இரண்டு ஈசா நபிகள் இல்லை!! இஸ்ராயீலிய ஈசா நபியே வர இருப்பவர்
இரண்டு இப்னு மர்யம் உள்ளனரா? இஸ்ராயீலிய ஈசாவும் வரக்கூடிய ஈசாவும் வெவ்வேறானவர்களா?? ---------------------------------------------------------------------------------------------- காதியானிகள் எப்படியாவது ஈசா நபியை மவ்த்தாக்குவதற்கே பார்ப்பார்கள். இவர்களுடன் விவாதிக்க நேர்ந்தால் இவர்களாக விரும்பி எடுக்கும் தலைப்பு "ஈசா நபி மரணித்துவிட்டார்" என்பதாக தான் இருக்கும். இதை வைத்து காலத்தை கடத்திவிடுவார்கள் ஆனால் அவர்கள் நம்பும் ஈசா என கூறும் பொயயர் மிர்சா குலாம் நிரூபிக்க வரமாட்டார்கள். ஈசா நபி உயிருடன் உள்ளார் என நம்புவது சிர்க் என்று சொன்ன மிர்சா குலாம்,, மூசா நபி வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் மரணக்கவில்லை. மரணித்தவர்களில் அவர் இல்லை என நம்புவதை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியுள்ளான் என நூருல் ஹக் 68-69 இல் எழுதியுள்ளார். இப்படி பொய்யர்களை அல்லாஹ் இலகுவாக அடையாளம் காட்டி தமக்கு தாமே முரண்பட்டுக்கொள்ள வைப்பான். இனி இரண்டு ஈசாக்கள் இருக்கிறார்களா என பார்ப்போம்: --------- நபிகளார் ஒருபோதும் இரண்டு ஈசாக்கள் என்று சொல்லவே இல்லை!! வரக்கூடிய ஈசாவும் ஏற்கனவே நபியா...