Posts

Answering Qadianism- ebook

Image
இஸ்லாத்திலே பல வழிகெட்டபிரிவுகள் தோன்றிக்கொண்டே இருப்பதோடு தம்மையே ஒரிஜினல் முஸ்லிம் என்றும் கூறிக்கொள்கின்றனர் . அந்த வகையில் போலி நபித்துவத்திலே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றே இந்த அஹ்மதிய்யா என்பதாகும் . அஹ்மதிகள் என்போர் இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் மிர்சா காதியானி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு ஆகும் . முஸ்லிம் சமூதாயம் 72 கூட்டமாக பிரிந்ததாகவும் , அதனால் 73 வது கூட்டமாக ஒரு கூட்டத்தை உருவாக்குவதாக நினைத்து ஒரு ஜமாத்தை உண்டாக்கி , மிஷ்காதுல் மஸாபீஹ் என்ற ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையாளர் 73 பிரிவாக பிரிவார்கள் என்ற ஹதீஸுக்கு கீழே நேர்வழிபெற்றவர்கள் யாரென்றால்  ஜமாஅதுல் முகம்மதிய்யா வ அஹ்மதிய்யா என்று  சொல்லியிருப்பதால் , அதனோடு ஒத்துப்போகும் பெயரை தன் பெயரின் இறுதிப்பகுதியிலிருந்து வெட்டி " அஹ்மதிய்யா " என்று பெயரிட்டார் மிர்சா காதியானி . ( அதாவது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் இயக்கம் ஹதீஸிலுள்ள வாசகத்தை தம் இயக்கத்திற்கு பெயராக இட்டது போன்றே இதுவும் 130 வருடங்கள் முன்பே ஐயா செய்துவிட்டார் .) இதேபோன்று இவருக்கு முன்பே சேர் சையது அஹமது என்பவர் தன் தஃப...

ஈஸா நபி இறுதி மரணத்தை அடையவில்லை -ஆதாரங்கள்

  பாகம் 2 : ஈஸா நபி விஷயம்   அஹ்மதிகளின் தலைவரான மிர்சா காதியானி தன்னை நிழல் ரீதியாக புரூஸீ ரீதியாக ஈஸா நபி என்றும் ஒரிஜினல் ஈஸா நபி மரணித்துவிட்டார் என்றும் அவர் திரும்பவும் வரமாட்டார் என்றும்   ஈஸா நபியின் காலத்திலே யூதர்கள் இல்யாஸ் நபி வருவதை எதிர்பார்த்தது போல முஸ்லிம்களும்   ஈஸா நபியின் வருகையை தப்பாக எதிர்பார்க்கிறார்கள்    என்றும் கூறினார். இவர் ஈஸாவாக மாறிய கதை அற்புதமான கதை. அதையும் நாம் இடையிலே பார்ப்போம் !   1. ஈஸா நபி ஒரு மனிதன் அடையும் இறுதி மரணமாகிய மரணத்தை அடையவில்லை   என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்   1.01. குர்ஆன் 4:157-1 59 157. இன்னும் , “ அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம் ” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் ( அவர்களை அல்லாஹ்    சபித்துவிட்டான் ), அவரை அவர்கள் கொல்லவுமில்லை , அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை .   எனினும் , அவர்களுக்கு ( ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற ) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது , இன...