Posts

Showing posts from 2020

கமாலுத்தீன் வதமாமுன்நிஃமா எனும் நூல் ஈசா நபி காஷ்மீரில் மரணித்ததாக சொல்கிறதா?

Image
கமாலுத்தீன் வ தமாமுன்நிஃமா எனும் நூலும் ஈசா நபியின் பெயரில் காதியானி பித்தலாட்டாம் ------------------------------------------------ காதியானிகள் எப்போதும் தமக்கு தேவையான வாதங்களை குர்ஆன்,ஹதீஸ் மற்றும் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்தும் கட்டிங் ஒட்டிங் செய்து வாதிடுவார்கள். இந்த வகையில் ஈசா நபி காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கமாலுத்தீன்-வதமாமுன்நிஃமா எனும் நூல் கூறுவதாக அடித்துவிடுகிறார்கள். இது பச்சை பொய் மற்றும் பாரிய மோசடி ஆகும்.  இதை பார்க்க முன் இப்புத்தகம் பற்றி பார்ப்போம்: இப்புத்தகம் சீஆக்களின் இஸ்னாஅசரிய்யா என்ற பிரிவினரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.  அதில் முகம்மது இப்னு ஹசன் அல்அஸ்கரி (பிறப்பு ஹி.255-258) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி மற்றும் 12ம் இமாம் என கூறுகிறது. அவர் சிறு வயதிலிருந்து மக்களிடமிருந்து ஒளிந்து வாழ்வதாகவும் , மறுமை நெருங்கும்போது ஈசா நபியின் வருகைக்கு முன் மீண்டும் மக்களிடம் தோன்றுவார் என்றும் இந்நூல் கூறுகிறது.   இனி நம் விசயத்திற்கு வருவோம்.  இப்புத்தகம் ஈசா நபி எனும் யூசாஆசாஃப்/யூசாசிஃப் காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கூறுகிறது என காதியானி முல்லாக்க...

மூசாவும் ஈசாவும் உயிருடன் இருந்தால்- காதியானி பித்தலாட்டம்.

மூசாவும் ஈசாவும் உயிருடனிருந்தால் என்னை பின்பற்ற வேண்டும்- காதியானி பித்தலாட்டகாட்டுகிறார்கள் ------------------------------------ மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவர் தன்னை ஈசா நபி என வாதிட்டார். அவரை ஒருகூட்டம் உண்மை என நம்பி நம்முடன் வாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் ஈசா நபியை மரணித்தவராக காட்டுவதற்கே முயற்சிப்பார்கள். அப்படி செய்தால் தானே அவர்களின் மிர்சா காதியானியை ஈசா நபி என நிருவ முடியும்? அதற்காக சம்பந்தமே இல்லாத அல்லது ஆதாரமே இல்லாத தகவல்களை பகிர்ந்து தமக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாக வாதாடுவார்கள். அந்த வகையில் இவர்கள் காட்டும் ஒரு செய்தியை பார்ப்போம்: ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﺣﻴﻴﻦ ﻟﻤﺎ ﻭﺳﻌﻬﻤﺎ ﺇﻻ ﺍﺗﺒﺎﻋﻲ- முசாவும் ஈசாவும் இரு உயிருடன் உள்ளவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவர்களிருவருக்கும் (வேறு எதுவும்) முடியாது./அனுமதியில்லை. (தஃப்சீர் இப்னு கசீர் -குர்ஆன் 3:81க்கான விளக்கத்தில் வரும் செய்தி) இதே செய்தியை ச-அஃரானி, இப்னுல் கையும் உட்பட பலர் தம் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஆனாலும் ஸஹீஹான ஹதீஸ்களில் மூசா நபியை குறித்து மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை...

எக் கலாத்தி கா இஸாலா- பொய்யாகும் காதியானிய கற்பனை

Image
எக் கலாதி கா இஸாலா -"ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" மூலம் பொய்யாக்கப்படும் காதியானிசம் ------------------------------------------------ "எக் கலா(த்)தி கா இஸலா" எனப்படும் உருது நூலின் தமிழாக்கமே "ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" என நூலாகும். இதை உருது மொழியில் மிர்சா காதியானி கி.பி. 1901ல் எழுதியது ஆகும். இது காதியானி கொள்கைக்கே வேட்டுவைக்கும் ஒன்று தான் இந்நூல். மிர்சா காதியானி என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும், மர்யம் என்றும் ஈசா நபி என்றும் நபி என்றும் வாதிட்டவர். இவரை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "ஒரு தஜ்ஜால்" என சொல்லிவிடலாம். இவர் எப்படி நபியாக மாறினார் என்பதை விளக்கும் நூலே இது. அதாவது  -"முகம்மது நபி நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். அவருக்கு பின் நபி இல்லை! ஒருவர் முகம்மது நபிக்கு பின் தன்னை நபி என யாருக்கும் சொல்லமுடியாதாம். ஆனால் ரசூலில் ஃபனா ஆகினால் மட்டும் விதிவிலக்காம்." (பக்கம் 8) "இப்படி முகம்மது நபியில் ஃபனாவாகி அதனால் நபித்துவம் மெற்றால், அவர் முகம்மது நபியின் நுபுவ்வத்தை தான் பெறுகிறார். (அ...

இமாம் மஹ்தியும் ஈசா நபியும் ஒரே நபரா? -காதியானி பித்தலாட்டம்

இமாம் மஹ்தியும் வரக்கூடிய ஈசா நபியும் ஒருவரா? - காதியானி பித்தலாட்டத்திற்கு பதில்: ------------------------------------------------ நபிகளார் தம் குடும்பத்திலிருந்து  ஒரு ஆட்சியாளர் வருவார் , அவர் அரபுகளை ஆட்சி செய்வார், பூமியை நீதத்தால் நிரப்புவார் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அவரை அல்மஹ்தி அல்லது இமாம் மஹ்தி என அழைக்கிறோம். அதேபோல ஈசா நபி மறுமை நெருங்கும்போது, தஜ்ஜால் புறப்பட்டு 40 நாட்களின்பின் இரு மலக்குமார்களின் இறக்கைகளில் கைவைத்தவராக இறங்குவார். தஜ்ஜாலை கொல்வார். அவர் ஹஜ் உம்ரா செய்வார். அவர் இந்த உம்மத்தில் தொழுகையில் இமாமத் செய்யமாட்டார். காரணம் அவர் இந்த உம்மத்தில் பிறந்தவர் அல்ல என்பன ஹதீஸ்களில் காண முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் தம்மை இயேசு என வாதிட்டது போலவே, முஸ்லிம் பெயர்தாங்கிகளும் தம்மை ஈசா நபி என வாதிட்டு காஃபிர்களாகி தம் மக்களையும் காஃபிர்களாக மாற்றினர். அந்த வகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபிலுள்ள காதியான் என்ற ஊரில் ஒரு பொய்யர் தோன்றி தம்மை ஈசா, மஹ்தி, கல்கி,புத்தர் என அடித்துவிட்டார்.. ஈசா நபி இந்த உம்மத்தவர் அல்ல என்றும், மஹ்தி இந்த உம்...

நபிகளாருக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டனரா?? (3:144)

நபிகளாருக்கு முன்னுள்ள எல்லா ரசூல்களும் மரணித்துவிட்டார்களா? (3:144)?? - காதியானி பித்தலாட்டம் ------------------------------------------------ وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ   قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌  وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏  முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144) இவ்வசனத்தின்படி, "அர்ருசுலு" என்பதற்கு பல தூதர்கள் ஜான் ட்ரஸ்ட் இப்பட பொதுவாக எல்லா தமிழாக்கங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள...

ஈசா நபியும் காஷ்மீரில் அடக்கப்பட்ட யூசா ஆசாஃபும்

யூசா ஆசாஃபும் ஈசா நபியும் -(கஷ்மீர் கல்லறை) -காதியானி பித்தலாட்டம்!! ------------------------------------------------ மிர்சா குலாம் காதியானி என்பவர் தன்னை வாக்களிக்கப்பட்ட ஈசா என வாதிட்டார். அத்துடன்  அன்னை மர்யமிடம் பிறந்த ஈசா நபி மரணித்துவிட்டதாகவும் கூறினார். இவரை ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டது. மர்யமின் மகன் மரணித்துவிட்டிருந்தால், அவருக்கு கல்லறை இருக்கும் அல்லவா?? அதை சீடர்கள் கேட்பதால் எப்படியாவது சமாளிக்கணும் என அவர் கல்லறைவதேடிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஈசாநபியின் கல்லறை ஜெருசலேமில் இருக்கிறது என சொன்னார். பின்பு சிரியாவில் இருந்த ஒரு காதியானி மௌலவி முகம்மது சயீத் அல்திரப்லிசி என்பவர் அவர் இருக்கும் ஏரியாவில் தான் ஈசா நபியின் கல்லறை இருப்பதாக உறுதிப்படுத்தினார் என கூறி சிரியாவில் தான் கல்லறை இருக்குனு சொன்னார். (இத்மாமுல் ஹுஜ்ஜா 18-19, ரூஹானி கஸாயின் பா-8 பக்-296-297) இதன்பின் கடைசி காலத்தில், மௌலவி நூர்தீன் காஷ்மீரில் இருந்தபோது, அங்கே ஒரு கல்லறையை காண்கிறார். அதை பிரபுவான நபி சாஹிபுடைய கல்லறை என மக்கள் சொன்னார்களாம். அவர் தான் யூஸாஸாஃப் என்றும் ...

இரண்டு ஈசா நபிகள் இல்லை!! இஸ்ராயீலிய ஈசா நபியே வர இருப்பவர்

இரண்டு இப்னு மர்யம் உள்ளனரா? இஸ்ராயீலிய ஈசாவும் வரக்கூடிய ஈசாவும் வெவ்வேறானவர்களா?? ---------------------------------------------------------------------------------------------- காதியானிகள் எப்படியாவது ஈசா நபியை மவ்த்தாக்குவதற்கே பார்ப்பார்கள். இவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால் இவர்களாக விரும்பி எடுக்கும் தலைப்பு "ஈசா நபி மரணித்துவிட்டார்" என்பதாக தான் இருக்கும். இதை வைத்து காலத்தை கடத்திவிடுவார்கள் ஆனால் அவர்கள் நம்பும் ஈசா என கூறும் பொயயர் மிர்சா குலாம் நிரூபிக்க வரமாட்டார்கள். ஈசா நபி உயிருடன் உள்ளார் என நம்புவது சிர்க் என்று சொன்ன மிர்சா குலாம்,, மூசா நபி வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் மரணக்கவில்லை. மரணித்தவர்களில் அவர் இல்லை என நம்புவதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியுள்ளான் என நூருல் ஹக் 68-69 இல் எழுதியுள்ளார்.  இப்படி பொய்யர்களை அல்லாஹ் இலகுவாக அடையாளம் காட்டி தமக்கு தாமே முரண்பட்டுக்கொள்ள வைப்பான். இனி இரண்டு ஈசாக்கள் இருக்கிறார்களா என பார்ப்போம்: --------- நபிகளார் ஒருபோதும் இரண்டு ஈசாக்கள் என்று சொல்லவே இல்லை!!  வரக்கூடிய ஈசாவும் ஏற்கனவே நபியா...