இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை!
(16)
இறுதி
நபித்துவம் பற்றி மாமேதைகளின் கருத்துக்கள் 1
|
1.அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் |
|
அல்லாஹ்வின்
தூதரின் காலத்தில் மக்கள் வஹீயின்வாயிலாக தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது
வஹீ நின்றுவிட்டது. இப்போது நாம்
உங்களை பிடிப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாக தெரிபவற்றை
கொண்டே ஆகும். (புகாரி 2641) இதன்மூலம் ஈஸா
நபி வந்து தூர்மலைக்கு ஒதுங்குமாறு வஹீவரும்வரை (முஸ்லிம் 5629 (2937a) வஹீ வராது என
தெளிவாகிறது. |
|
2.அபூஹுரைரா (ர) |
|
அல்லாஹ்வின்
தூதர் அவர்கள் நபிமார்களில் கடைசியானவர் ஆவார். அவரது மஸ்ஜித் மஸஜித்களில்
இறுதியானது ஆகும் (முஸ்லிம் 2694 (1394c), நஸாயீ 694) நபிமார்களில்
இறுதியானவர் முகம்மது நபியாவார். நபிமார்களின் பள்ளிவாசல்களில்
(கஃபா,மஸ்ஜிதுல்அக்ஸா, மஸ்ஜிதுந்நபவீ)
இறுதியானது நபிகளாரின் பள்ளிவாசல் (மஸ்ஜிதுந்நபவீ) ஆகும். இதன்படி ஈஸா நபி புதிதாக பள்ளிவாசல்
அமைக்க மாட்டார். ஆனால் தன்னை நபியாக வாதிட்டவர்கள் தமக்கென பள்ளிவாசல்
கட்டியுள்ளார்கள். |
|
3.உம்மு ஐமன் (ர) ,அபூபக்ர்
(ர) |
|
அவ்வாறே
உம்முஅய்மன் அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது (அபூபக்ர்&உமர்)
இருவரும் "ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்விடம்
இருப்பது அவனுடைய தூதருக்கு சிறந்ததாயிற்றே" என்று கேட்டார்கள். அதற்கு உம்முஅய்மன் "அல்லாஹ்விடம்
இருப்பது அவனது தூதருக்கு சிறந்ததாகும்
என நான் அறியாமல் அழவில்லை. மாறாக வானிலிருந்து வஹீ வருவது நின்றுவிட்டதே!"
என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள்
இருவரும் அழலாயினர். (முஸ்லிம் 4849 (2454), இப்னுமாஜா 1635). இதன்மூலம் ஈஸா
நபி வந்து யஃஜூஜ்மஃஜூஜ்வெளிப்பட்டதும் தூர்மலைக்கு ஒதுங்குமாறு வஹீவரும்வரை (முஸ்லிம் 5629 (2937a) வஹீ வராது என
தெளிவாகிறது |
|
4.இப்னு அபீஅவ்ஃபா (ர) |
|
நான் இப்னு அபீஅவ்பா (ர) அவர்களிடம் நபி
ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் மகன் இப்ராஹீமை பார்த்தீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர்: அவர் சிறுவயதிலேயே மரணித்துவிட்டார். முகம்மது
ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுக்கு பின் நபி இருப்பதாக இருந்தால், அவரது மகன்
வாழ்ந்திருப்பார். ஆனால் அவர்களுக்கு பின் எந்த நபியும் இல்லை (புகாரி 6194) இதன்மூலம்
நபிகளாருக்கு பின் எவரும் புதிதாக நுபுவ்வத் பெற முடியாது என தெளிவாக ஸஹாபி
விளக்கியுள்ளார். |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை!
(17)
இறுதி
நபித்துவம் பற்றி மாமேதைகளின் கருத்துக்கள் 2
|
5.உமர் இப்னு அப்துல் அஸீஸ் |
|
கலீஃபா உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்கள்
கிலாஃபத்தை பொறுப்பேற்ற பின் செய்த குத்பா உரையில் இவ்வாறு கூறினார்:
மனிதர்களே! குர்ஆனுக்கு பின் எந்த வேதமும் இல்லை. முகம்மது(ஸல்)
அவர்களுக்கு பின் எந்த நபியும் இல்லை......
(அல்பிதாயா வந்நிஹாயா 9/199)
https://shamela.ws/book/23708/3029#p1 |
|
6.இமாம்
அபூஹனீஃபா |
|
(இமாம் அபூஹனீஃபாவின் காலத்தில்) ஒரு மனிதன் நுபுவ்வத்தை வாதிட்டு, தன் உண்மைத்தன்மைக்கு
அடையாளம் கொண்டுவருவதற்கு மக்களிடம் அவகாசம் கேட்டான். அப்போது இமாம் அவர்கள்
கூறினார்கள்: எவர் இவனிடம் அடையாளத்தை கேட்கிறாரோ அவர் காஃபிராகிவிட்டார். ஏனெனில்
ஏனெனில், அத்தாட்சியைக் கேட்பது அவன் உண்மையானவனாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது
என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், நபித்துவத்தின் வாசல் மூடப்பட்டுவிட்டது.
மேலும் (அவனிடம் அத்தாட்சி கேட்பது) முஹம்மது (ஸல்) அவர்கள் நபிமார்களின்
முத்திரை என்பதை மறுப்பதாகும்." (மனாகிபுல்
இமாமில்அஃழம் அபீஹனீஃபா 483 ) https://shamela.ws/book/1137/34#p4 |
|
7.இமாம்
தஹாவீ |
|
நபிகளாருக்கு பின்னுள்ள ஒவ்வொரு நுபுவ்வத்
வாதமும் வழிகேடும் மனோஇச்சையும் ஆகும் (ஷர்ஹுல் அகீததித்தஹாவிய்யா 166)https://shamela.ws/book/10549/160#p1 |
|
8.இப்னு
ஹஸ்ம் |
|
வஹீயானது நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்
மரணித்தது முதல் நின்றுவிட்டது. வஹீயானது ஒரு
நபியிற்கே தவிர வேறு யாருக்கும் வராது.(அல்முஹல்லா 1/46)
https://shamela.ws/book/767/26#p2 இதன்படி ஈஸா நபியிற்கு யஃஜூஜ்மஃஜூஜ்
வெளிப்படும்போது தூர்மலையில் போய் ஒதுங்குமாறு வஹீ அறிவிக்கப்படும் (முஸ்லிம் 5629
(2937a)) |
|
9.கஸ்ஸாலி |
|
உம்மத்தானது (நபிமார்களின் முத்திரை மற்றும் என்க்கு பின் நபியில்லை போன்ற) இந்த வாசகங்களிருந்தும் அதன் சூழல்களிலிருந்தும் ஏகோபித்த முடிவைக்கொண்டு விளங்கியிருப்பதாவது: அவருக்கு பின் ஒருபோதும் நபியோ ரஸூலோ இருக்கமாட்டார்கள். இதிலே வியாக்யானத்திற்கோ குறிப்பாக சொல்கிறது ஒன்று ஒதுக்குவதற்கோ இடமேயில்லை. இதை மறுப்பவர் ஏகோபித்தமுடிவையே மறுப்பவராவார் (அல்இக்திஸாத் ஃபில்இஃதிகாத் 137) https://shamela.ws/book/9217/127#p1 |
முகம்மது
நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (18)
இறுதி
நபித்துவம் பற்றி மாமேதைகளின் கருத்துக்கள் 3 முடிவு
|
10.இமாம்
இப்னு தைமிய்யா |
|
முகம்மது (ஸல்) முழு ஸகலைனுக்கும்-அவர்களின் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் அரபிகளுக்கும் அஜமிகளுக்கும்
ரஸூலாக நபிமார்களின் முத்திரையாக- அவருக்கு பின் நபி இல்லை என்று ஆகியதும் ,அடியார்கள்மீது அல்லாஹ்வின் அல்லாஹ்வின் அருட்கொடையியிலுள்ளதாகவும்.... (ஜவாபுஸ்ஸஹீஹ்
5/405) https://shamela.ws/book/170/2235#p2 |
|
11.இப்னு
நஜீம் (ஹி 970) |
|
முகம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள்
நபிமார்களில் இறுதியானவர் என்பதை ஒருவன் அறியவில்லை எனில் அவன் முஸ்லிமே அல்ல. ஏனெனில்
இது அவசியமான அடிப்படைகளில் ஒன்றாகும். (அல்அஷ்பாஹுவந்நழாயிர் 161)
https://shamela.ws/book/1666/149#p6 |
|
12.முல்லா
அலீ காரீ (ஹி 1014) |
|
எங்களுடைய நபி ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்
அவர்களுக்குபின் நபித்துவ வாதம் செய்வது ஏகோபித்த முடிவின்படி குஃப்ர் ஆகும். (மினஹுர்ரவ்ளில்
அஸ்ஹர் 451)
https://archive.org/details/jamia_20161110/page/450/mode/1up |
|
13.அல்காழீ
இயாழ் (ஹி 543) |
|
"அவர் (முஹம்மது ஸல்) - தான்
நபிமார்களின் முத்திரை என்றும், தனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை என்றும்
அறிவித்தார்கள். மேலும், அவர் இறுதி இறைத்தூதர் (காதமுன் நபிய்யீன்) என்றும்,
மனிதகுலம் முழுமைக்கும் தூதராக அனுப்பப்பட்டவர் என்றும் அல்லாஹ்வின்
புறத்திலிருந்தும் (குர்ஆன் வழியாக) செய்தியை வழங்கினார்கள். இந்தச் செய்தியை
அதன் நேரடிப் பொருளிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும், இதில் எவ்வித
தனிவிலக்கோ அல்லது குறிப்பிட்ட பிரிவினரை ஒதுக்குவதோ (தக்ஸீஸ்) கிடையாது
என்பதிலும் ஒட்டுமொத்த உம்மத்தும் (சமுதாயமும்) ஏகோபித்த முடிவைக் (இஜ்மாஃ)
கொண்டுள்ளது. (அஷ்ஷிஃபா பிதஃரீஃபி ஹுகூகில்முஸ்தஃபா 2/285-286)
https://shamela.ws/book/1753/668#p2 |
இவற்றின்படி இஸ்லாமிய உம்மத் நபிகளார் முதல் ஸஹாபாக்கள்
இமாம்கள் என அனைவரும் இறுதி நபித்துவத்தை உறுதிப்படுத்துகிறார்கள். புதிதாக எவரும்
தன்னை நபி என்றோ ரஸூல் என்றோ வாதிட முடியவே முடியாது!!. (இதவல்லாமல் தஃப்சீர் ஆசிரியர்கள் சொன்னதை ஏற்கனவே கூறியுள்ளேன்)
முகம்மது
நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (19)
காதமுன் நபிய்யீன் பற்றி பிரபல அகராதிகள்
|
1.லிஸானுல்
அரப் (لسان العرب)- இப்னு மன்ளூர் (கி.பி. 1290) /ஹி689) |
|
وخاتِمُ كُلِّ شَيْءٍ وخاتِمَته: عَاقِبَتُهُ وآخِرُه. ஒவ்வொன்றினதும் காதிம் (خاتم) மற்றும் காதிமா (خاتمة) என்பது அதன் கடைசியையும் இறுதியையும்
குறிக்கும் (உதாரணமாக ஸூராவின் காதிமா என்றால் அந்த
ஸூராவின் இறுதி) (பாகம் 12 பக்கம் 164)
https://shamela.ws/book/1687/6080#p15 وخِتامُ القَوْم وخاتِمُهُم وخاتَمُهُم: آخرُهم ஒரு கூட்டத்தின் கிதாம் (ختام)
என்பதும் அவர்களின் காதிம் (خاتم)
என்பதும் அவர்களின் காதம் (خاتم)
என்பதும் அவர்களில் இறுதியானவரை குறிக்கும். (பாகம் 12 பக்கம்
164) https://shamela.ws/book/1687/6080#p20 وَخاتَمَ النَّبِيِّين؛ أي آخرهم காதமுன்நபிய்யீன் என்றால் அவர்களில்
இறுதியானவர் (அதாவது இறுதி நபி). (பாகம் 12 பக்கம் 164)
https://shamela.ws/book/1687/6080#p21َ |
|
2.அல்காமூஸுல்முஹீத் (القاموس المحيط) ஃபைரூஸ் ஆபாதீ (கி.பி 1410 ஹி 812) |
|
وـ من كلِّ شيء: عاقِبتُهُ، وآخرَتُه كخاتِمَتِه
وآخِرُ القَوْم كالخاتِمِ:الخاتم، காதமை பற்றி விளக்கும்போது: ஒவ்வொன்றினதும்
முடிவு இறுதியை குறிக்கும். காதிமா என்பதைப்போல. கூட்டத்தின் கடைசியானவரை
குறிக்கும் காதிம் என்பதை போல. (பக்கம் 1099)https://shamela.ws/book/7283/1075#p14 மேலும் தாஜுல்அரூஸ் 32/45
(https://shamela.ws/book/7030/16663#p3) |
|
3.முஃஜமு மகாயீயிஸில்லுஙா (معجم مقاييس اللغة) இப்னு ஃபாரிஸ் (கிபி 1004 ஹி 395) |
|
والنبى ﷺ خاتَمُ الأنبياء؛ لأنّه آخِرُهم. : நபி(ஸல்) அவர்கள் காதமுல்அன்பியா (நபிமார்களின்முத்திரை)
ஆவார். ஏனெனில் அவரே அவர்களில் கடைசியானவர்.https://shamela.ws/book/21710/805#p10 |
|
4.முஜமுல்வஸீத் (நவீன அகராதி) |
|
وَمن كل شَيْء آخِره وَفِي التَّنْزِيل الْعَزِيز
{وَلَكِن رَسُول الله وَخَاتم النَّبِيين (الخاتم) ஒவ்வொன்றினதும் இறுதி, குர்ஆனில் "அவர் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையாதவும்
இருக்கிறார்" (https://shamela.ws/book/7028/218#p22 5.அக்ரபுல்மவாரித் (கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட அகராதி) ( الخاتم والخاتم ) الخاتام و آخر القوم و ما يوضع على الطينة و - عاقبة كل شيء அல்காதம் மற்றும் அல்காதிம் என்றால் முத்திரை,ஒரு கூட்டத்தின் கடைசியானவர்,களிமண்ணில்இடப்படுவது (பண்டையகாலத்தில் ஆவனங்களை சீல் வைப்பதற்காக களிமண்ணில் முத்திரை பதிப்பர்), ஒவ்வொன்றினதும் இறுதி. (இதேபோல பிடரியில் உள்ள குழியையும் குறிக்கும். எதிலுமே சிறந்தவர் என்ற போலியான கருத்து கிடையாது!!) அக்ரபுல்மவாரித் 257 (கீழே 33ம்பக்கம் என போடப்பட்டுள்ளது) (274 of 1526) https://archive.org/details/A9rabalmawarid2017/A9rabalmawarid-1-2/page/n273/mode/1up |
இப்படி பிரபல அகராதிகள் எல்லாம் காதம் என்பதோ காதிம் என்பதோ
கூட்டத்தில் ஒருவரை குறிக்கும்போது அதிலே கடைசியானவரை குறிக்கிறது என்றே
சொல்கின்றன.
இவற்றைவிட முக்கியமாக நபிகளார் "காதமுன்நபிய்யீன்"
என்பதை "எனக்குப்பின் நபி இல்லை" என்று விளக்கியுள்ளார்கள் (பார்க்க
திர்மித் 2219). "காதிமுன்நபிய்யீன்" என்பதையும் இறுதியாக அழகை பூரணப்படுத்துபவராக நபிமார்கள் எனும்கட்டிடத்தின்
எஞ்சியிருந்த ஒரே கல் என்பதன் மூலம்
விளக்கியுள்ளார்கள் (புகாரி 3535)
இப்படி நபிகளாரே இறுதி நபி (இறுதியாக நுபுவ்வத் பெற்றவர்) என்பதை
குர்ஆனும் "நபிமார்களின் முத்திரை" என்பதன்மூலம் கூறி, நபிகளாரும் அதன்
விளக்கத்தை கூறி "எனக்குப்பின் நபித்துவ வாதம் செய்யும் தஜ்ஜால்கள்
தோன்றுவார்கள். எனக்கு பின் நபி இல்லை" என்பதை விளக்கியதோடு, எல்லா
முஃபஸ்ஸிர்களும் (தஃப்சீர் ஆசிரியர்களும்) நபிகளார் இறுதி நபி என்றும் அவருக்கு
பின் நபி இல்லை என்றும் வேறு சிலர் இன்னும் ஆழமாகச்சென்று, "ஈஸா நபியின் வருகையை இதனோடு முரண்பட்டுக்கொள்ள கூடாது. காரணம் அவர் முகம்மது
நபியிற்கு முன்பே நுபுவ்வத் பெற்றவர். (அதாவது நபிகளாருக்கு பின்ளாடி நுபுவ்வத்
பெறவில்லை) என்பதையும் நபிகளாரின் ஷரீஅத்படியே செயற்படுவார்" என்றெல்லாம்
விளக்கியுள்ளார்கள்.
ஸஹாபாக்களோ அபூபக்ர்,உமர்,உம்முஅய்மன் போன்றோர் நபிகளாரின்
மரணத்தோடு வஹீ நின்றுவிட்டது என்றும் அபூஹுரைரா அவர்களோ நபிகளாரை கடைசி நபி அவரது
பள்ளிவாசல், கடைசிப்பள்ளிவாசல் என்று கூறியுள்ளதோடு, உமர் இப்னு அப்துல் அஸீஸ் முதல் எல்லா நல்லறிஞர்களும்
நபிகளாருக்கு பின் நபியில்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
இமாம் அபூஹனீஃபா நபித்துவவாதம் செய்பவன் மட்டும் காஃபிர்
அல்ல. மாறாக அவனிடம் அத்தாட்சியை கேட்பவனும் காஃபிர் என்கிறார். முல்லா காரீ உட்பட
பலர் எங்களுடைய நபியிற்கு பிறகு நபித்துவ வாதம் ஏகோபித்தமுடிவின்படி குஃப்ர் என
தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.
(எமது
ஆதாரம் இதன்மூலம் பூரணமாக நிறைவேறுகிறது)
முற்றும்.
இனி இதுபோன்று வாதம் புரிவோர் குர்ஆன் மற்றும் ஹதீஸ், சில
அறிஞர்களின் கருத்துக்களை வைத்து தஃவீல் பண்ணுவதற்கு முற்படுகிறார்கள். அவ்வாதங்களையும்
அதற்கான மறுப்பையும் காண்போம்:
Comments
Post a Comment