Posts

Showing posts from June, 2021

மஹ்தி காதியானில் தோன்றுவாரா?

அல்மஹ்தி கத்ஆ எனும் ஊரிலிருந்துவருவாரா???- காதியானி பித்தலாட்டம் --------------------------------------- அவர்கள் கருதும் ஆதாரங்கள்.: ١- [عن عبدالله بن عمرو:] يخرجُ المهديُّ من قريةٍ باليَمَنِ يُقالُ لها كَرِعَةٌ ابن القيسراني (ت ٥٠٨)، ذخيرة الحفاظ ٥‏/٢٧٨٠ • [فيه] عبد الوهاب بن الضحاك ضعيف • أخرجه ابن عدي في «الكامل في الضعفاء» (٥/٢٩٥) அப்துல்லாஹ் ப்னு அம்ர் (ர) அறிவிக்கிறார்கள்: அல்மஹ்தி யமனிலுள்ள "கரிஆ" என்கிற ஓர் ஊரிலிருந்து வெளிப்படுவார். இதில் அப்துல்வஹ்ஹாப் ப்னு ளஹ்ஹாக் பலவீனமானவர். ٥- [عن سهل بن سعد الساعدي:] يخرجُ المهديُّ من قريةٍ باليمنِ يقالُ لها كَرِعَةُ، وعلى رأسهِ عمامةٌ فيها منادٍ ينادي ألا إن هذا المهديَّ فاتَّبِعوه الذهبي (ت ٧٤٨)، ميزان الاعتدال ٢‏/٦٨٠ • [فيه عبد الوهاب بن الضحاك ذكر من جرحه] ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதி (ர) அறிவிக்கிறார்கள்: அல்மஹ்தி யமனிலுள்ள "கரிஆ" எனப்படும் ஓர் ஊரிலிருந்து வெளிப்படுவார். அவரது தலையில் ஒரு தலைப்பாகை இருக்கும். அதிலிருந்து ஓர் அழைப்பாளர் "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இவரே அல்மஹ்தி. ஆகவே அவர...