ஈசா நபியின் கப்ரை வணக்கஸ்தலமாக எடுத்துக்கொண்டார்களா?
ஈசா நபியை மரணித்து விட்டதாக சித்தரிப்பதற்கு அகமதிகள் ஹதீஸிலிருந்து காட்டும் அறியாமை வாதமும் நம் பதிலும் -------------------------------- காதியானிகளின் வாதம்: நபிகளார் மரணப்படுக்கையில் இருக்கும்போது, "யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தம் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித்களாக (வனக்கஸ்தலங்களாக) ஆக்கிக் கொண்டார்கள். (புகாரி) இங்கே யூதர்கள் தம் நபிமார்களது கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டது போல கிறிஸ்தவர்களும் தம் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.. ஈசா நபி தவிர வேறு யார் கிறிஸ்தவர்களுக்கு நபியாக வந்தது? ஆகவே ஈசா நபியின் கப்ரை வணக்கஸ்தலமாக எடுத்திருக்க வேண்டும்.. ஆகவே, ஈசா நபி மரணித்து விட்டார். இது தான் இவர்களது வாதம்! நம் பதில்: இதை சில பகுதிகளாக பிரித்து பதில் சொல்கிறோம். 1.யூதர்களுடைய நபிமார்கள் அனைவரும் கிறிஸ்தவர்களுக்கும் நபிமார்கள் தான். யூதர்கள் ஏற்காத ஆனால் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்ட நபிமார்கள் என இங்கே கூறப்படவில்லை! அதனால் ஈசா நபியை தேவையின்றி சொருக வேண்டியதில்லை! 2.யூதர்கள் ஏற்றுக்கொள்ளாத, ஆனால் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்...