நபிகளாருக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் மரணித்துவிட்டனரா?? (3:144)
நபிகளாருக்கு முன்னுள்ள எல்லா ரசூல்களும் மரணித்துவிட்டார்களா? (3:144)?? - காதியானி பித்தலாட்டம் ------------------------------------------------ وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144) இவ்வசனத்தின்படி, "அர்ருசுலு" என்பதற்கு பல தூதர்கள் ஜான் ட்ரஸ்ட் இப்பட பொதுவாக எல்லா தமிழாக்கங்களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள...