Posts

Showing posts from December, 2020

கமாலுத்தீன் வதமாமுன்நிஃமா எனும் நூல் ஈசா நபி காஷ்மீரில் மரணித்ததாக சொல்கிறதா?

Image
கமாலுத்தீன் வ தமாமுன்நிஃமா எனும் நூலும் ஈசா நபியின் பெயரில் காதியானி பித்தலாட்டாம் ------------------------------------------------ காதியானிகள் எப்போதும் தமக்கு தேவையான வாதங்களை குர்ஆன்,ஹதீஸ் மற்றும் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்தும் கட்டிங் ஒட்டிங் செய்து வாதிடுவார்கள். இந்த வகையில் ஈசா நபி காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கமாலுத்தீன்-வதமாமுன்நிஃமா எனும் நூல் கூறுவதாக அடித்துவிடுகிறார்கள். இது பச்சை பொய் மற்றும் பாரிய மோசடி ஆகும்.  இதை பார்க்க முன் இப்புத்தகம் பற்றி பார்ப்போம்: இப்புத்தகம் சீஆக்களின் இஸ்னாஅசரிய்யா என்ற பிரிவினரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.  அதில் முகம்மது இப்னு ஹசன் அல்அஸ்கரி (பிறப்பு ஹி.255-258) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி மற்றும் 12ம் இமாம் என கூறுகிறது. அவர் சிறு வயதிலிருந்து மக்களிடமிருந்து ஒளிந்து வாழ்வதாகவும் , மறுமை நெருங்கும்போது ஈசா நபியின் வருகைக்கு முன் மீண்டும் மக்களிடம் தோன்றுவார் என்றும் இந்நூல் கூறுகிறது.   இனி நம் விசயத்திற்கு வருவோம்.  இப்புத்தகம் ஈசா நபி எனும் யூசாஆசாஃப்/யூசாசிஃப் காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கூறுகிறது என காதியானி முல்லாக்க...