹஜ் உம்ரா எதுவும் செய்யவில்லை
--------------------------------------------
6.மிஃராஜின்போது நபிகளார் ஈசா நபியை இறந்த நபிமார்களுடன் கண்டது , அவர் மரணித்தார் என்பதற்கு ஆதாரமா??
நிச்சயமாக இல்லை!!
அங்கு நபிகளார் உயிரோடு இருந்தார் அனைவரும் இறந்தோர் அல்ல...
இறைவனுக்கு இது இலகுவான ஒன்றே... இதற்கு இறந்திருக்கவேண்டிய அவசியமில்லை!!
வேடிக்கை என்னவென்றால், காதியானிகள் மூசா நபி மரணிக்கவில்லை என நம்பும்படி மிர்சாகுழாமினால் ஏவப்பட்டுள்ளனர்.
மிஃராஜில மூசா நபியையும் நபிகளார் கண்டார்களே!! அவர்களது லொஜிக் அடிப்படையில் அவர்களே முறண்படுகிறார்கள்!!
--------------------------------------------
7.வானத்திற்கு ஒருவரை உயர்ந்திக்கொள்வது அல்லாஹ்வின் தூய்மைக்கு எதிரானதா??
பதில்:
நிச்சயமாக இல்லை!! அது அல்லாஹ்வின் வல்லமை!!
காதியானிகள் குறிப்பிடும் 17:90-93 வசனங்கள், அவை மனிதருக்கு செய்ய சக்தி கிடையாது.. அல்லாஹ்வாலேயே முடியும் என்று கூறும் வசனமாகும்!!
இதற்கும் இவர்களது வழகெட்ட நம்பிக்கைக்கும் சம்பந்தமே இல்லை!!
--------------------------------------------
8.ஈசா நபி 120வது வயதில் மரணித்தார் 150வது வயதில் மரணித்தார் என்பதுபோன்ற கட்டுக்கதைகள் அனைத்தும் பலவீனமானவை போலியானவை ஆகும்!!
--------------------------------------------
எனவே ஈசா நபி மரணித்தார் என நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றை நிராகரிப்பதாகும்!!!!!
Comments
Post a Comment