காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள்
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (6)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 1
1.நபிகளாரின் விளக்கம் |
وانا خاتم النبيين لا نبي بعدي நான் காதமுன்நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை) ஆவேன். எனக்கு பின் எந்த நபி இல்லை. (திர்மிதீ 2219) இங்கே நபிகளாரே காதமுன்நபிய்யீனுக்கு விளக்கம் கொடுத்துவிட்டார்கள். அத்தோடு தனக்கு பின் நபியில்லை என்பதை குறிப்பிட்ட ஹதீஸ்கள் சிலதை தொடர் 1,2,3 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளேன். ஸஹாபாக்களின் புரிதல்: நபிகளாருக்கு பின் நபி உண்டு என விதிக்கப்பட்டிருந்தால், நபியின் மகன் இப்ராஹீம் வாழ்ந்திருப்பார். ஆயினும் அவருக்கு பின் நபி இல்லை என்கிறார் அபூஅவஃபா (ர) (புகாரி 6194) |
2.இமாம் கதாதா |
(وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ) أي: آخرهم (ஆயினும் அவர் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கிறார்). அதாவது அவர்களில் கடைசியானவர். (பார்க்க தஃப்சீர் தபரீ பாகம் 20 பக்கம் 278) |
3.இமாம் தபரீ (ஹி 310) |
من قرأه بكسر التاء، بمعنى: أنه الذي ختم الأنبياء صَلَّى الله عَلَيْهِ وَسَلَّم وعليهم، وقرأ ذلك فيما يذكر الحسن وعاصم (خَاتَمَ النَّبِيِّينَ) بفتح التاء، بمعنى: أنه آخر النبيين، كما قرأ (مَخْتُومٌ خَاتَمَهُ مِسْكٌ) بمعنى: آخره مسك من قرأ ذلك كذلك காதிமன்நபிய்யீன் என்று கஸ்ரா செய்து ஓதியதன் அர்த்தம்: அவர் நபிமார்களை முத்திரையிட்டார்/முடிவுக்குகொண்டுவந்தார் என்பதாகும். காதமன்நபிய்யீன் என்று தாவுக்கு ஃபத்ஹ் செய்து ஓதியதன் அர்த்தம் அவர் நபிமார்களின் இறுதியானவர் என்பதாகும். "முத்திரையிடப்பட்டது அதன் முத்திரை கஸ்தூரியாகும்" என்று ஓதுவதை போல. அதன் அர்த்தம் அதின் இறுதி கஸ்தூரி ஆகும். (தஃப்சீர் தபரீ பாகம் 20 பக்கம் 279) |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (6)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 2
4.ஸமக்சரீ (الزمخشري) (ஹி 538) |
{ وخَاتَمَ ٱلنَّبِيّينَ } يعني أنه لو كان له ولد بالغ مبلغ الرجال لكان نبياً ولم يكن هو خاتم الأنبياء، அவர் காதமுன்நபிய்யீன் என்றால் அவருக்கு பருவமடைந்த மகன் இருந்தால், அவர் நபியாக இருப்பார். அவர் காதமுல் அன்பியாவாக இருக்க மாட்டார். (தஃப்சீர் அல்கஷ்ஷாஃப் تفسير الكشاف ) 3/544) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=1&tTafsirNo=2&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 فإن قلت كيف كان آخر الأنبياء وعيسى ينزل في آخر الزمان؟ قلت معنى كونه آخر الأنبياء أنه لا ينبأ أحد بعده، وعيسى ممن نبىء قبله، وحين ينزل ينزل عاملاً على شريعة محمد صلى الله عايه وسلم، مصلياً إلى قبلته، كأنه بعض أمته ஈஸா கடைசிகாலத்தில் இறங்குவார் என்றிருக்க (முகம்மது நபியாகிய) அவர் எப்படி நபிமார்களில் கடைசியானவராக இருப்பார்? என்று நீ கேட்பாயானால், நான் சொல்வேன்: அவர் நபிமார்களில் கடைசியானவராக இருப்பதன் அர்த்தம் என்னவென்றால், அவருக்கு பின்னால் எவரும் நபியாக மாட்டார் (நுபுவ்வத் பெறமாட்டார்) என்பதாகும். ஈஸாவோ அவருக்கு முன்புள்ளவர்களிலுள்ள ஒரு நபியாவார். அவர் இறங்கும்போது முகம்மது (ஸல்லலல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் ஷரீஅத்தின் படி செயற்படுபவராகவும் , அவருடைய கிப்லாவை நோக்கி தொழுபவராகவும் அவருடைய உம்மத்தில் சிலரை போன்றே இறங்குவார். அதே தஃப்சீர் கஷ்ஷாஃப் இந்த வசனத்தின் விளக்கத்தின் இறுதிப்பகுதி https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=1&tTafsirNo=2&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
5.குர்துபீ (ஹி 671) |
وَخَاتَمَ» قرأ عاصم وحده بفتح التاء، بمعنى أنهم به خُتموا فهو كالخاتَم والطابَع لهم. وقرأ الجمهور بكسر التاء بمعنى أنه ختمهم أي جاء آخرهم. ஆஸிம் மட்டுமே "காதம்" என்று ஓதினார். அதன் அர்த்தம் அவர்கள்(நபிமார்கள்) அவர்மூலமாக முத்திரையிடப்பட்டனர்/முடிவுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆகவே அவர் அவர்களுக்கு முத்திரை ஆவார். பெரும்பான்மையானோர் தாவுக்கு கஸ்ரா செய்து ஓதினார்கள். அதன் அர்த்தம் அவர் அவர்களை முத்திரையிட்டார்/முடிவுக்குகொண்டுவந்தார் அதாவது அவர்களில் கடைசியாக வந்தார் என்பதாகும். (ஜாமிஉல் அஹ்காம் லில்குர்ஆன் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=1&tTafsirNo=5&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (7)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 3
6.இப்னு கஸீர் (ஹி 774) |
والأحاديث في هذا كثيرة، فمن رحمة الله تعالى بالعباد إِرسال محمد صلى الله عليه وسلم إِليهم، ثم من تشريفه لهم ختم الأنبياء والمرسلين به، وإِكمال الدين الحنيف له، وقد أخبر الله تبارك وتعالى في كتابه، ورسوله صلى الله عليه وسلم في السنة المتواترة عنه أنه لا نبي بعده ليعلموا أن كل من ادعى هذا المقام بعده، فهو كذاب وأفاك دجال ضال مضل، لو تحرق وشعبذ، وأتى بأنواع السحر والطلاسم والنيرجيات، فكلها محال وضلال عند أولي الألباب كما أجرى الله سبحانه وتعالى على يد الأسود العنسي باليمن، ومسيلمة الكذاب باليمامة من الأحوال الفاسدة والأقوال الباردة ما علم كل ذي لب وفهم وحجى أنهما كاذبان ضالان، لعنهما الله، وكذلك كل مدع لذلك إِلى يوم القيامة، حتى يختموا بالمسيح الدجال (இறுதி நபித்துவத்தை பற்றி ஹதீஸ்களை இந்த வசனத்தின்கீழே கொடுத்துவிட்டு இமாம் இவ்வாறு சொல்கிறார்:) இந்த விசயத்தில் அதிகமான ஹதீஸ்கள் உள்ளன. முகம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களை அடியாராகளிடம் அனுப்பியது அல்லாஹ்வின் கருணையிலுள்ளதாகும். பிறகு அவனது சங்கையில் உள்ளதே நபிமார்களையும் ரஸூல்மார்களையும் அவரைக்கொண்டு முத்திரையிட்டதும் அவனுக்கே உரித்தாகுமாறு தீனுல்ஹனீஃபை முழுமலப்படுத்தியதும் ஆகும். அல்லாஹ் அவனது வேதத்திலும் நபிகளார் தன் முதவாத்திரான ஸுன்னாவிலும் அவருக்கு பிறகு நபி இல்லை என்பதை அறிவித்துள்ளார்கள். இது அவருக்குப்பின் யாரெல்லாம் இந்த இடத்தை/அந்தஸ்த்தை வாதிடுகிறானோ, அவன் பொய்யனும் இட்டுக்கட்டுபவனும் தஜ்ஜாலும் வழிகேடனும் வழிகெடுப்பவனும் ஆவான் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காக ஆகும். ஒருவன் வித்தைகள் காட்டினாலும், தந்திரங்கள் செய்தாலும், பல்வேறு வகையான சூனியங்கள், தல்ஸ்ம்கள் (மந்திரக் குறியீடுகள்) மற்றும் தந்திர வித்தைகளைக் கொண்டு வந்தாலும், அறிவுடையவர்களிடத்தில் (சிந்தனையாளர்களிடத்தில்) அவை அனைத்தும் சாத்தியமற்றவை மற்றும் வழிகேடானவையே ஆகும். யேமனில் அஸ்வத் அல்-அன்ஸி மற்றும் யமாமாவில் பொய்யன் முஸைலமா ஆகியோரது கைகளால் அல்லாஹ் வெளிப்படுத்திய சீரழிந்த நிலைகளையும், அர்த்தமற்ற பேச்சுகளையும் கண்ட புத்தியும், தெளிவும் உள்ள எவரும் அவர்கள் இருவரும் பொய்யர்கள் மற்றும் வழிகெட்டவர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அல்லாஹ் அவர்கள் இருவரையும் சபிப்பானாக! இவ்வாறே இறுதி நாள் வரை (இறைத்தூதர் என) பொய்ப் பிரசாரம் செய்யும் ஒவ்வொருவனும் இத்தகையவனே. இவர்களின் இந்த வரிசை மஸீஹுத் தஜ்ஜாலுடன் முடிவடையும்." தஃப்சீருல் குர்ஆனில்அழீம் இப்னு கஸீர் 33:40 |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (8)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 4
7.பைளாவீ (ஹி 685) |
وَخَاتَمَ ٱلنَّبِيّينَ } وآخرهم الذي ختمهم أو ختموا به على قراءة عاصم بالفتح، ولو كان له ابن بالغ لاق بمنصبه أن يكون نبياً " كما قال عليه الصلاة والسلام في إبراهيم حين توفى: لو عاش لكان نبياً " ولا يقدح فيه نزول عيسى بعده لأنه إذا نزل كان على دينه، مع أن المراد منه أنه آخر من نبىء. காதமன்நபிய்யீன்- ஆஸிமின் ஓதலின்படி நபிமார்களை முத்திரையிட்டவரான/முடிவுக்குகொண்டுவந்தவரான அல்லது அவரால் அவர் முத்திரையிட்டவரான/முடிவுக்குகொண்டுவந்தவரான அவர்களில் இறுதியானவர் என்பதாகும். அவருக்கு பருவமடைந்த மகன் இருந்திருந்தால் அவரும் நபியாகும் அந்தஸ்த்தை அடைந்திருப்பார். இப்ராஹீம் மரணித்தபோது "அவர் வாழ்ந்தால் நபியாக இருந்திருப்பார்" என்று நபிகளார் கூறியதுபோன்றாகும். ஈஸா நபி அவருக்கு பின் இறங்குவது இதற்கு மாற்றமாகாது. ஏனெனில் அவர்இறங்கும்போது முகம்மது நபியின் மார்க்கத்திலேயே இருப்பார்.இதனால் நாடப்படும் அர்த்தமானது: அவரே (முகம்மது நபியே) நுபுவ்வத் பெற்றவர்களில் இறுதியானவர் என்பதாகும். (அன்வாருத்தன்ஸீல் வ அஸ்ராருத்தஃவீல் 33:40) |
8.அல்மஹல்லீ மற்றும் சுயூத்தீ (ஹி 864) |
رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ } فلا يكون له ابن رجل بعده يكون نبياً. وفي قراءة بفتح التاء كآلة الختم: أي به ختموا { وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيماً } منه بأن لا نبيّ بعده، وإذا نزل السيد عيسى يحكم بشريعته. அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கிறார் என்பதன் அர்த்தம் அவருக்கு பின் நபியாகும் பருவமடைந்த மகன் இருக்கமாட்டார் என்பதாகும். இதற்கு ஃபத்ஹ் செய்து ஓதும் கிராஅத்தின்படி "முத்திரையிடும் கருவி" ஆகும். அதாவது அவர்மூலமாக நபிமார்கள் முத்திரையிடப்பட்டார்கள்/முடிவுக்குக்கொண்டுவரப்பட்டார்கள். (அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்)- அவருக்கு பின் நபி இருக்க மாட்டார். ஈஸா நபி இறங்கும்போது முகம்மதுநபியின் ஷரீஅத்படியே தீர்ப்பளிப்பார்கள். (தஃப்ஸீர் ஜலாலைன் 33:40) |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (9)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 5
9.சவ்கானீ (ஹி 1250) |
وقرأ الجمهور " خاتم " بكسر التاء. وقرأ عاصم بفتحها. ومعنى القراءة الأولى أنه ختمهم، أي جاء آخرهم. ومعنى القراءة الثانية أنه صار كالخاتم لهم الذي يتختمون به ويتزينون بكونه منهم. பெரும்பாலானவர்கள் "காதிம்" என கஸ்ர் செய்து ஓதியுள்ளனர். ஆஸிம் ஃப்த்ஹ் செய்து (காதம் என்று) ஓதினார். முதலாவதின் அர்த்தமானது: அவர் அவர்களை முத்திரையிட்டார் /முடித்துவைத்தார் அதாவது அவகர்களில் கடைசியாக வந்தார் என்பதாகும். இரண்டாவது ஓதலின் அர்த்தமானது அவர்கள் முடித்துவைக்கும் முத்திரையாகவும் அவர்களில் அவர் இருப்பதால் அவரைக்கொண்டு அலங்கரித்துக்கொள்கிறார்கள் என்பதாகும். (ஃபத்ஹுல்கதீர் 33:40) |
10.ஃபைரூஸ் ஆபாதீ (ஹி 817) |
وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ } ختم الله به النبيين قبله فلا يكون نبي بعده நபிமார்களின் முத்திரை: அல்லாஹ் அவர்மூலமாக அவருக்கு முன்னிருந்த நபிமார்களை முத்திரையிட்டான்/முடித்துவைத்தான்.. அவருக்கு பின்னால் யாரும் நபியாகமாட்டார்கள்.தஃப்சீர் ஃபைரூஸ் ஆபாதீ 33:40 |
11.ஸமர்கந்தீ (ஹி 375) |
وقرأ عاصم في إحدى الروايتين (وخاتمَ) النبيين بنصب التاء وقرأ الباقون بالكسر فمن قرأ بالكسر يعني آخر النبيين ومن قرأ بالنصب فهو على معنى إضافة الفعل إليه يعني أنه ختمهم وهو خاتم ஆஸிம் இரண்டு ரிவாயத்களில் ஒன்றில் ஃபத்ஹ் செய்து காதம் என்று ஓதினார். மற்றவர்கள் கஸ்ர் செய்து காதிம் என்று ஓதினார்கள். கஸ்ர் செய்து காதிம் என்று ஓதியவர்களின் அர்த்தமாவது: நபிமார்களில் கடைசியானவர் என்பதாகும். ஃபத்ஹ் செய்து காதம் என்று ஓதியவர்களின் அர்த்தமானது அவர் முத்திரையாக இருந்து அவர்களை முத்திரையிட்டார்/முடித்துவைத்தார் என்பதாகும். (பஹ்ருல் உலூம் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=11&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (10)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 6
12.மாவர்தீ (ஹி 450) |
وَلكِن رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّنَ } يعني آخرهم وينزل عيسى فيكون حكماً عدلاً وإماماً مقسطاً فيقتل الدجال ويكسر الصليب وقد روى نعيم عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرجُ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِن ثَلاَثِينَ كُلُّهُم يَزْعَمُ أَنَّهُ نَبِيٌ وَلا نَبِيَّ بَعْدِي " قال مقاتل بن سليمان ولم يجعل محمداً أبا أحد من الرجال لأنه لو جعل له ابناً لجعله نبياً وليس بعده نبي قال الله { وَخَاتَمَ النَّبِيِّنَ }. ஆனாலும் அவர் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கிறார் என்பதன் அர்த்தம்: அவர்களில் கடைசியானவர் என்பதாகும். ஈஸா நபி இறங்கி நீதமான நீதிபதியாகவும் நீதமான தலைவராகவும் இருப்பார். தஜ்ஜாலை கொல்வார். சிலுவையை முறிப்பார். அபூஹுரைராவை தொட்டும் நுஐம் அறிவித்ததாவது: அல்லாஹ்வின்தூதர் கூறினார்கள்: முப்பதுக்கு நெருக்கமான எண்ணிக்கையான பொய்யர்களான தஜ்ஜால்கள் தோன்றும்வரை மறுமை நிகழாது. அவர்கள் ஒவ்வொருவனும் தன்னை நபி என்று வாதிடுவான். எனக்கு பின் எந்த நபியுமில்லை!." முகாதில் இப்னு ஸுலைமான் கூறினார்: முகம்மது நபியை எந்த ஆண்மனிதருக்கும் தகப்பனாக அவன் ஆக்கவில்லை. காரணம் அவன் ஒரு மனிதனை நபிகளாருக்கு மகனாக ஆக்கியிருந்தால் அவரை நபியாகவும் ஆக்கியிருப்பான். அவருக்கு (முகம்மது நபிக்கு) பிறகு நபியில்லை. அல்லாஹ் கூறிவிட்டான்: அவர் நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். (அந்நுகத் வல்உயூன் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=12&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
13.பஙவீ (ஹி.516) |
وَلَـٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ } ، ختم الله به النبوة. وقرأ عاصم: «خاتم» بفتح التاء على الاسم، أي: آخرهم، وقرأ الآخرون بكسر التاء على الفاعل، لأنه ختم به النبيين فهو خاتمهم. قال ابن عباس: يريد لو لم أختم به النبيين لجعلت له ابناً يكون بعده نبياً. وروي عن عطاء عن ابن عباس: أن الله تعالى لما حكم أن لا نبي بعده لم يعطه ولداً ذكراً يصير رجْلاً ஆயினும் அவர் அல்லாஹ்வின் தூதரும் நபிமார்களின் முத்திரையும் ஆவார்: அல்லாஹ் அவர்மூலமாக நுபுவ்வத்தை முத்திரையிட்டான்/முடித்துவிட்டான். ஆஸிம் தாவை ஃபத்ஹ் செய்து காதம் என்று ஓதினார். அதன் அர்த்தம் அவர்களில் கடைசியானவர். ஏனையோர் கஸ்ர் செய்து காதிம் என்று ஓதினர். அதன் அர்த்தம் அவர்மூலமாக நபிமார்கள் முத்திரையிடப்பட்டனர்/முடித்துவிடப்பட்டனர் ஆகவே அவர் காதிம்... இப்னு அப்பாஸ் (ர) கூறினார்கள்: இதன் அர்த்தம் "நான் அவர்மூலமாக நபிமார்களை முத்திரையிடவில்லை என்றால், அவருக்கு பிறகு நபியாகும் மகனை ஆக்கியிருப்பேன்" என்பதாகும். அதாஉ வழியாக இப்னு அப்பாஸை தொட்டு அறிவிக்கப்படுவதாவது: அல்லாஹ் அவருக்குப்பிறகு நபியில்லை என்று தீர்ப்பளித்தபோது அவருக்கு பருவமைடையும் எந்த ஆண்பிள்ளையையும் கொடுக்கவில்லை. (மஆலிமுத்தன்ஸீல் 33:40) |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (11)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 7
14.இப்னு அதிய்யா (ஹி 546) |
" وخاتَم " بفتح التاء بمعنى أنهم به ختموا فهو كالخاتم والطابع لهم، وقرأ الباقون والجمهور " خاتِم " بكسر التاء بمعنى أنه ختمهم أي جاء آخرهم، காதம் என்று ஃபத்ஹ் செய்து ஓதுவதன் அர்த்தம்: அவர்மூலமாக அவர்கள் முத்திரையிடப்பட்டனர்/முடித்துவைக்கப்பட்டனர். ஆகவே அவர் முத்திரையாக இருக்கிறார். ஏனைய பெரும்பான்மையானோர் காதிம் என்று கஸ்ர் செய்து ஓதினார்கள். இதன் அர்த்தமாவது "அவர் அவர்களை முத்திரையிட்டார்/முடித்துவைத்தார் என்பதாகும். அதாவது அவர்களில் கடைசியாக வந்தார். (அல்முஹர்ரருல் வஜீஸ் ஃபீ தஃப்சீரில்கிதாபில்அஸீஸ் 33:40) |
15.இப்னுல் ஜவ்ஸீ (ஹி 597) |
ومن قرأ: { خاتِمَ } بكسر التاء، فمعناه: وختم النبيِّين؛ ومن فتحها، فالمعنى: آخِر النبيِّين. قال ابن عباس: يريد: لو لم أَختِم به النبيِّين، لَجَعلتُ له ولداً يكون بعده نبيّاً. காதிம் என்று கஸ்ர் செய்து ஓதியவர்கள் விசயத்தில் அதன் அர்த்தம் நபிமார்களை முத்திரையிட்டார்/முடித்துவைத்தார் என்பதாகும். ஃபத்ஹ் செய்தவர்கவிசயத்தில் அர்த்தமாவது (காதம்): நபிமார்களில் இறுதியானவர் என்பதாகும். இப்னு அப்பாஸ் கூறினார்: இதனால் அல்லாஹ் நாடுவது: நான் அவர்மூலமாக நபிமார்களை முத்திரையிடவில்லை என்றால் அவருக்கு பிறகு நபியாகும் மகனை அவருக்கு ஆக்கியிருப்பேன். (ஸாதுல் மஸீர் 33:40) |
16.இப்னு அப்திஸ்ஸலாம் (ஹி 660) |
{ وَخَاتَمَ النَّبِيِّنَ } آخرهم. காதமுன்நபிய்யீன் என்றால் அவர்களில் இறுதியானவர். (தஃப்ஸீருல் குர்ஆன் 33:40) |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (12)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 8
17.நஸஃபீ (ஹி 710) |
وَخَاتَمَ ٱلنَّبِيّينَ } بفتح التاء عاصم بمعنى الطابع أي آخرهم يعني لا ينبأ أحد بعده وعيسى ممن نبي قبله، وحين ينزل ينزل عاملاً على شريعة محمد صلى الله عليه وسلم كأنه بعض أمته. وغيره بكسر التاء بمعنى الطابع وفاعل الختم ஆஸிம் தாவுக்கு ஃப்த்ஹ் செய்து "காதமன்நபிய்யீன்" என்று ஓதியதன் அர்த்தம்: முத்திரை. அதாவது அவர்களில் இறுதியானவர். அதன் அர்த்தமாவது அவருக்கு பிறகு எவரும் நுபுவ்வத் பெறமாட்டார்/நபியாகமாட்டார். ஈஸா நபியோ அவருக்கு முன்னுள்ள நபியாவார். அவர் இறங்கும்போது முகம்மது நபியின் சரீஅத்படி செயற்படுபவராகவே அவருடைய உம்மத்தில் ஒருவரைப்போன்றே இருப்பார். காதிம் என்று கஸ்ர் செய்து ஓதியதன் அர்த்தம் "முத்திரையிடுபவர்" முத்திரையிடுதலை செய்பவர் என்பதாகும். மதாரிகுத்தன்ஸீல் வஹகாயிகுத்தஃவீல் 33:40 https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=17&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
18.இப்னு ஃகாஸின் (ஹி 725) |
وخاتم النبيين } ختم الله به النبوة فلا نبوة بعده أي ولا معه قال ابن عباس: يريد لو لم أختم به النبيين لجعلت له ابناً ويكون بعده نبياً وعنه قال: إن الله لما حكم أن لا نبي بعده، لم يعطه ولداً ذكراً يصير رجلاً { وكان الله بكل شيء عليماً } أي دخل في علمه أنه لا نبي بعده. فإن قلت: قد صح أن عيسى عليه السلام ينزل في آخر الزمان بعده وهو نبي قلت إن عيسى عليه السلام ممن نبيء قبله وحين ينزل في آخر الزمان ينزل عاملاً بشريعة محمد صلى الله عليه وسلم ومصلياً إلى قبلته كأنه بعض أمته காதமுன்நபிய்யீன்-நபிமார்களின் முத்திரை என்றால் அவர்மூலமாக நுபுவ்வத்தை அல்லாஹ் முத்திரையிட்டான்/முடித்துவிட்டான் ஆகவே அவருக்கு பிறகு நுபுவ்வத் இல்லை. அதாவது அவருடனும் நுபுவ்வத் இல்லை (உதாரணமாக மூஸாவுக்கு ஹாரூன் இருந்ததுபோல). இப்னு அப்பாஸ் கூறியதாவது: இதன்மூலம் அல்லாஹ் நாடுவதாவது : நான் அவர்மூலமாக நுபுவ்வத்தை முத்திரையிடாதிருந்தால், அவருக்கு பிறகு நபியாகும் மகனை அவருக்கு ஆக்கியிருப்பேன். அவரைப்பற்றி கூறியதாவது: அல்லாஹ் அவருக்கு பிறகு நபி இல்லை என்று தீர்மானித்துவிட்டபோது , பருவமடையும் ஆண்பிள்ளை யாரையும் அவருக்கு கொடுக்கவில்லை! "மேலும் அல்லாஹ் ஒவ்வொருபொருளையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்" அதாவது அவனுடைய அறிவிலே "அவருக்குபிறகு நபி இல்லை" என்பதை நுழைவிக்கப்படுகிறது. "ஈஸா நபி நபியாக இருந்து அவருக்குபின் இறுதிக்காலத்தில் இறங்குவார் என்பது ஸஹீஹாக இருக்கிறதே" என்று நீ சொன்னால், ஈஸா நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத் பெற்றவர். அவர் இறுதிக்காலத்தில் இறங்கும்போது முகம்மது நபியின் ஷரீஅத்படி செயற்படுபவராக அவரது கிப்லாவை நோக்கி தொழுபவராக , அவரது உம்மத்தைச்சேர்ந்த ஒருவரை போன்றே இறங்குவார். (லுபாபுத்தஃவீல் 33:40) https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=18&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1 |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (13)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 9
19.அபூஹைய்யான் (ஹி 754) |
وقرأ الجمهور: { خاتم } ، بكسر التاء، بمعنى أنه ختمهم، أي جاء آخرهم. وروي عنه أنه قال: أنا خاتم ألف نبي، وعنه: أنا خاتم النبيين في حديث واللبنة. وروي عنه، عليه السلام، ألفاظ تقتضي نصاً أنه لا نبي بعده صلى الله عليه وسلم، والمعنى أن لا يتنبأ أحد بعده، ولا يرد نزول عيسى آخر الزمان، لأنه ممن نبىء قبله، وينزل عاملاً على شريعة محمد صلى الله عليه وسلم مصلياً إلى قبلته كأنه بعض أمته பெரும்பான்மையானோர் காதிம் என்று கஸ்ர் செய்து ஓதியுள்ளார்கள். அதன் அர்த்தம் அவர்களை முத்திரையிட்டார் என்பதாகும். அதாவது அவர்களில் கடைசியாக வந்தார் என்பதாகும். நபிகளாரை தொட்டு அறிவிக்கப்பட்டிருப்பதாவது " நான் ஆயிரம் நபிமார்களின் முத்திரை, மேலும் அறிவிக்கப்பட்டிருப்பதாவது நான் நபிமார்களின் இறுதியானவன் (காதிமுந்நபிய்யீன்) என்று கல் சம்பந்தமான ஹதீஸிலே (புகாரி 3535) அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத்தொட்டு அன்னாரின்பிறகு நபி இல்லை என்று தெளிவாக உணர்த்தும் பல வார்த்தைகளால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் அர்த்தமானது: அவருக்கு பிறகு யாரும் புதிதாக நுபுவ்வத் பெற மாட்டார்கள் என்பதாகும். இது இறுதிக்காலத்தில் ஈஸாநபியின் இறங்குதலை மறுக்காது. ஏனெனில் அவர் நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத் பெற்றவராவார். மேலும் அவர் முகம்மது நபியின் ஷரீஅத்படி செயற்படுபவராக அவரது கிப்லாவை நோக்கி தொழுபவராக அவரது உம்மத்தில் ஒருவரை போல இறங்குவார். (பஹ்ருல்முஹீத் 33:40) (https://www.altafsir.com/Tafasir.asp?tMadhNo=2&tTafsirNo=19&tSoraNo=33&tAyahNo=40&tDisplay=yes&UserProfile=0&LanguageId=1) |
20.அல்கும்மீ நைஸாபூரீ (ஹி 728) |
ومن جملة معلوماته أنه لا نبي بعد محمد صلى الله عليه وسلم ومجيء عيسى عليه السلام في آخر الزمان لا ينافي ذلك لأنه ممن نبئ قبله وهو يجيء على شريعة نبيناً مصلياً إلى قبلته وكأنه بعض أمته. அவரிடமிருந்து அறிவிக்கப்பட்ட வாக்கியங்களின்படி முகம்மது ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களின் பிறகு நபி இல்லை. ஆனால் ஈஸாநபியின் இறுதிக்காலத்திலுள்ள வருகையானது இதை மறுப்பதாகாகாது. ஏனெனில் அவன் நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத் பெற்றவரும் எங்களுடைய நபியின் ஷரீஅத்திலே அவரது திப்லாவை நோக்கி தொழுபவராக அவரது உம்மத்தில் ஒருவரை போன்றே வருவார் (ஙராயிபுல்குர்ஆன் வரஙாயிபுல்ஃபுர்கான் 33:40) |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (14)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 10
22.ஸஃலபீ (427) |
واختلف القرّاء في قوله { خَاتَمَ ٱلنَّبِيِّينَ } فقرأ الحسن وعاصم بفتح التاء على الاسم، أي آخر النَّبِين. كقوله: خاتمه مسك، أي آخره. وقرأ الآخرون بكسر التاء على الفاعل، أي أنّه خاتم النبيّين بالنبوّة ஹசனுல்பஸரீ மற்றும் ஆஸிம் ஃபத்ஹ் செய்து காதம் (நபிமார்களின்முத்திரை) என்று ஓதியுள்ளனர். அதன் அர்த்தம் நபிமார்களின் இறுதியானவர். அதன்முத்திரை கஸ்தூரி என்ற அவனுடைய கூற்றை போல. அதாவது அதன் இறுதி என்பதாகும். ஏனையோர் கஸ்ர் செய்து காதிம் என்று ஓதியுள்ளனர். அதன் அர்த்தம் அவர் நுபுவ்வத்மூலம் நபிமார்களை முத்திரையிடுபவர்/முடித்துவைப்பவர். கஷ்ஃபுல்பயான் 33:40 |
23.தபரானீ (360) |
قرأ الحسنُ وعاصم (وَخَاتَمَ النَّبيِّيْنَ) بفتحِ التاء؛ أي آخِرَ النَّبيِّينَ، وقرأ الباقونَ بكسرِ التَّاء على الفاعلِ؛ أي إنه خَتَمَ النَّبيينَ بالنبوَّةِ மேலே கூறிய அதுவாசகம். தஃப்சீருல்கபீர் 33:40 |
24.மாத்ரூதீ (333) |
قال: { وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ } ، أي: ختم به الرسالة لا نبي بعده ஆயினும் அவர் அல்லாஹ்வின்தூதரும் நபிமார்களின் முத்திரையாகவும்ஸிருக்கிறார். அதாவது தூதுத்துவம் அவர்மூலமாக முத்திரையிடப்பட்டடது/முடித்துவைக்கப்பட்டது. அவருக்கா பிறகு நபி கிடையாது. தஃவீலாது அஹ்லுஸ்ஸுன்னா 33:44 |
முகம்மது நபியே கடைசி நபி- அவருக்கு பின் எந்த நபியுமில்லை! (15)
காதமுன்நபிய்யீனுக்கான (33:40) தஃப்சீர் விளக்கங்கள் 11 முடிவு
25.அபூபக்ர் ஸஜிஸ்தானீ (ஹி 330) |
وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ }: آخر النبيين. காதமன்நபிய்யீன்- நபிமார்களில் இறுதியானவர். கிதாப் நஸ்ஹதுல்குலூப் 33:40 |
26.மக்கீ இப்னு அபீதாலிப் 437 (இவர் ஸூஃபி) |
وَخَاتَمَ ٱلنَّبِيِّينَ } أي: آخرهم. هذا على قراءة من فتح التاء. ومن كسرها فمعناها: أي طبع على النبوة فلا تفتح لأحد بعده. காதமன்நபிய்யீன்(நபிமார்களின் முத்திரை) அர்த்தம் அவர்களில் இறுதியானவர். இது ஃபத்ஹ் செய்து காதம் என்று ஓதியதன்படி வரும அர்த்தம். அதை கஸ்ர் செய்து ஓதியவர்களி அர்த்தம் (காதிமுந்நபிய்யீன்) : நுபுவ்வத்தின்மீது முத்திரையிட்டார் அது அவருக்குப்பிறகு வேறு யாருக்கும் திறக்கப்பட மாட்டாது என்பதாகும். தஃப்சீருல்ஹிதாயா 33:40 |
இவ்வாறு பொதுவாக எல்லா தஃப்சீர்களிலும் இதன் அர்த்தம் முகம்மது நபி கடைசியானவர் என்றே கூறப்பட்டுள்ளது. அது காதமுந்நபிய்யீன் என்றாலும் காதிமுன்நபிய்யீன் என்றாலும் கடைசி என்றும் முடிவு என்றுமே கூறியுள்ளனர். நபிகளாரும் அவ்வாறே கூறியுள்ளார்கள்.
ஸமர்கந்தீ,பைளாவீ, ஜலாலைன், மவர்தீ,நஸஃபீ, இப்னுஃகாஸின் , அபூஹைய்யான்,அல்கும்மீநைஸாபூரீ ஆகிய எட்டு பேரும் இதிலே ஈஸா நபியையும் நுழைவித்து, ஈஸா நபி முன்பே நுபுவ்வத் பெற்றவரும் நபியின் ஷரீஅத்படி செயற்பட இருப்பவரும் ஆவார் என்றும் இதன் அர்த்தம் நபிகளாருக்கு பிறகு புதிதாக எவரும் நுபுவ்வத் பெற முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளனர்.
Comments
Post a Comment