ஈசா நபி மரணிக்கவில்லை! குர்ஆனை திரிப்போருக்கு பதில் மறுப்பு 4
ஈசா நபி மரணிக்கவில்லை!
குர்ஆனை திரிக்க முற்படுவோருக்கு பதில் 4
-----------------------------------------------------------------காதியானிகளிக்கி வேலையே குர்ஆனை திரிப்பது தான்..
குர்ஆனில் தெளிவாக ஈசா நபியை அல்லாஹ் தன் பக்கம் உயர்த்திகொண்டான் என இருக்கும்போதும் அதை திரித்து சம்பந்தமே இல்லாத வசனங்களுடன் மோதவிட்டு அவரை எப்படியாவது மரணிக்க செய்ய பார்க்கிறார்கள். காரணம்,, அவர் மரணித்தார் என கூறினால் தானே மிர்சா உண்மையாளர் ஆக முடியும்? அதுக்காக தான் இந்த தில்லுமுல்லு
இவ்வசனங்களை நாம் பார்ப்போம்.
1. தவஃப்பா (5:117) மற்றும் முதவஃப்பீக (3:55) என்பவற்றை பதிவிலேயே பதிந்துள்ளேன். எனவே அதை திரும்ப பதியல.
பார்க்க (https://answeringqadianism.blogspot.com/2020/01/2.html?m=1
)
-----------------------------------------------------------------
2. (16:20-21)
அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவர்கள் இறந்தவர்கள் உயிருடன் இல்லாதவர்கள்.-
இவ்வசனத்திற்கும் ஈசா நபியிற்கும் சம்பந்தமே இல்லை.. இப்ராஹீம் நபி போன்றவர்களுக்கும் சிலைவைத்து வணங்கினர் மக்கா காஃபிர்கள்.. அவர்களையே இது குறிப்பிடுகிறது
மேலும் சில காஃபிர்கள் மலக்குகளை வணங்கினர். இவ்வசனத்தை இதனுடன் மோதவிட்டு, மலக்குகளும் மரணித்துவிட்டனர் என காதியானிகள் வாதிடுவார்களோ தெரியல.
இவ்வசனம் கிறிஸ்தவர்களை குறித்து பேசவே இல்லை.
அப்படி பேசும் குர்ஆன் 5:75 இல்கூட , அவர் இறந்துவிட்டார் என சொல்லாமல், சாப்பிடுபவராக இருந்தார் என்றே அல்லாஹ் கூறுகிறான்...
இறந்திருந்தால், இறந்தவர் உயிருடனில்லை இவர் கடவுளா என கேட்டிருப்பான்..
இதுவே அவர் மரணிக்கவில்லை என்பதற்கு ஆதாரம்.
-----------------------------------------------------------------
3.(19:31)
நான் உயிரோடிருக்கும் காலமெல்லாம் தொழுகையை நிலைநாட்டும்படியும் ,சகாத் கொடுக்கும்படியும் வசிய்யத் செய்துள்ளான்-
இவ்வசனத்தின்படி ஈசா நபி பூமியில் சகாத் கொடுக்காததால், தொழாததால் அவர் மரணித்துவிட்டார் என காதியானிகள் வாதம் வைக்கிறார்கள்.
ஆனால் இது இதற்கு ஆதாரமே இல்லை!!
இவ்வார்த்தையை ஈசா நபி சொன்னது குழந்தையாக இருக்கும்போது ஆகும்..
அப்போது அவர் தொழவுமில்லை.. சகாத் கொடுக்கவுமில்லை..
அப்படியானால் குழந்தையிலேயே உயிருடன் இல்லாதவராக இருந்தாரா?
தூங்கிக்கொண்டிருக்கும்போது ஈசாநபிக்கு தொழுது சகாத் கொடுக்க இயலுமா??
அப்படியானால் ஈசா நபி தூங்கும்போதெல்லாம் முற்றாக மரணித்துவிட்டாரா??
ஈசா நபியை அல்லாஹ் தவஃப்பா செய்து அதாவது தூங்கவைத்து உயர்த்திகொண்டதால்,,, அவருக்கு அது கடமையில்லை!!
சிறுவயதில் என்ன நிலையோ அதே போன்றே இப்போதும்..
-----------------------------------------------------------------
4. (19:33)
நான் பிறந்த நாளிலும் இறக்கும் நாளிலும் உயிர்பெற்றெழுப்பபடும் நாளிலும் என்மீது அஸ்ஸலாம் உண்டாகட்டும்.-
இவ்வசனத்தில் ஈசா நபி மரணிப்பார் என்று தான் உள்ளது.. மரணித்துவிட்டார் என இல்லை..
மறுமை நெருங்கும்போது வந்து தஜ்ஜாலை கொன்றுவிட்டு 40 வருடம் வாழ்ந்து மரணிப்பார்.
இதுவே இவ்வசனம் கூறுவது
-----------------------------------------------------------------
5. (21:34)
உமக்கு முன்னர் யாருக்கும் நிலையான வாழ்க்கையை கொடுக்கவில்லை-
ஈசா நபி நிலையாக வாழ்வார் என நாம் சொல்லவில்லை...
பூமியில் வந்து அவர் மரணிப்பார் என்றே சொல்கிறோம்..
ஆனால் மிர்சா குலாம் ,
இவர் தான் அல்லாஹ்வின் வாளிபன் மூசா
... இவர் வானத்தில் உயிரோடுள்ளார். மரணிக்கவில்லை (லம் யமுத்).. மரணித்தவர்களில் அவர் இல்லை. (நூருல் ஹக் 68-69) என சொல்கிறார்
மூசா நபிக்கு நிலையான வாழ்க்கையை கொடூத்ததாக குர்ஆனையே மறுப்பது காதியானிகளே..
ஈசா நபி மரணிப்பார் என்றே நாம் நம்புகிறோம்.
-----------------------------------------------------------------
6. (89:28)
உன் இறைவனிடம் திருப்தியடைந்த நிலையலும் திருப்திகொள்ளப்பட்டநிலையிலும் மீள்வாயாக!-
இவச்சனமும் ஈசா நபி மரணித்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை..
ஈசா நபி மரணிக்கும்போது சலாமத்தாக பொருந்திகொள்ளப்பட்ட நிலையில்தான் மரணிப்பார்.
ஆனால், காதியானி வாதப்படி , மூசா நபியின் நிலை தான் விசித்திரம்.. (நூருல் ஹக் 68-69)
இதிவும் ஆதாரமில்லை.
-----------------------------------------------------------------
7.(3:158)
நீங்கள் மரணித்தாலோ கொல்லப்பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்-
இவ்வசனத்திற்கும் ஈசா நபி மரணித்தார் என அடிச்சுவிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!
ஈசா நபி மரணித்த பின்னால் அவரும் அல்லாஹ்விடம் மறுமையில் ஒன்றுதிரட்டப்படுவார்.
ஆனால் மூசா நபி தான் மரணிக்காமலே வானத்தில் உள்ளார்னு மிர்சா சொல்கிறார் (நூருல் ஹக் 68-69)
-----------------------------------------------------------------
8.(2:115)
கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியது. நீங்கள் எந்த பக்கம் இரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் இருக்கிறது..
இதற்கு ஏதாவது சம்பந்தமுண்டா??
மூசா நபி விசயம் என்னாச்சு??
-----------------------------------------------------------------
9.(7:25)
அதிலேயே வாழ்வீர்கள். அதிலேயே மரணிப்பீர்கள். அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள். -
ஈசா நபி வானத்தில் வாழ போயுள்ளார் என நாம்வசொன்னோமா??
அவர் பூமியில் தான் வாழ்ந்தார். பூமியில் தான் 40 வருடம் வாழ இருக்கிறார். பூமியில் தான் மரணிப்பார்...
மூசா நபி மட்டும் வானத்தில் வாழ்றார்.. பூமியில் மரணிக்கவில்லை.
(நூருல் ஹக் 68-69)
பாவம் காதியானி உலரல்நிலமை
-----------------------------------------------------------------
10. (36:39)
இது சந்திரனை பற்றி பேசுது..
மூசா நபி விசயம்???
-----------------------------------------------------------------
11. (2:37)
பூமியில் உங்களுக்கு குறிப்பிட்டகாலம்வரை தங்குமிடமும்... உண்டு
-
ஈசா நபியும் பூமியில் குறிப்பிட்ட காலம்வரை வாழ்வார்.. பின் மரணிப்பார்..
விண்வெளியில் போய் 6 மாதம் தங்கியவர்களின் நிலமை பற்றி காதியானிகள் என்ன சொல்ல போகிறார்கள்??
முரண்படுது என்பார்களோ??
அப்டியே மூசா நபி விசயம்??
அவர் மட்டும் எப்படிப்பா மரணிக்காமல் வாழ்றாரு (நூருல் ஹக் 68-69)
-----------------------------------------------------------------
12. (25:31)
இவ்வாறே ஒவ்வொரு நபியிற்கும் குற்றவாளிகளிலிரிந்து எதிரிகளை நாம் ஆக்கியருந்தோம்-
.
இவ்வசனம் எப்படி ??
ஈசா நபியிற்கும் எதிரி யூதர்கள் இருந்தனர்... இரண்டாம் வருகையில் தஜ்ஜால் இருப்பான்... அவன் கொல்லப்படுவான்..
அப்படியே மூசா நபிக்கு வானத்திலுள்ள எதிரி யாருனு கொஞ்சம் சொல்றீகளா காதியானிகளா? (நூருல்ஹக் 68-69)
-----------------------------------------------------------------
13. (55:26-27)
அதன்மீது (பூமி) உள்ள அனைவரும் அழிவர். சங்கைமிகுந்த கண்ணியமீகுந்த உமது இறைவனின் முகமே நிலைத்திருக்கும்-
ஈசா நபி அழியமாட்டார் மரணிக்கமாட்டார்னு நாம் சொல்லவில்லை..
அவர் பூமியில் வாழ்ந்து மரணிப்பார்.
அப்டியே மூசா நபி விசயம்??? (நூருல் ஹக் (68-69)
-----------------------------------------------------------------
14. (16:43-44)
உமக்கு முன்னர் மனிதர்களையே அவர்களுக்கி வஹீ அறிவித்து ரசூலாக அனுப்பனோம்.....
-ஈசா நபி மரணிக்கமாட்டார்னு சொல்லவுமில்லை.. அவர் மனிதரில்லை என சொல்லவுமல்லை..
அப்டியே மூசா நபி விசயம்???
-----------------------------------------------------------------
15. (21:101-102)
நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து நன்மை மூந்திவிட்டதோ, அவர்கள் அதிலருந்து (நரகம்) வெகு தொலைவில் இருப்பர். அவர்கள் (நரகத்தின்) கூச்சலை செவிமடுக்கமாட்டார்கள். தாம் விரும்பும் இன்கத்தில் நிலைத்திரிப்பர்-
இவ்வசனமும. இவர்களின் குஃப்ருக்கு ஆதாரமில்லை!!
ஈசா நபியும் மற்றும் நல்லவர்களான வணங்கப்பட்டவர்களும் நரகத்திலிருந்து தூரமாக்கப்பட்டுவடுவர்... மற்ற போலிகடவுள்களிமல அவற்றை வணங்கியோரும் நரகத்தில் நுழைவர்.
இதற்கிம் ஈசாநபி மரணித்தார் என்று சொல்வதற்கும் சம்பந்தமுண்டா??
அப்டியே மூசா நபி????
-----------------------------------------------------------------
16. (30:40)
அல்லாஹ்வாகிய அவனே உங்களை படைத்தான் பின்னர் உங்களுக்கு ரிஸ்க் அளித்தான் பின்னர் உங்களை மரணிக்க செய்கிறான்...-
இவ்வசனமும் மரணம் அனைத்து மனிதருக்கும் உண்டு என சொல்லும் வசனமே!! ஈசா நபி மரணிப்பார் என்றே நாமும் சொல்கிறோம்.
ஆனால. மூசா நபி தான் விதிவிலக்கு கொடுக்கப்பட்டு வானத்தில் உயரோடு உள்ளதாகவும், மரணிக்கவில்லை என்றும் மிர்சா சொல்கிறார்.. (நூருல் ஹக் 68-69)
-----------------------------------------------------------------
17. (22:6)
இது ஏனெனில், அவனே அல்லாஹ் உண்மையானவன். நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்பெற செய்கிறான். அவனே எல்லா பொருளிலும் ஆற்றலுடையவன் என்பதால் ஆகும்.
22:5
.... பின்பு நாமே குழந்தைகளாக உங்களை வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைய செய்கிறோம். அன்றியும் , உங்களில் சிலர் (இடையில்) மரணிப்பவர்களும் இருக்கிறார்கள். அறிவுபெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களை போல ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வசனங்கள் மனிதனுக்கு மரணமுண்டு.. மறுமையில் இயித்தெழுப்பப்படுவான் என சொல்வதாகும்.
ஈசா நபியும் மரணித்து உயிர்த்தெழுப்பப்படுவார்.
ஆனால் மூசா நபி தான் மரணிக்காமல் உள்ளதாக மிர்சா சொல்கிறார். (நூருல் ஹக 68-69)
-----------------------------------------------------------------
18.(4:78)
நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்தாலும் சரியே..
இவ்வசனமும் அனைவரும் மரணிப்பார் என சொல்லும் வசனமாகும்...
ஈசா நபியும் பூமியில் மரணிப்பார்..
ஆனால் மூசா நபி??? (நூருல் ஹக் 68-69)
எனவே காதியானிகளின் உலரல்கள் பொய்யாவதுடன் , மிர்சா குலாம் மிகப்பெரிய பொய்யராகிறார்..
Comments
Post a Comment