இரண்டு ஈசா நபிகள் இல்லை!! இஸ்ராயீலிய ஈசா நபியே வர இருப்பவர்
இரண்டு இப்னு மர்யம் உள்ளனரா?
இஸ்ராயீலிய ஈசாவும் வரக்கூடிய ஈசாவும் வெவ்வேறானவர்களா??
----------------------------------------------------------------------------------------------காதியானிகள் எப்படியாவது ஈசா நபியை மவ்த்தாக்குவதற்கே பார்ப்பார்கள். இவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால் இவர்களாக விரும்பி எடுக்கும் தலைப்பு "ஈசா நபி மரணித்துவிட்டார்" என்பதாக தான் இருக்கும்.
இதை வைத்து காலத்தை கடத்திவிடுவார்கள் ஆனால் அவர்கள் நம்பும் ஈசா என கூறும் பொயயர் மிர்சா குலாம் நிரூபிக்க வரமாட்டார்கள்.
ஈசா நபி உயிருடன் உள்ளார் என நம்புவது சிர்க் என்று சொன்ன மிர்சா குலாம்,,
மூசா நபி வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் மரணக்கவில்லை. மரணித்தவர்களில் அவர் இல்லை என நம்புவதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியுள்ளான் என நூருல் ஹக் 68-69 இல் எழுதியுள்ளார். இப்படி பொய்யர்களை அல்லாஹ் இலகுவாக அடையாளம் காட்டி தமக்கு தாமே முரண்பட்டுக்கொள்ள வைப்பான்.
இனி இரண்டு ஈசாக்கள் இருக்கிறார்களா என பார்ப்போம்:
---------
நபிகளார் ஒருபோதும் இரண்டு ஈசாக்கள் என்று சொல்லவே இல்லை!! வரக்கூடிய ஈசாவும் ஏற்கனவே நபியாக இஸ்ராயீலியருக்கு அனுப்பபட்ட ஈசாவும் ஒரே நபர் என்பதை நபிகளாரின் ஹதீஸ்கள் தெளிவாக உள்ளன.
குர்ஆன் 43:61 இல் , ஈசா நபியை மறுமையின் அத்தாட்சி என்கிறது. அதில் கூறப்படும் ஈசா இஸ்ராயீலுக்கு அனுப்பபட்டவரே.
சரி... இப்போது ஹதீஸ்களை பார்ப்போம்:
ஏற்கனவே அனுப்பபட்ட ஈசா உர்வதிப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ர) அவர்களின் தோற்றத்தை ஒத்தவர் என நபிகளார் கூறியுள்ளார்கள். மறுமை நெருங்கும்போது ஈசா நபியை அனுப்புவான் அவர் உர்வதிப்னு மஸ்ஊதை ஒத்தவர் என்றும் கூறியுள்ளார்கள்.
இந்த இரண்டிலிருந்தும் ஒரே ஈசா தான்.. அவர் உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ என்ற ஸஹாபியை ஒத்தவர் என நபிகளார் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
1) ஈசா நபியின் தோற்றம் ஏனைய நபிமாருடன்:
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻗُﺘَﻴْﺒَﺔُ ﺑْﻦُ ﺳَﻌِﻴﺪٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻟَﻴْﺚٌ، ﻭَﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺭُﻣْﺢٍ، ﺃَﺧْﺒَﺮَﻧَﺎ ﺍﻟﻠَّﻴْﺚُ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺍﻟﺰُّﺑَﻴْﺮِ، ﻋَﻦْ ﺟَﺎﺑِﺮٍ ، ﺃَﻥَّ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗَﺎﻝَ " ﻋُﺮِﺽَ ﻋَﻠَﻰَّ ﺍﻷَﻧْﺒِﻴَﺎﺀُ … ﻭَﺭَﺃَﻳْﺖُ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ - ﻋَﻠَﻴْﻪِ ﺍﻟﺴَّﻼَﻡُ - ﻓَﺈِﺫَﺍ ﺃَﻗْﺮَﺏُ ﻣَﻦْ ﺭَﺃَﻳْﺖُ ﺑِﻪِ ﺷَﺒَﻬًﺎ ﻋُﺮْﻭَﺓُ ﺑْﻦُ ﻣَﺴْﻌُﻮﺩٍ …Qutayba bin Saieed-Layth-Muhammad bin Rumh-al Layth-Abu Zubair-Jabir-Messenger of A
271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்கள் எனக்குக் காட்டப்பட்டனர். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) “ஷனூஆ” குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று உயரமான மனிதராக இருந்தார்கள். மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு (எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
(முஸ்லிம் 271, ஆங்கிலம் 167 book 1,hadith 330)
நபிகளாருக்கு மிஃராஜின்போது நபிமார்கள் எடுத்துகாட்டப்பட்டார்கள்.
அதில் மூசா நபி ஷனூஆ குலத்தை சேர்ந்த மனிதரை போல இருந்தார்கள்
ஈசா நபி உர்வா இப்னு மஸ்ஊத் என்ற நபித்தோழருக்கு நெருக்கமான தோற்றத்தில் இருந்தார்கள்.
இப்ராஹீம் நபி அவர்கள் , முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒப்பானவராக இருந்தார்!!
ஆனால் , அந்த ஹதீசை எப்படியாவது மறுத்து மிர்சா குலாம் ஈசா என நிலைநாட்டுவதற்கு காதியானிகள் எத்தனிக்கிறார்கள்.
இந்த ஹதீசில் வரும் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஸுபைர் என்பவர் அபூஸுபைர் முகம்மது முஸ்ரிக் மக்கி எனும் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர் என காதியானிகள் அடித்துவிடுகிறார்கள். ஆனால் இது அஸ்மாஉல் ரிஜாலின்படி பச்சை பொய் ஆகும்.
இதில் இடம்பெரும் இந்த அபூஸுபைர் என்பவர் முகம்மது பின் முஸ்லிம் பின் தத்ராஸ் ஆவார்.. இவர் நம்பகத்தன்மை மிக்கவர் என்பதோடு இவர்மூலமாக அறிவிக்கப்படும் 4 ஹதீஸ்கள் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று ஹதீஸ்கள் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். (இந்த ஹதீசிலும் அவரிடமருந்து தான் அறிவிக்கிறார்).
எனவே காதியானி வாதம் பச்சை போலி ஆகும்.
2.ஈசா நபி மீண்டும் வரும்போது அவரது தோற்றம்:
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋُﺒَﻴْﺪُ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦُ ﻣُﻌَﺎﺫٍ ﺍﻟْﻌَﻨْﺒَﺮِﻱُّ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑِﻲ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺷُﻌْﺒَﺔُ، ﻋَﻦِ ﺍﻟﻨُّﻌْﻤَﺎﻥِ ﺑْﻦِ ﺳَﺎﻟِﻢٍ، ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﻳَﻌْﻘُﻮﺏَ ﺑْﻦَ ﻋَﺎﺻِﻢِ ﺑْﻦِ ﻋُﺮْﻭَﺓَ ﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮﺩٍ ﺍﻟﺜَّﻘَﻔِﻲَّ، ﻳَﻘُﻮﻝُ ﺳَﻤِﻌْﺖُ ﻋَﺒْﺪَ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦَ ﻋَﻤْﺮٍﻭ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " … ﻓَﻴَﺒْﻌَﺚُ ﺍﻟﻠَّﻪُ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ ﻛَﺄَﻧَّﻪُ ﻋُﺮْﻭَﺓُ ﺑْﻦُ ﻣَﺴْﻌُﻮﺩٍ …
Ubaidullah ibn Mua’dh al Anbari-Abi (from his father)-Sha’ba-Nu’man ibn Saalim-Ya’qub ibn Aasim ibn Urwa ibn Mas’ud al Thaqafi-Abdullah ibn Amr-Messenger of Allah (PBUH)…And
5635. யஅகூப் பின் ஆஸிம் பின் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
....
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜால் என் சமுதாயத்தாரிடையே புறப்பட்டுவந்து, நாற்பதுவரை தங்கியிருப்பான்.
அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள் (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அன்று எந்த இருவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது.
(ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 52 , ஹதீஸ் 5635, ஆங்கிலம் #2940a book 54 hadith 144)
இந்த ஹதீசில் ஈசா நபி தஜ்ஜாலை கொல்லுவதற்கு வருவார்கள். அன்னார் உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ர) அவர்களை போன்றிருப்பார்கள் என நபிகளார் கூறியுள்ளார்கள்.
இதன்படி மற்ற நபிமார்களுடன் இருந்த ஈசா நபியும் அன்னாரும் ஒரே நபர் தான் என்று தெளிவாக புரிந்துவிடுகிறது.
இதை பொய்ப்படுத்த காதியானிகள், உபைதுல்லாஹ் இப்னு முஆத் அல் அம்ரீ என்ற அறிவிப்பாளர் அஸ்மாஉல் ரிஜாலின்படி அவர் எதுவுமில்லை என இந்த காதியானிகள் அடித்துவிடுகிறார்கள்.
ஆனால் இந்த அறிவிப்பாளர் தொடரில் வருபவரோ ,அவர் அல்ல..
மாறாக உபைதுல்லாஹ் இப்னு முஆத் அல் அன்பரீ ஆவார். இவரும் ஸஹீஹ் புகாரியில் இடம்பெறும் அறிவிப்பாளர் ஆவார். இவரது நான்கு அறிவிப்புகள் புகாரியில் இடம்பெற்றுள்ளது. அவை நான்கிலும் தன் தந்தையிடமிருந்தே அவர் அறிவிக்கிறார் இதிலுள்ளதை போன்று.
மேலும் அவர் பலமான அறிவிப்பாளர் ஆவார்.
எனவே காதியானி வாதம் சுக்குநூறாகிறது.
காதியானிகளின் இந்த வங்குரோத்துநிலமையை மேலும் அதாள பாதாளத்திற்கு தள்ளிவிடும்வகையில் இன்னுமொரு ஹதீசும் உள்ளது. அதுவும் ஈசா நபி இந்த நபித்தோழரை சாயலில் ஒத்தவர் என்கிறது.
ﻭَﺣَﺪَّﺛَﻨِﻲ ﺯُﻫَﻴْﺮُ ﺑْﻦُ ﺣَﺮْﺏٍ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺣُﺠَﻴْﻦُ ﺑْﻦُ ﺍﻟْﻤُﺜَﻨَّﻰ، ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻋَﺒْﺪُ ﺍﻟْﻌَﺰِﻳﺰِ، - ﻭَﻫُﻮَ ﺍﺑْﻦُ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ - ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﺍﻟْﻔَﻀْﻞِ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻠَﻤَﺔَ ﺑْﻦِ ﻋَﺒْﺪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ، ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ، ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " … ﻭَﺇِﺫَﺍ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦُ ﻣَﺮْﻳَﻢَ - ﻋَﻠَﻴْﻪِ ﺍﻟﺴَّﻼَﻡُ - ﻗَﺎﺋِﻢٌ ﻳُﺼَﻠِّﻲ ﺃَﻗْﺮَﺏُ ﺍﻟﻨَّﺎﺱِ ﺑِﻪِ ﺷَﺒَﻬًﺎ ﻋُﺮْﻭَﺓُ ﺑْﻦُ ﻣَﺴْﻌُﻮﺩٍ ﺍﻟﺜَّﻘَﻔِﻲُّ …
Zuhair ibn Harb-Hujain ibn al Muthani-Abdul Aziz (ibn Abi Salama)-Abdullah ibn Fadl-Abi Salama bin Abdurrahman-Abu Huraira-Messenger of Allah (PBUH) : …
278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் (கஅபாவிலோ ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் – ஜெருசலேம் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் மக்திஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் மக்திஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.
(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூசா (அலை) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள்.அங்கு மர்யமின் மைந்தர் ஈசா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்)தான்.
அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்.தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நகரத்தின் காவலர் மாலிக்.அவருக்கு சலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லிட்டார்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
(முஸ்லிம் அத்தி1 ஹதீஸ் 278, ஆங்கிலம் #172 book 1, hadith 337)
இந்த ஹதீசில் நபிகளாரது இஸ்ரா வெறும் கனவு அல்ல. மிஃராஜ் வெறும் கனவு அல்ல என்பதுடன், பைத்துல் மக்திஸில் நபிமார்களை சந்தித்து அவர்களுக்கு நபிகளார் தொழுகை நடத்தினார்கள்.
அதில் மூசா நபி ஷனூஆ குலத்து மனிதரை போலவும் , ஈசா நபி உர்வதிப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ (ர) அவர்களை போலவும், இப்ராஹீம் நபி முகம்மது(ஸல்) அவர்களை போலவும் இருந்தார்கள்.
எனவே இந்த ஹதீஸ்கள் வரக்கூடிய ஈசாவும் , இஸ்ராயீலிய ஈசாவும் ஒருவரே என்பதை காட்டிவிடுகிறது!!
மிர்சா குலாம் அந்த ஈசா அல்ல!!
பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபமே உண்டு!!!!!
நமது சுருக்கமான முடிவு:
1.வரக்கூடிய ஈசா மற்றும் இஸராயீலிய ஈசா ஒருவரே! அவர் உர்வா இப்னு மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எனும் நபித்தோழருக்கு ஒப்பானவர்.
2.எனக்கு பின் நபியோ ரசூலோ இல்லை என நபிகளார் சொல்லியுள்ளார்கள
ஈசா நபி ஏற்கனவே நபியாக இருப்பதால், அவர் முகம்மது நபியிற்கு முன்னுள்ள நபி ஆவார்.
வேறு ஈசா என்றால் இந்த அடிப்படையே உடைந்துவிடும்.
3.ஈசா நபி வந்தவுடன் தொழுகையில் இமாமத் செய்ய அழைக்கபடுவார். ஆனால் அவரோ மறுத்துவிட்டு, உங்களில் சிலரே சிலருக்கு இமாம். இது இந்த உம்மத்திற்கு அல்லாஹ் கொடுத்த கண்ணியம் என கூறுவார்கள் என நபிகளார் சொல்லியுள்ளார்கள்.
(முஸ்லிம் 247)
இந்த ஹதீஸ் ஈசா நபி இந்த உம்மத்தை சேர்ந்தவர் அல்ல. அதனால் தான் அவரால் நமக்கு தொழுகை நடத்தும் இமாமாக இருக்கமுடியவில்லை என காட்டுகிறது. அது அவர் இஸ்ராயீலியர் ஆவார்.
எனவே காதியானிவாதம் க்ளீன் போல்ட்
4. ஈசா நபி மாநிறமா? சிவந்த நிறமா? சுருள் முடியுடையவரா? படிந்த வாரிய முடியுடையவரா?
விரிவான விளக்கம்:
https://answeringqadianism.blogspot.com/2020/02/blog-post.html?m=1
Comments
Post a Comment