மிர்சா காதியானியும் முகம்மதி பேகமும்!! பொய்யரென நிரூபனமான காதியானி

முகம்மதி பேகமும் மிர்சா காதியானியின் பித்தலாட்டமும்

------------------------------------------------
..

மிர்சா குலாம் மிகம்மதி பூகத்தை மணப்பது பற்றி இவ்வாறு சொன்னார்:

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான்.
இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.
முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.
இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.
மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.
நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.
ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்.
ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள்
இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறா விட்டால்
அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம் என்று மிர்ஸா குலாம் சொன்னார்.
ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவர் எழுதினார்..

இது நிறைவேறவில்லை என எல்லோருக்கும் தெரியும்..

இங்கே மிஸ்டர் பொய்யர் மிர்சா முகம்மதி பேகத்தை திருமணம் முடித்து வைத்ததாக அல்லாஹ்வே சொன்னான் என்று சொன்னார்

இதில் உள்ளது போல

1.அவளை திருமணம் செய்யும்வரை நான் உயிரோடு இருப்பேன் -

ஆனால் மிர்சா அவளை திருமணம் முடிக்கவில்லை. அதற்குள்ளாக 1908ம் ஆண்டு இறந்துவிட்டார்.

2.அவளை திருமணம் செய்யும்வரை அவளது தந்தை உயிரோடு இருப்பார்.-

ஆனால் சுல்தான் முகம்மது என்ற மறுமகனுக்கு திருமணம் முடித்து கொடுத்து 5 1/2  மாதத்தில் அவர் இறந்துவிட்டார்.

3.எனக்கு திருமணம் செய்து தந்தபின் அவளுடைய தந்தை மூன்று வருடத்தில் இறப்பார்.-

திருமணம் முடித்து கொடுக்காமலே இறந்தார்.

4.முகம்மதி பேகத்தின் கணவர் சுல்தான் முகம்மது 2 1/2 வருடத்தில் இறப்பார்-

ஆனால் அவர் அதன்பின் 50 வருடம் வாழ்ந்தார். மிர்சா சொன்னது நடக்கவில்லை.

5.அப்போது நான் முகம்மதி பேகத்தை திருமணம் செய்வேன்-

அது நடக்கவில்லை.

6.அவளை மணப்பேன். அதுவரை அவள் உயிரோடு இருப்பாள்.-

மணக்கவில்லை. அதற்குள் மிர்சா போய்விட்டார்.

இங்கே ஆறு முன்னறிவிப்புகளும் நடக்காமல், மிர்சா குலாம் சொன்னதுபோல அவர் பொய்யர் என்பதற்கு அடையாளமானது.

மேலும் 1890 இல் , இஸாலே அவ்ஹாம் , பக்கம் 198 இல் எழுதுகிறார்.

அல்லாஹ் எனக்கு வஹீயாக " மிர்சாகுலாம் பேகின் மகனாகிய மிர்சா அஹ்மத் பேகின் மூத்த மகள் எனக்கு திருமணம் முடித்துதரப்படுவாள். இந்த மனிதர்கள் பகைமையால் பாதையில் தடைகளை வைப்பார்கள். ஆனால் இறுதியில், அது (என்கூட கல்யாணம்) நடந்தே தீரும்.

அல்லாஹ் அவளை கன்னியாகவோ விதவையாகவோ என்னிடம் கொண்டுவருவான்...

இதை யாராலும் தடுக்க இயலாது.
(இஸாலே அவ்ஹாம் பக்கம் 198)

இங்கே மிர்சா, அல்லாஹ் தனக்கு அவளை கன்னியாகவோ விதவையாகவோ கொண்டுவந்து கல்யாணம் முடித்து தருவான் என போலியாக இட்டுக்கட்டினார்.

ஆனால் இது நடக்காமல் அவர் பொய்யரானார்.

இது நடக்காமல் போக கூடாது என்பதற்காக மிர்சா அவளது தகப்பனை இவ்வாறு பயமுறுத்தினார்,

"மிர்சா அஹ்மத் பேக் தன் மூத்த மகளை எனக்கு திருமணம் முடித்து தர மறுத்தால், அவர் அல்லாஹ்வின் எதிரியாகவும் காஃபிராகவும் ஆகிவிடுவார் என அல்லாஹ்  விதித்துள்ளான். மேலதிகமாக அவனது இறைநிராகரிப்புக்கு தண்டனையாக மிர்சா அஹ்மத் பேக் 3 வருடத்தில் இறப்பார். யார் அவளை மணக்கிறாரோ அவனும் 2 1/2 வருடத்தில் மரணித்துவிடுவான். முகம்மதிபேகம் என் மனைவியாக வருவாள் என அல்லாஹ் விதித்துவிட்டான்.
(தப்லீகி ரிசாலத் , பாகம்1 பக்கம்61)

இங்கே அல்லாஹ் முகம்மதி பேகத்தை மிர்சாவின் மனைவியாக விதித்துவிட்டான் என்றும் போலியாக அடித்துவிட்டார்.

ஆனால் முகம்மதி பேகத்தை கடைசிவரை மணக்கவுமில்லை.

திருமணத்தின் பின் முகம்மதி பேகத்தின் தகப்பன் 5 1/2 மாதத்தில் மரணித்துவிட்டார்.

உடனே மிர்சா எழுதியது,,

மேலும் மிர்சா தனக்கு வஹி வந்ததாக 1893இல் எழுதியது

"இன்னா முஹ்லிகூ பஃலஹா  கமா அஹ்லக்னா அபாஹா, வராத்தூஹா இலைக.

அல்ஹக்கு மிர்ரப்பிக ஃபலா தகூனன்ன மினல் மும்தரீன். வமா நுஅஃக்கிருஹு இல்லா லிஅஜலின் மஃதூத்.

குல் தரப்பஸுல் அஜல வயின்னீ மஅகும் மினல் முதரப்பிஸீன். வயிஃதா ஜாஅ வஃதுல் ஹக்கி ஹாஃதல்லஃதீ கஃத்தப்தும் பிஹீ அம்குன்தும் 'அமீன்"

நிச்சயமாக நாம் அவளது தந்தையை அழித்தது போலவே அவளது கணவனையும் அழித்து, அவளை உம்மிடம் திருப்பிகொண்டுவருவோம்.

உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியம் ஆகவே சந்தேகிப்போரில் ஆகீவிடாதீர்.

நாம் பிற்படுத்துவதெல்லாம் எண்ணப்பட்ட தவணைக்காக தான்.

நீங்கள் தவணையை எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களுடன்  எதிர்பார்ப்பவர்களில் உள்ளேன் என கூறுவீராக!

மேலும் உமது இறைவனின் சத்தியவாக்கு  வரும்போது, இது தானா நீங்கள் பொய்ப்படுத்தியது? அல்லது நீங்கள் குருடர்களாக இருந்தீர்களா? (என கூறப்படும்).
(ஆயினே கமாலாதே இஸ்லாம் 576, ரூஹானி கஸாயின் பாகம்5 பக்கம்576)

இங்கே முகம்மதி பேகத்தின் கணவனை அழித்துவிட்டு அவளை மிர்சாவிடம் கொண்டுவருவதாக இறைவன் சொன்னானாம். இது நடக்குமாம். அதிலே சந்தேகப்பட வேண்டாம் என அல்லாஹ்வே தன்னிடம் சொன்னானாம்.

இது நடக்கும்போது, அவரை நம்பாநவர்களிடம், "நீங்கள் இதையா பொய்ப்படுத்தினீர்கள்? அல்லது நீங்கள் குருடர்களாக இருந்தீர்களா?" என்று கேட்கப்படும் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

இதன்மூலம் மிர்சா பொய்யர் ஆனார் என தெளிவாக புரிகிறது.

அல்லாஹ்வின்மீதே இட்டுக்கட்டிய பொய்யர் என அவர் தெளிவாகிவடுகிறார்.

இது நடக்காததால் காதியானிகள் ஒரு பித்தலாட்டத்தை செய்தார்கள்,

அதாவது சுல்தான் முகம்மது எனும் பேகத்தின் கணவர் இறைவனிடம் தவ்பா செய்துவிட்டார். அதனால் அவர் சாகவில்லை என்றனர்.

இது எவ்வளவு பெரிய வேடிக்கை!!

அக்கணவன் தவ்பா செய்வான் என இறைவனுக்கு முன்கூட்டியே தெரியாதா??

தெரிந்திருந்தும் 2 1/2 வருடத்தில் அவர் இறந்து போவார் த தன் தூதரை பொய் பேச வைத்து பொய்யராக அடையாளம் காட்டிவிட்டானா?

அல்லது மிஸ்டர் பொய்யர் தானாக இட்டுக்கட்டிக்கொண்டாரா??

அதுமட்டுமா என பார்த்தால்,...

பேகத்தை உம்மிடம் கொண்டுவருவோம், கன்னியாகவோ விதவையாகவோ அவள் என்னிடம் கொண்டுவரப்படுவாள். அவள் என் மனைவியாக ஆவாள்.

இப்படி இறைவன் மிர்சாவுக்கு அறிவித்தானா? அல்லது இட்டுக்கட்டிகொண்டாரா?

இறைவன் அறிவித்திருந்தால், இறைவனுக்கு "மிர்சா அவளை மணக்கமாட்டார்" என தெரியாதா?

தெரிந்திருந்தால், இறைவன் பொய்யாக தன் தூதருக்கு வாக்கு கொடுத்தானா?

அல்லது பொய்யர் இட்டுக்கட்டினாரா?

மேலும்,

அவளது தந்தையை அழித்தது போல அவளது கணவனையும் அழித்து, அவளை உம்மிடம் கொண்டுவருவோம் என இறைவன் பொய் சொன்னானா?

இறைவனின் பெயரில் பொய்யர் பொய் சொன்னாரா?

சுல்தான் முகம்மது தவ்பா செய்வார் என தெரிந்திருந்தும்  இப்படி இறைவன் பொய்சொன்னானா?..

அல்லது இறைவனுக்கு எதிர்கால அறிவு இருக்கவில்லையா?

அல்லது பொய்யர் இட்டுக்கட்டினாரா?

நிச்சயமாக பொய்யர் மிர்சா இட்டுக்கட்டி மாட்டிக்கொண்டார்.

அல்லாஹ் மிர்சாவை மஹ்தி அல்ல.. ழால்-வழிகெட்டவர் என அடையாளம் காட்டினான்.

-----

இந்த காதியானிகள் சுல்தான் முகம்மது தவ்பா செய்தார் என அவர் கடிதம் எழுதியதாக அடித்துவிட்டனர்.

இது வழமை போன்ற பொய்யே ஆகும்.

இவர்களாக எழுதிவிட்டு, சுல்தான் முகம்மது எழுதியதாக அடித்துவிடுகின்றனர்.

முகம்மதி பேகத்தின் குடும்பத்தை காஃபிர் குடும்பம் என சொன்னதே மிர்சாவுக்கு பெண் குடுக்காததால் தான்.

முகம்மதிபேகம் தன் 91வயதில் இறக்கும்வரை மிர்சாவை பொய்யர் தஜ்ஜால் என்றே கூறிவந்துள்ளார்.

சுல்தான் முகம்மது உண்மையில் எந்த நிலைப்பாட்டில் இருந்தார் என 1924இல் அவர் கூறியதாக வார சந்திகையில்  எழுதியது:

சுல்தான் முகம்மது இவ்வாறு எழுதினார்:

"மிர்சா காதியானி என் மரண முன்னறிவிப்பை அறிவித்தபோது, நான் அது உண்மையாகும் என நான் நினைக்கவுமில்லை அதைபற்றி பயப்படவும் இல்லை.  நான் என்றும் இன்றும் என் இஸ்லாமிய சேக்மார்களை பின்பற்றுபவனாகவே உள்ளேன்."

கையொப்பம்
சுல்தான் முகம்மது
திகதி 30-03-1924

சாட்சிகள்:
1.மௌலவி அப்துல்லாஹ் -மஸ்ஜித் முபரகின் இமாம்

2.மௌலவி அப்துல்லாஹ் சாப் அம்ரித்சாரி

3.மௌலவி மொலா பக்‌ஷ் -மஸ்ஜித் பட்டியின் கதீப்

4.மௌலவி அப்துல்மஜீத் ரஷீத் -பட்டியில் வசிப்பவர்

5.மிஸ்தாரி முகம்மது ஹுசைன் நக்‌ஷா நவீஸ் பட்டீ

(அஹ்லே ஹதீஸ் அம்ரித்சார் வார சஞ்சிகை,  திகதி அன்று 24/03/1924)

மேலும் 1894 இலேயே முகம்மது சுல்தானிடம் கேட்கப்பட்டது,.

மூன்றாவது கேள்வியாக, உம்மை பற்றி மிர்சாவின் வஹியின் தாக்கம் என்ன? நீங்கள்  பயந்தீர்களா? இல்லையா?

பதில்:
மிர்சா சாஹிபை நான். அன்றும் இன்றும் பொய்யராகவும் மலுப்புபவராகவுமே கருதுகிறேன். நான் முஸ்லிம். அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறேன்.
(இஷாதுஸ் ஸுன்னா  #6, பாகம் 16 பக்கம் 196 - 1894இன் இறுதியில்)

இதெல்லாம் காதியானிகளுக்கு 100 வருடமாக தெரிந்த ஒன்றே...

இதைப்பற்றி அல்லாஹ்வால் உள்ளத்தில் முத்திரையிடப்பட்ட ஹகீம் நூர்தீன் எனும் காதியானி முதல்கலீபா இவ்வாறு சொல்கிறார்,

குர்ஆனில் நம்பிக்கைகொண்டுள்ள சகல முஸ்லிம்களிடமும் நான் ஞாபகப்படுத்துவது

அதில் (மிர்சாவின் முன்னறிவிப்பு) கூறப்பட்டவர்களில் அவர்களது சந்ததிகளையும் அதுபோன்றவர்களையும் உள்ளடக்கும்.

அந்த முன்னறிவிப்பில் அஹ்மத் பேகின் மகள் அல்லது மகளின் மகளை உள்ளடக்க முடியாதா?

உங்களுடைய சொத்துபங்கீட்டு சட்டத்தில்  அவர்களின் மகள்களின் மகள்களுக்கு நியதிகளை பிரயோகிக்க மாட்டீர்களா?

மிர்சாவின் சந்ததிகள் அவரது வாரிசு இல்லையா?....
(Review of religions, vol 8, no 726, June & July 1908 , page 279)

இங்கே ஹகீம் நூர்தீன் மிர்சாவின் நிறைவேறாத பொய்யை எவ்வாறு சமாளிக்கிறார்??

அது மீர்சாவுக்கு நடக்காததால் மிர்சா பொய்யராகமாட்டாராம்.... அவரது ஆண்வாரிசிக்கும் முகம்மதிபேகத்தின் பெண் வாரிசுக்கும் இது நடப்பதால் நிறைவேறலாமாம்!!

இந்த அளவுக்கு சிந்திக்க இயலாதவராக ஹகீம் நூர்தீன் உள்ளார்.

அதாவது அங்கே மிர்சா சொன்னது சொத்துபங்கீட்டு மேட்டரா? அவரது உண்மைத்தன்மைக்கு ஆதாரமாக முகம்மதி பேகத்தை கல்யாணம் முடிப்பதா??

அல்லாஹ் கல்யாணம் பண்ணி தருவேன் என மிர்சா தனக்கு சொன்னாரா? இல்ல தன் சந்ததிக்கு சொன்னாரா??

முகம்மதி பேகத்தின் கணவர் சாவார் என சொன்னாரா அல்லது பேத்தியின் கணவன் சாவதாக சொன்னாரா?

எவ்வளவு மடத்தனமான மக்களாக இந்த மக்கள் உள்ளார்கள்.

மிர்சா சொன்னபடி நடக்காததால் அவர் பொய்யர்.

இறைவன் மேல் இட்டுக்கட்டினார்.

மஹ்தி அல்ல.. ழால் என தெளிவாகிறது.

வேடிக்கையான விசயம் என்னனா, அல்லாஹ் முகம்மதீபேகத்தை மிர்சாவுக்கு திருமணம் முடித்து தந்தபின், சுல்தான் முகம்மது அவளோடு தாம்பத்யத்தில் ஈடுபடுவதை தொடர்ச்சியாகல வைத்துக்கொண்டு தவ்பா செய்தார் என்பது எவ்வளவு வேடிக்கை..

அதுகூட பொய்யே!!

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.