இறுதிநபித்துவத்தை மறுப்பவர்கள் காட்டும் ஹதீஸ்களும்/நபித்தோழரின் கூற்றுக்களும் விளக்கமும்
இறுதிநபித்துவத்தை மறுப்பவர்கள் காட்டும் குர்ஆனிய வசனங்களும் விளக்கமும் முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (2 2 ) போலி நபித்துவவாதிகளும் அவர்களை பின்பற்றுவோரும் காட்டும் ஆதாரங்களுக்கு மறுப்பு 4 வாதம் 8 : இப்ராஹீம் (எனும் நபியின் கடைசிமகன்) வாழ்ந்தால் ,ஸித்தீக்காவும் நபியாகவும் இருந்திருப்பார். அவர் வாழ்ந்தால் அவரது தாய்மாமன்களான கிப்தியர் விடுதலை பெற்றிருப்பார்கள். ஒரு கிப்தியும் அடியைப்பட்டிருக்க மாட்டார் (இப்னுமாஜா 1511) இதன்படி நபிகளாருக்கு பின் நபி வர முடியும். அதனாலேயே இப்ராஹீம் வாழ்ந்தால் நபியாயிருப்பார் என்று சொன்னார்கள் என்கிறார்கள் அகமதிகள் பதில்: 1. முதலில் இந்த ஹதீஸ் பலவீனமானது. இதில் இடம்பெறும் உஸ்மான் இப்னு இப்ராஹீம் என்பவர் பலவீனமானவர் . 2. இதை ஸஹீஹ் என எடுத்துக்கொண்டாலும், நபிகளாருக்கு பின் புது நபி வரமுடியும் என்பதற்கு இது ஆதாரமாகாது. காரணம், இப்ராஹீம் வாழமாட்டார் என்பதை முன்கூட்டியே அல்லாஹ் அறிந்தவனாவான். அதனாலேயே நபிகளாரை காதமுன்நபிய்யீன் (கடைசி நபியாக) ஆக ஆக்கினான் . அதற்கேற்ப...