Answering Qadianism- ebook
இஸ்லாத்திலே பல வழிகெட்டபிரிவுகள் தோன்றிக்கொண்டே இருப்பதோடு தம்மையே ஒரிஜினல் முஸ்லிம் என்றும் கூறிக்கொள்கின்றனர் . அந்த வகையில் போலி நபித்துவத்திலே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றே இந்த அஹ்மதிய்யா என்பதாகும் . அஹ்மதிகள் என்போர் இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் மிர்சா காதியானி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு ஆகும் . முஸ்லிம் சமூதாயம் 72 கூட்டமாக பிரிந்ததாகவும் , அதனால் 73 வது கூட்டமாக ஒரு கூட்டத்தை உருவாக்குவதாக நினைத்து ஒரு ஜமாத்தை உண்டாக்கி , மிஷ்காதுல் மஸாபீஹ் என்ற ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையாளர் 73 பிரிவாக பிரிவார்கள் என்ற ஹதீஸுக்கு கீழே நேர்வழிபெற்றவர்கள் யாரென்றால் ஜமாஅதுல் முகம்மதிய்யா வ அஹ்மதிய்யா என்று சொல்லியிருப்பதால் , அதனோடு ஒத்துப்போகும் பெயரை தன் பெயரின் இறுதிப்பகுதியிலிருந்து வெட்டி " அஹ்மதிய்யா " என்று பெயரிட்டார் மிர்சா காதியானி . ( அதாவது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் இயக்கம் ஹதீஸிலுள்ள வாசகத்தை தம் இயக்கத்திற்கு பெயராக இட்டது போன்றே இதுவும் 130 வருடங்கள் முன்பே ஐயா செய்துவிட்டார் .) இதேபோன்று இவருக்கு முன்பே சேர் சையது அஹமது என்பவர் தன் தஃப...