Posts

Showing posts from October, 2020

மூசாவும் ஈசாவும் உயிருடன் இருந்தால்- காதியானி பித்தலாட்டம்.

மூசாவும் ஈசாவும் உயிருடனிருந்தால் என்னை பின்பற்ற வேண்டும்- காதியானி பித்தலாட்டகாட்டுகிறார்கள் ------------------------------------ மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவர் தன்னை ஈசா நபி என வாதிட்டார். அவரை ஒருகூட்டம் உண்மை என நம்பி நம்முடன் வாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் ஈசா நபியை மரணித்தவராக காட்டுவதற்கே முயற்சிப்பார்கள். அப்படி செய்தால் தானே அவர்களின் மிர்சா காதியானியை ஈசா நபி என நிருவ முடியும்? அதற்காக சம்பந்தமே இல்லாத அல்லது ஆதாரமே இல்லாத தகவல்களை பகிர்ந்து தமக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாக வாதாடுவார்கள். அந்த வகையில் இவர்கள் காட்டும் ஒரு செய்தியை பார்ப்போம்: ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﺣﻴﻴﻦ ﻟﻤﺎ ﻭﺳﻌﻬﻤﺎ ﺇﻻ ﺍﺗﺒﺎﻋﻲ- முசாவும் ஈசாவும் இரு உயிருடன் உள்ளவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவர்களிருவருக்கும் (வேறு எதுவும்) முடியாது./அனுமதியில்லை. (தஃப்சீர் இப்னு கசீர் -குர்ஆன் 3:81க்கான விளக்கத்தில் வரும் செய்தி) இதே செய்தியை ச-அஃரானி, இப்னுல் கையும் உட்பட பலர் தம் நூல்களில் பதிந்துள்ளார்கள். ஆனாலும் ஸஹீஹான ஹதீஸ்களில் மூசா நபியை குறித்து மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை...

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.

Image
நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றி அறிவிப்பும் காதியானிகளின் பித்தலாட்டமும் ------------------------------------------------ காதியானிகள் என்போர் மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவரை  மஹ்தியாகவும் ஈசா நபியின் இரண்டாம் வருகையாகவும், மர்யமாகவும், கிருஷ்ணராகவும், மைத்ரேய புத்தராகவும் , நபியாகவும் ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இவர்கள் தம்மை அஹ்மதிகள் என சொல்லிக்கொள்வார்கள். முகம்மது (ஸல) அவர்களின் பின் நபிமாரின் வருகை இருக்காது.. நுபுவ்வதும் ரிசாலத்தும் முற்றுப்பெற்றுவிட்டது என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நம்பிக்கை.. இதை தான் குர்ஆன் 33:40 - "முகம்மது உங்ளில் (வளர்ந்த) ஆண்கள் எவருக்கும் தந்தையாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும் காதமுன்னபிய்யீனாகவும் இருக்கிறார்" என்று சொல்கிறது. அதாவது காதமுன்னபிய்யீன் என்றால் எவருக்கு பின் நபிமாரின் வருகை இல்லையோ, எவருடைய வருகையின் மூலம் நபிமாரின் வருகை முற்றுப்பெற்று முத்திரை இடப்பட்டதோ அப்படிப்பட்டவரை குறிக்கிறது. இதை நபிகளார் தெளிவாக கூறியுமுள்ளார்கள். நான் காதமுன்னபிய்யீனாக இருக்கிறேன். எனக்கு பின் நபியே இல்லை. ‏ ‏ (وَأَنَا خَاتَمُ النَّبِيِّي...

எக் கலாத்தி கா இஸாலா- பொய்யாகும் காதியானிய கற்பனை

Image
எக் கலாதி கா இஸாலா -"ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" மூலம் பொய்யாக்கப்படும் காதியானிசம் ------------------------------------------------ "எக் கலா(த்)தி கா இஸலா" எனப்படும் உருது நூலின் தமிழாக்கமே "ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" என நூலாகும். இதை உருது மொழியில் மிர்சா காதியானி கி.பி. 1901ல் எழுதியது ஆகும். இது காதியானி கொள்கைக்கே வேட்டுவைக்கும் ஒன்று தான் இந்நூல். மிர்சா காதியானி என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும், மர்யம் என்றும் ஈசா நபி என்றும் நபி என்றும் வாதிட்டவர். இவரை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "ஒரு தஜ்ஜால்" என சொல்லிவிடலாம். இவர் எப்படி நபியாக மாறினார் என்பதை விளக்கும் நூலே இது. அதாவது  -"முகம்மது நபி நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். அவருக்கு பின் நபி இல்லை! ஒருவர் முகம்மது நபிக்கு பின் தன்னை நபி என யாருக்கும் சொல்லமுடியாதாம். ஆனால் ரசூலில் ஃபனா ஆகினால் மட்டும் விதிவிலக்காம்." (பக்கம் 8) "இப்படி முகம்மது நபியில் ஃபனாவாகி அதனால் நபித்துவம் மெற்றால், அவர் முகம்மது நபியின் நுபுவ்வத்தை தான் பெறுகிறார். (அ...

இமாம் மஹ்தியும் ஈசா நபியும் ஒரே நபரா? -காதியானி பித்தலாட்டம்

இமாம் மஹ்தியும் வரக்கூடிய ஈசா நபியும் ஒருவரா? - காதியானி பித்தலாட்டத்திற்கு பதில்: ------------------------------------------------ நபிகளார் தம் குடும்பத்திலிருந்து  ஒரு ஆட்சியாளர் வருவார் , அவர் அரபுகளை ஆட்சி செய்வார், பூமியை நீதத்தால் நிரப்புவார் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அவரை அல்மஹ்தி அல்லது இமாம் மஹ்தி என அழைக்கிறோம். அதேபோல ஈசா நபி மறுமை நெருங்கும்போது, தஜ்ஜால் புறப்பட்டு 40 நாட்களின்பின் இரு மலக்குமார்களின் இறக்கைகளில் கைவைத்தவராக இறங்குவார். தஜ்ஜாலை கொல்வார். அவர் ஹஜ் உம்ரா செய்வார். அவர் இந்த உம்மத்தில் தொழுகையில் இமாமத் செய்யமாட்டார். காரணம் அவர் இந்த உம்மத்தில் பிறந்தவர் அல்ல என்பன ஹதீஸ்களில் காண முடிகிறது. ஆனால் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் தம்மை இயேசு என வாதிட்டது போலவே, முஸ்லிம் பெயர்தாங்கிகளும் தம்மை ஈசா நபி என வாதிட்டு காஃபிர்களாகி தம் மக்களையும் காஃபிர்களாக மாற்றினர். அந்த வகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபிலுள்ள காதியான் என்ற ஊரில் ஒரு பொய்யர் தோன்றி தம்மை ஈசா, மஹ்தி, கல்கி,புத்தர் என அடித்துவிட்டார்.. ஈசா நபி இந்த உம்மத்தவர் அல்ல என்றும், மஹ்தி இந்த உம்...