பொய்யர் மிர்சா காதியானியின் பார்வையில் இறுதி நபித்துவமும் நம் மறுப்பும்

 

8.பொய்யர் மிர்சா காதியானியின் பார்வையில் இறுதி நபித்துவம்

 

*பொய்யர் மிர்சா காதியானியின் பார்வையில் இறுதி நபித்துவம்*

மிர்சா காதியானி 1901வரை `காதமுன்நபிய்யீன்` என்றால் முகம்மது நபி தான் `கடைசி நபி` என்றும் `அவருக்கு பின் புதிதாகவோ அல்லது பழையதாகவோ எந்த நபியும் வர முடியாது` என்றும் கூறினார். ஈஸா நபி மரணித்துவிட்டார் என்பதற்கு ஆதாரமாக காதமுன்நபிய்யீன் வசனமான 33:40ஐயும் முக்கியமான ஓர் ஆதாரமாக (21வது) காட்டினார்.

 நுபுவ்வத்துடைய வஹீ இருக்காது என்றும் இறைவனால் பேசப்படும் முஹத்தஸ் தோன்றமுடியும் என்றும் வாதிட்டார்.

ஆரம்பத்தில் ஈஸா நபியிற்கு வஹீ வரும் என்ற முஸ்லிம் ஹதீஸை மறுத்தார். காரணம் வரக்கூடியவர் நபி அல்ல என்று அதிலே அல்லாஹ்வின் நபி ஈஸா என்றுள்ளதாலும் மறுத்தார்.

அதே நேரம் ஹதீஸ்களில் கூறப்படும் `வாக்களிக்கப்பட்ட  மர்யமின் மகன் ஈஸா நான் தான்` என்றும் `நான் ஒரு உண்மையான நபி அல்ல மாறாக நிழல் நபி` என்று வாதிட்டார். அதாவது ஒரு நபியின் நிழல் மட்டுமே என்றார்.

இறுதியாக 1901வாக்கில் தன்னை நபி என பகிரங்கமாகவே அறிவித்தார்.

 அப்படியானால், `காதமுன்நபிய்யீன் (நபிமார்களின் முத்திரை எனும் கடைசியானவர்)` என்பதற்கும் `லாநபிய்யபஃதீ (என்க்கு பின் நபியில்லை)` என்பதற்கும் முரண்பாடு வருமே என்பதால் அதற்கான ஒரு சமாளிப்பை முன்வைத்தார்.

அதாவது `நான் என்னை முகம்மது நபியிற்குள்ளே மாய்த்துக்கெண்டேன் (ஃபனாஃபிர்ரஸூல்). இதன்காரணமாக நான் முகம்மது நபியாகவும் அஹ்மது நபியாகவும் ஆகிவிட்டேன் என்றும் என்னிடம் இருப்பது முகம்மது நபியின் அதே கடைசி நபித்துவம் தான் என்றும் நான் அதே முகம்மது நபி தான் என்றும் நானே முகம்மது நபியாக இருப்பதால், முகம்மது நபி கடைசி நபியாக இருக்கிறார் என்பதில் முரண்பாடு இல்லை` என சமாளித்தார். (இங்கேயும் பொய்யர் முகம்மது நபி கடைசி நபி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.)

பிறகு காலம்செல்லச்செல்ல ஈஸா நபியின் ரூஹ், முகம்மது நபியின் ரூஹ், மற்ற எல்லா நபிமார்களின் ரூஹும் என் உடம்பினுள் வெளிப்பட்டுள்ளது (புரூஸ் ஆகியுள்ளது) என்றார். அதாவது அத்தனை நபிமார்களும் தன் உடலில் இறங்கியுள்ளார்கள் என உருட்டினார்.

தன்னை ஏற்றுக்கொள்ளாத முஸ்லிம்கள் `அஹ்லுல்கிதாப்` போன்றவர்கள் என்றும் `அவர்கள் முஸ்லிம்கள் அல்ல` என்றும் `அவர்களுக்கு ஜனாஸா தொழ கூடாது` என்றும், `அவர்களின் ஆண்களுக்கு தன் ஜமாத்தின் பெண்களை முடித்துக்கொடுக்க கூடாது` என்றும் ஆனால் `முஸ்லிம்களின் பெண்களை தன் ஜமாத்தை சேர்ந்தவர்கள் முடித்துக்கொள்ளலாம்` என்றும் கூறினார்.

இவரது மரணத்தின் பின் ஹகீம்நூர்தீன் தலைமையேற்றார். அவரும் மரணித்தபின் அஹ்மதிகளுக்குள்ளே பிரிவினை உண்டானது.

 அதாவது *மிர்சா உண்மையிலேயே நபி தானா அல்லது முகம்மது நபி தான் கடைசிநபியா என பிரிவினை ஏற்பட்டது*.

 முகம்மது நபி தான் கடைசி நபி என்றும் மிர்சா ஒரு முஜத்தித் (புத்துயிர்கொடுக்கவந்தவர்) என்றும் லாஹூரிகள் வாதிட்டனர்.

 காதியானிகளோ மிர்சாவும் நபி தான் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என வாதிட்டனர்.

இதன்போது மிர்சா குலாமின் வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதியாக கருதப்படும் மகன் மிர்சா பஷீருதீன் மஹ்மூத்அஹ்மத் என்பவர் தன் தந்தையையே மிஞ்சும் பொய்களை அளந்துவிட்டார்.

 அதிலே உலகத்திலேயே 1300 வருடங்களாக இல்லாத புதுவிளக்கத்தை *"காதமுன்நபிய்யீன்"* என்பதற்கு வழங்கினார்.

 அதாவது முகம்மது நபி *நபிமார்களின் முத்திரை* என்றால், `முகம்மது நபியால் முத்திரை குத்தப்பட்டு நபியாக முடியும்` என்றும் `முகம்மது நபியால் முத்திரை குத்தப்படாமல் யாரும் நபியாக முடியாது` என்றும் புது உருட்டாக உருட்டினார்.

 இதற்காக ஹதீஸ்களுக்கு டிசைன் டிசைனாக புதுவிளக்கம் கொடுத்து, `"எனக்கு பின் நபி இல்லை"` என்றால் `"எனக்கு எதிராக நபி இல்லை"` என்று அர்த்தம் என்றும் `"என்னுடைய இடத்தில் வேறு நபி இல்லை"` என்று அர்த்தம் என்றும் உருட்டினார்.

 உலகத்திலேயே இப்படியொரு விளக்கத்தை யாருமே கொடுத்ததில்லை.

 அத்தோடு மிர்சாகாதியானி,  முகம்மது நபியின் இரண்டாம் வருகை என்றும் உருட்டினார்.

இதற்காக சில இமாம்கள் ஈஸா நபியின் வருகையை குறித்து ஷரீஅத் இல்லாத நபி வரமுடியும் என்று சொன்னதை தன் தகப்பனை போன்ற தஜ்ஜால்கள் நபிமார்களாக முடியும் என்பது போல உருட்டினார்.

 *இப்னு அரபி* போன்றவர்கள் நுபுவ்வத்தின் ஒரு பகுதியை (முபஷ்ஷிராத்) அவ்லியாக்கள் அடையமுடியும் என்று கருதியதை புதிதாக நபி வரமுடியும் என இப்னு அரபி கூறியதாக உருட்டினார்.

இப்படி இமாம்கள் பெயரிலும் கூச்சமேயில்லாமல் பொய்களை அள்ளிவீசி தன் தகப்பன் உண்மையிலேயே நபி தான் என்றும் அவரை ஏற்றுக்கொள்ளாதோர் காஃபிர்கள் என்றும் எழுதினார். இதுவே இப்போதைய அகமதிய நம்பிக்கையாகும்.

ஆனால் பொய்யரான இவரது தகப்பனோ காதமுன்நபிய்யீன் என்றால் கடைசி நபி தான் என ஒப்புக்கொண்டதை இவரே மறுத்துவிட்டு, அதெல்லாம் மன்ஸூக் (மாற்றப்பட்டுவிட்டது) என்று கூறியுள்ளார்.

இனி இவரது தகப்பனாரின் விளக்கத்தை பார்ப்போம்

1.முகம்மது நபி காதமுன்நபிய்யீன் என்பதன் மூலம் நபிமார்களை முடிவுக்கு கொண்டுவருவர் என்பதே விளக்கம் என்கிறார். இதன்படி முகம்மது நபியிற்கு பின் ஒரு தூதர் வரமுடியாது என்றும் அதனால் ஈஸா நபியும் வரமுடியாது என்கிறார். காரணம் தூதுத்துவத்திற்கான வஹீ மறுமைவரை நின்றுவிட்டது என்கிறார். ஈஸா நபியிடம் இருக்கும் ரிஸாலத் இதை தடுக்கிறது என வாதிடுகிறார் (ஈஸா நபி மேட்டருக்கு கீழே நான் மறுப்பு கூறுகிறேன்)

 

(۲۱) اکیسویں آیت یہ ہے مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّنَ کے یعنی محمد صلی اللہ علیہ وسلم تم میں سے کسی مرد کا باپ نہیں ہے مگر وہ رسول اللہ ہے اور ختم کرنے والا نبیوں کا ۔ یہ آیت بھی صاف دلالت کر رہی ہے کہ بعد ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے کوئی رسول دنیا میں نہیں آئے گا ۔ پس اس سے بھی بکمال وضاحت ثابت ہے کہ مسیح ابن مریم رسول اللہ دنیا میں آ نہیں سکتا۔ کیونکہ مسیح ابن مریم رسول ہے اور رسول کی حقیقت اور ماہیت میں یہ امر داخل ہے کہ دینی علوم کو بذریعہ جبرائیل حاصل کرے۔ اور ابھی ثابت ہو چکا ہے کہ اب وحی رسالت تا بقیامت منقطع ہے۔ اس سے ضروری طور پر یہ ماننا پڑتا ہے کہ مسیح ابن مریم ہر گز نہیں آئے گا اور یہ امر خود مستلزم اس بات کو ہے کہ وہ مر گیا۔ اور یہ خیال کہ پھر وہ موت کے بعد زندہ ہو گیا مخالف کو کچھ فائدہ نہیں پہنچا سکتا۔ کیونکہ اگر وہ زندہ بھی ہو گیا تاہم اس کی رسالت جو اس کے لئے لازم غیر منفک ہے اس کے دنیا میں آنے سے روکتی ہے۔ ماسوا اس کے ہم بیان کر آئے ہیں کہ مسیح کا مرنے کے بعد زندہ ہونا اس قسم کا نہیں جیسا کہ خیال کیا گیا ہے بلکہ شہداء کی زندگی کے موافق ہے جس میں مراتب قرب و کمال حاصل ہوتے ہیں۔ اس قسم کی حیات کا قرآن کریم میں جابجا بیان ہے۔

 

 தமிழ் மொழிபெயர்ப்பு:

*(21) இருபத்தி ஒன்றாவது வசனம் இதுதான்:*

مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّنَ

*அதாவது:* முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உங்களில் எந்த ஆணுக்கும் தந்தை அல்லர். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதர் மற்றும் நபிமார்களை முடிவுக்கு கொண்டு வருபவர் ஆவார்.

இந்த வசனமும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது என்னவென்றால், நமது நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு உலகில் எந்தத் தூதரும் வரமாட்டார். எனவே இதன் மூலம் மிகத் தெளிவாக நிரூபணமாகிறது என்னவென்றால், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் உலகில் வர முடியாது.

*ஏனென்றால்* மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதராவார். தூதரின் உண்மை நிலை மற்றும் சாராம்சத்தில் இந்த விஷயம் அடங்கியுள்ளது: அவர் மார்க்க ஞானங்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாகப் பெற வேண்டும். தூதுத்துவ வஹீ இப்போது கியாமத் நாள் வரை நிறுத்தப்பட்டுவிட்டது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து அவசியமாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிறது: மர்யமின் மகன் மஸீஹ் ஒருபோதும் வரமாட்டார். மேலும் இந்த விஷயமே அவர் மரணித்துவிட்டார் என்பதை அவசியமாக்குகிறது.

மேலும், "அவர் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்பெற்றார்" என்ற எண்ணம் எதிரிக்கு எந்தப் பயனையும் தராது. ஏனென்றால், அவர் உயிர்பெற்றிருந்தாலும் கூட, அவருக்குப் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ள தூதுத்துவம் அவர் உலகில் வருவதைத் தடுக்கிறது.

இது தவிர, மஸீஹ் மரணத்திற்குப் பிறகு உயிர்பெறுவது என்பது எண்ணப்படுவது போன்றதல்ல, மாறாக ஷஹீதுகளின் வாழ்க்கைக்கு ஒப்பானதாகும் என்று நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அதில் நெருக்கம் மற்றும் பரிபூரணத்தின் படித்தரங்கள் கிடைக்கின்றன. இந்த வகையான வாழ்க்கை பற்றி குர்ஆன் கரீமில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://archive.org/details/RuhaniKhazainVol03_201707/page/n462/mode/1up

(463&464 of 727)

ரூஹானி கஸாயின் 3/431&432 ,இஸாலா அவ்ஹாம் 614-615

ஈஸா நபி மேட்டருக்கு என் மறுப்பு: நபிகளாருக்கு பிறகு எவரும் நுபுவ்வத்தோ ரிஸாலத்தோ பெற முடியாது . ஆனால் ஈஸா நபியோ முன்பே நபியாகவும் ரஸூலாகவும் உள்ளவர். அவர் வருவதால் இறுதி நபித்துவம் பாதிக்கப்பட மாட்டாது. அத்தோடு அவரது ரிஸாலத் பனூஇஸ்ராயீலுக்கானது. அதை அவர் பூரணமாக நிறைவேற்றிவிட்டார். அந்தஸ்த்தில் அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தாலும் அவர் நபிகளாருக்கு முன்னுள்ள நபியே ஆவார். பிறகுள்ளவர் அல்ல! இந்த உம்மத்தின் இமாமை பின்பற்றி தொழுபவராகவும் (முஸ்லிம் 247 (156)), நபிகளாரின் உம்மத்தை சேர்ந்துகொண்டு அதில் ஒருவராகவே இருந்துகொண்டே முஸ்லிம்களை வழிநடத்துவார் (முஸ்லிம் 246 (155f))

2.முகம்மது நபி காதமுன்நபிய்யீன் ஆக இருப்பதால், அவருக்கு பின் நபி வர முடியாது. இந்த உம்மத்தில் நபிகளாரை பின்பற்றும் நபியாக கூட வர முடியாது என்று அடித்துக்கூறுகிறார் பொய்யர் மிர்சா காதியானி (இது ஈஸா நபியை மவ்த்தாக்குவதற்காக வைத்த வாதம் தான்)

 

پھر میں اصل کلام کی طرف عود کر کے کہتا ہوں کہ ہمارے نبی صلی اللہ علیہ وسلم کا خاتم الانبیاء ہونا بھی حضرت عیسی علیہ السلام کی موت کو ہی چاہتا ہے کیونکہ آپ کے بعد اگر کوئی دوسرا نبی آ جائے تو آپ خاتم الانبیاء نہیں ٹھہر سکتے اور نہ سلسلہ وحی نبوت کا منقطع متصور ہو سکتا ہے۔ اور اگر فرض بھی کر لیں کہ حضرت عیسیٰ امتی ہو کر آئیں گے تو شان نبوت تو اُن سے منقطع نہیں ہوگی گو امتیوں کی طرح وہ شریعت اسلام کی پابندی بھی کریں ۔ مگر یہ تو نہیں کہہ سکتے کہ اس وقت وہ خدا تعالی کے علم میں نبی نہیں ہوں گے اور اگر خدا تعالیٰ کے علم میں وہ نبی ہوں گے تو وہی اعتراض لازم آیا کہ خاتم الانبیاء صلی اللہ علیہ وسلم کے بعد ایک نبی دنیا میں آگیا اور اس میں آنحضرت صلی اللہ علیہ وسلم کی شان کا استخفاف اور نص صریح قرآن کی تکذیب لازم آتی ہے۔

 

தமிழ் மொழிபெயர்ப்பு

"மீண்டும் நான் அசல் விஷயத்திற்குத் திரும்பிச் சொல்கிறேன்: நமது நபி (ஸல்) அவர்கள் 'காதமுன் அன்பியா' (இறுதித் தூதர்) என்பதும் ஈஸா (அலை) அவர்களின் மரணத்தையே வேண்டுகிறது. ஏனெனில், அவர்களுக்குப் பிறகு மற்றொரு நபி வந்தால், அவர்கள் 'காதமுன் அன்பியா'வாக இருக்க முடியாது, மேலும் நுபுவ்வத்தின் (தூதுத்துவத்தின்) வஹீத் தொடர் முற்றுப்பெற்றதாகக் கருதப்படவும் முடியாது."

"ஈஸா (அலை) அவர்கள் ஒரு உம்மத்தியாக (நபித்துவப் பின்பற்றுபவராக) வருவார்கள் என்று நாம் கற்பனை செய்தாலும், அவர்களிடமிருந்து நபித்துவத்தின் அந்தஸ்து நீங்கிவிடாது. அவர்கள் மற்ற உம்மத்திகளைப் போலவே இஸ்லாமிய ஷரியத்தைப் பின்பற்றினாலும், அந்த நேரத்தில் அவர் இறைவனின் பார்வையில் ஒரு 'நபி' அல்ல என்று நாம் கூற முடியாது."

"அவர் இறைவனின் அறிவில் ஒரு நபியாக இருந்தால், 'காதமுன் அன்பியா' (ஸல்) அவர்களுக்குப் பிறகு உலகில் ஒரு நபி வந்துவிட்டார் என்ற அதே ஆட்சேபனை மீண்டும் எழும். இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைக் குறைப்பதாகவும், குர்ஆனின் தெளிவான வசனங்களைப் பொய்யாக்குவதாகவும் அமையும்

ரூஹானீ கஸாயீன் 14/392 ,அய்யாமுஸ்ஸுல்ஹ் 146

https://archive.org/details/RuhaniKhazainVol14_201707/page/n410/mode/1up

(411 of 537)

ஈஸா நபி மேட்டருக்கு என் மறுப்பு:  ஈஸா நபி உம்மத்தியாக வருவதால் காதமுன்நபிய்யீனுக்கு மாற்றம் வராது. காரணம் அவர் ஏற்கனவே நபியாக இருப்பதால், முகம்மது நபியிற்கு பின் நுபுவ்வத் பெறுபவரல்ல. அதனால் அவர் முகம்மது நபியிற்கு பின்னுள்ள நபியாக மாட்டார். நபிகளாருக்கு முன்புள்ள ஆயுள் நீடிக்கப்பட்ட நபியாகவே இருப்பார். இதனால் முகம்மது நபி கடைசி நபி என்பதில் மாற்றம் வராது!

3.காதமுன்நபிய்யீன் என்றால் கடைசி நபி தான். ஈஸா நபி மீண்டும் வந்தால் ஈஸா நபி தான் காதமுன்நபிய்யீனாக இருப்பார் என கூறுகிறார் பொய்யர் மிர்சா காதியானி (எப்படியாவது ஈஸா நபியை மவ்தாக்கனும் என்பதற்காக இறுதி நபித்துவத்தை வைத்தே வாதிடுகிறார். அத்தோடு முகம்மது நபியைக்கொண்டு அல்லாஹ் நபிமார்களின் வருகையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டான் என்றும் அவரது மரணத்தின்பின்  வஹீ துண்டிக்கப்பட்டுவிட்டது என்றும் ஒப்புக்கொள்கிறார்

 

وأما ذكر نزول عيسى ابن مريم فما كان لمؤمن أن يحمل هذا الاسم المذكور في الأحاديث على ظاهر معناه، لأنه يخالف قول الله عز وجل مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللهِ وَخَاتَمَ النَّبِينَ ألا تعلم أن الرب الرحيم المتفضل سمى نبينا صلى الله عليه وسلم خاتم الأنبياء بغير استثناء ، وفسره نبينا في قوله لا نبي بعدى ببيان واضح للطالبين ولو جوزنا ظهور نبي بعد نبينا لجوزنا انفتاح باب وحى النبوة بعد تعليقها، وهذا خلف كما لا يخفى على المسلمين، وكيف يجيء نبي بعد رسولنا صلعم وقد انقطع الوحى بعد وفاته وختم الله به النبيين. أنعتقد بأن عيسى الذي أنزل عليه الإنجيل هو خاتم الأنبياء ، لا رسولنا صلى الله عليه وسلم

மர்யமின் மகன் ஈஸா இறங்கி வருவது பற்றிய குறிப்பைப் பொறுத்தவரை, ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பெயரை அதன் வெளிப்படையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்வது எந்த ஒரு முஃமினுக்கும் தகாது. ஏனென்றால், அது அல்லாஹ்வின் இந்தக் கூற்றுக்கு முரண்படுகிறது:

*“முஹம்மது உங்களில் எந்த ஆணுக்கும் தந்தை அல்லர். ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதர் மற்றும் நபிமார்களின் முத்திரையாவார்.”*

கருணையும் அருளும் உடைய ரப்பு, நமது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை எந்த விதிவிலக்கும் இன்றிகாதமுல் அன்பியாஎன்று பெயரிட்டுள்ளார் என்பதை நீங்கள் அறியவில்லையா? நமது நபியும் "எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்ற தனது கூற்றில் தேடுபவர்களுக்கு தெளிவான விளக்கத்துடன் அதை விளக்கியுள்ளார்.

நமது நபிக்குப் பிறகு ஒரு நபி தோன்றுவதை நாம் அனுமதித்தால், நபித்துவ வஹீ முடிவுக்கு வந்த பிறகு அதன் வாசல் மீண்டும் திறக்கப்படுவதையும் அனுமதித்ததாக ஆகிவிடும். இது முரண்பாடாகும் என்பது முஸ்லிம்களுக்கு மறைவானதல்ல.

நமது தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு எப்படி ஒரு நபி வர முடியும்? அவரது மரணத்திற்குப் பிறகு வஹீ துண்டிக்கப்பட்டுவிட்டது. அவரைக் கொண்டே அல்லாஹ் நபிமார்களை முடிவுக்கு கொண்டு வந்தான்.

இன்ஜீல் இறக்கப்பட்ட ஈஸாதான்காதமுல் அன்பியாஎன்றும், நமது தூதர் (ஸல்) அல்ல என்றும் நாம் நம்புவதா?

ரூஹானி கஸாயின் 7/200-201, ஹமாமதுல்புஷ்ரா 20-21

https://archive.org/details/RuhaniKhazainVol07_20190115/page/n231/mode/1up

(232-233 of 407)

ஈஸா நபி மேட்டருக்கு நம் மறுப்பு:

ஈஸா நபி மீண்டும் வருவதால் அவர் காதமுல்அன்பியாவாக ஆகமாட்டார். காரணம், அவர் நபிமார்களின் வருகையில் கடைசி நபியான காதமுல்அன்பியா முகம்மது (ஸல்) அவர்களுக்கு முன்பே நுபுவ்வத் பெற்றவராவார்.. கடைசியாக நுபுவ்வத் பெற்றவரே கடைசி நபி மற்றும் காதமுல்அன்பியா ஆவார்!

இதை பொய்யர் மிர்சாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஈஸா நபி தான் இஸ்ரவேலரின் காதமுல்அன்பியா என கூறியுள்ளார்

اور نیز یہ راز بھی کہ اخیرج پر بنی اسرائیل کے خاتم الانبیاء کا نام جو عیسی ہے اور اسلام کے خاتم الانبیاء کا نام جو احمد اور محمد ہے ( صلی اللہ علیہ وسلم ) یہ دونوں نام بھی میرے نام کیوں رکھ دیئے ؟ ان تمام چھپی ہوئی حقیقتوں کا بھی انکشاف ہو گیا

"மேலும் இந்த இரகசியமும் - பனூ இஸ்ராயீலின் காதமுல் அன்பியா - நபிமார்களின் முத்திரை - ஆகிய ஈஸா என்ற பெயரும், இஸ்லாத்தின் காதமுல் அன்பியா ஆகிய அஹ்மத் மற்றும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ற பெயரும், இவ்விரு பெயர்களும் ஏன் என் பெயராக வைக்கப்பட்டன? இந்த மறைந்திருந்த அனைத்து உண்மைகளும் வெளிப்பட்டுவிட்டன."

ரூஹானி கஸாயின் 21/412, காதிமது நுஸ்ரதில்ஹக்  ب

https://archive.org/details/RuhaniKhazainVol21_201707/page/n428/mode/1up

 

இங்கே பொய்யர் பனூஇஸ்ராயீலின் காதமுல்அன்பியா ஈஸா நபி என்றும் , இஸ்லாத்தின் காதமுல்அன்பியா முகம்மது நபி என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். ஈஸா நபி தான் இஸ்ரவேலரில் வந்த கடைசி நபி. ஈஸா நபி  தான் அனைத்து இஸ்ராயீல் நபிமார்களிலும்  சிறந்தவர் அல்ல!!  ஆனால் முகம்மது நபியோ கடைசியாகவும் அனைவரைவிடவுமாஜசிறந்தவராகவும் உள்ளார்கள்

4.காதமுன்நபிய்யீனுக்கு பிறகு பழைய தூதரும் வர முடியாது புதிய தூதரும் வர முடியாது என்கிறார் பொய்யர் (ஈஸா நபி மவ்த்தாக்குவதற்கு வைக்கும் வாதமே இது. கீழே நாம் மறுப்பு கொடுக்கிறோம்)

 

چهارم - قرآن کریم بعد خاتم النبیین کے کسی رسول کا آنا جائز نہیں رکھتا خواہ وہ نیا رسول ہو یا پرانا ہو ۔ کیونکہ رسول کو علم دین بتوسط جبرائیل ملتا ہے اور باب نزول جبرائیل به پیرایه وحی رسالت مسدود ہے۔ اور یہ بات خود متنع ہے کہ دنیا میں رسول تو آوے مگر سلسلہ وحی رسالت نہ ہو۔

*நான்காவது:* குர்ஆன் கரீம், ‘காதமுன் நபிய்யீன்க்குப் பிறகு எந்த ஒரு தூதரின் வருகையையும் அனுமதிக்கவில்லை அவர் புதிய தூதராக இருந்தாலும் சரி, பழைய தூதராக இருந்தாலும் சரி.

*ஏனென்றால்* தூதருக்கு மார்க்க ஞானம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாகவே கிடைக்கிறது. ஆனால் தூதுத்துவ வஹீயுடன் ஜிப்ரீல் இறங்கி வரும் வாசல் அடைக்கப்பட்டுவிட்டது.

மேலும், உலகில் தூதர் வருவதும், ஆனால் தூதுத்துவ வஹீயின் தொடர் இல்லாமல் இருப்பதும்இது தானாகவே முரண்பாடான, சாத்தியமற்ற விஷயமாகும்.

ரூஹானீ கஸாயின் 3/511 , இஸாலா அவ்ஹாம் 761

https://archive.org/details/RuhaniKhazainVol03_201707/page/n542/mode/1up

இதே போல்:

5.எனக்கு பின் நபி இல்லை என்று முகம்மது நபி சொன்னதால், புது நபியோ பழைய நபியோ வர முடியாது என்கிறார் மிர்சா (இவ்வாறு சொல்ல காரணம்: ஈஸா நபியை மவ்த்தாக்குவதற்கு தான்)

۔ ایسا ہی آپ نے لانبی بعدی کہہ کر کسی نئے نبی یا دوبارہ آنے والے نبی کا قطعاً دروازہ بند کر دیا

அதேபோல், *"எனக்குப் பிறகு நபி இல்லை"* என்று சொல்லி, எந்த ஒரு புதிய நபிக்கும் அல்லது மீண்டும் வரும் நபிக்கும் உள்ள வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டார்கள்.

ரூஹானி கஸாயின் 14/400, அயாமுஸ்ஸுல்ஹ் 152

https://archive.org/details/RuhaniKhazainVol14_201707/page/n417/mode/1up  (418of537)

۔ اور اگر کوئی اور نبی نیا یا پرانا آوے تو ہمارے نبی صلی اللہ علیہ وسلم کیونکر خاتم الانبیاء رہیں۔

 

"மேலும் புதியவரோ பழையவரோ வேறு எந்த நபியாவது வந்தால், நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி காத்தமுல் அன்பியாவாக இருப்பார்கள்?"

ரூஹானி கஸாயின் 14/309, அய்யாமுஸ்ஸுல்ஹ் 74

Onlineஇல் பார்ப்பதற்கு

https://archive.org/details/RuhaniKhazainVol14_201707/page/n327/mode/1up

(328 of 527)

ஆக இங்கே காதமுன்நபிய்யீனுக்கு பிறகு எந்த நபியும் வர முடியாது என்றும் ரிஸாலத்/நுபுவ்வத்உடைய வஹீ இருக்க முடியாது என்றும் பொய்யர் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.

ஈஸா நபி மேட்டருக்கு நம் மறுப்பு:

ஈஸா நபி புதிதாக நுபுவ்வத் பெறுபவரல்ல! இதனால் முகம்மது நபி கடைசி நபி என்பதில் மாற்றம் வராது! காரணம் கடைசியாக நுபுவ்வத் பெற்றவர் தான் கடைசி நபி ஆவார்!!

ஏற்கனவே நபியாக இருப்பவர் அதே அந்தஸ்த்தை உடையநிலையில் , நபிகளாரின் ஷரீஅத்தை நோக்கி முஃமின்களை நபிகளாரின் உம்மத்திலே சேர்ந்தவராக வழிநடத்துவார்கள் (முஸ்லிம் 246 (155f)), அத்தோடு நபிகளாரின் உம்மத்தில் அவர் இன்னொரு இமாமின்கீழே தொழுபவராக இருப்பார் (முஸ்லிம் 247 (156)). இதன்மூலம் முகம்மது நபியிற்கே கட்டுப்பட்டு நடப்பவராக ஈஸா நபி இருப்பார்!

அத்தோடு ஈஸா நபிக்கான வஹீயானது முஃமின்களை எப்படி காப்பாற்றுவது என்பதற்காக இறைவன் இடும் கட்டளைகளாகும். அதாவது யஃஜூஜ் மஃஜூஜ் வெளியாகும்போது முஃமின்களை தூர்மலைக்கு அழைத்து செல்லுமாறு வஹீ அறிவிப்பான் (முஸ்லிம் 5629  (2937a)). இதுவொன்றும் மார்க்க வழிகாட்டலான வஹீ அல்ல!

ஜிஸ்யாவை வாங்க மறுப்பதுகூட ஈஸா நபி நம் தலைவரின் ஷரீஅத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆகாது. காரணம் நபிகளாரே தம் சங்கையான வாய்மூலம் சொன்னதாகும். இதன்படி நபிகளாரின் ஷரீஅத்திலே ஜிஸ்யா வசூலிக்கும்காலம் ஈஸா நபியின் வருகை வரை செல்லுபடியானது என்பதையே நபிகளார் இதன்மூலம் நமக்கு தெளிவாக்கியுள்ளார்கள்.! ஆக இதிலே பொய்யருக்கு எவ்வித சான்றும் இல்லை!!!

6.காதமுன்நபிய்யீனுக்கு பிறகு ஒரு நபியை அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்றும் துண்டிக்கப்பட்டுவிட்ட நபித்துவத்தொடரை மீண்டும் ஆரம்பிப்பது அல்லாஹ்வுக்கு தகாதது என்கிறார் பொய்யர். அத்தோடு காதமுன்நபிய்யீனுக்கு பிறகு நபி வர முடியாது என்றும் முந்தைய ஷரீஅத்தில் இருந்த நபிகளின் இடத்தில் முஹத்தஸ்களே வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் பொய்யர்

 

ما كان الله ان يرسل نبيا بعد نبينا خاتم النبيين . و ما كان ان يحدث سلسلة النبوة ثانيا بعد انقطاعها و ينسخ بعض احکام القرآن و يزيد عليها و يخلف وعده و ينسى اكماله الفرقان ويُحدث الفتن في الدين المتين

நமது நபிகாதமுன் நபிய்யீன்க்குப் பிறகு அல்லாஹ் ஒரு நபியை அனுப்புவது என்பது சாத்தியமில்லை.

நபித்துவத்தின் தொடர் துண்டிக்கப்பட்ட பிறகு அதை மீண்டும் உருவாக்குவதும், குர்ஆனின் சில சட்டங்களை மாற்றுவதும், அதில் கூட்டுவதும், தனது வாக்குறுதியை மீறுவதும், ஃபுர்கானை பூரணப்படுத்தியதை மறந்துவிடுவதும், உறுதியான மார்க்கத்தில் குழப்பங்களை உருவாக்குவதும் அல்லாஹ்வுக்கு தகாதது.

ரூஹானி கஸாயின் 5/377, ஆயினேகமாலாத்தே இஸ்லாம் 377

https://archive.org/details/RuhaniKhazainVol05/page/n396/mode/1up (397of750)

குறிப்பு: ஈஸா நபி மீண்டும் வந்தால் , துண்டிக்கப்பட்ட நபித்துவத்தின் தொடர் மீண்டும் தொடங்குவதாக அமையும் என்று தான் பொய்யர் சொல்ல வருகிறார். ஆனால், உண்மையில் ஈஸா நபி மீண்டும் வருவதால் நுபுவ்வத் மீண்டும் தொடங்காது!! ஏற்கனவே நபியாக இருந்தவரே வருகிறார்!

 

ہمارے سید و رسول صلی اللہ علیہ وسلم خاتم الانبیاء ہیں اور بعد آنحضرت صلی اللہ علیہ وسلم کوئی نبی نہیں آسکتا اس لئے اس شریعت میں نبی کے قائم مقام محدث رکھے گئے اور اس کی طرف اس آیت میں اشارہ ہے

 

நமது தலைவரும் தூதருமான (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்காதமுல் அன்பியாஆவார்கள்.

அன்னாருக்குப் பிறகு எந்த நபியும் வர முடியாது. எனவே இந்த ஷரீஅத்தில் நபியின் இடத்தில்முஹத்தஸ்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதை நோக்கித்தான் இந்த வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரூஹானி கஸாயின் 6/323-324,  ஷஹாததுல்குர்ஆன் 28

https://archive.org/details/ruhani-khazain-vol-06_202507/page/n371/mode/1up (372of502)

பொய்யர் மிர்சாமீது நுபுவ்வத் வாதிடுவதால் காஃபிராகிவிட்டார் என குற்றச்சாட்டு வந்தபோது, நான் முகம்மது நபியை காதமுன்நபிய்யீனாக ஏற்றுள்ளேன் அவருக்கு பிறகு புதிய நபியோ பழைய நபியோ வரமுடியாது என்றும் மறுத்தார்

 

نہ مجھے دعوی نبوت و خروج از امت اور نہ میں منکر معجزات اور ملائک اور نہ ليلة القدر سے انکاری ہوں اور آنحضرت صلی اللہ علیہ وسلم کے خاتم النبیین ہونے کا قائل اور یقین کامل سے جانتا ہوں اور اس بات پر محکم ایمان پر محکم ایمان رکھتا ہوں کہ ہمارے نبی صلعم خاتم الانبیاء ہیں اور آنجناب کے بعد اس امت کیلئے کوئی نبی نہیں آئے گا نیا ہو یا پرانا ہو اور قرآن کریم کا ایک شعشہ یا نقطہ منسوخ نہیں ہو گا ۔ ہاں محدث آئیں گے جو  اللہ جل شانہ سے ہم کلام ہوتے ہیں اور نبوت تامہ کی بعض تامہ کی بعض صفات ظلی طور پر ظلی طور پر اپنے اندر رکھتے ہیں اور بلحاظ بعض وجوہ شان نبوت کے رنگ سے رنگین کئے جاتے ہیں اور ان میں سے میں ایک ہوں

"எனக்கு நுபுவ்வத்  உரிமை கோரும் எண்ணமோ அல்லது இந்த உம்மத்தை விட்டு வெளியேறும் எண்ணமோ இல்லை. நான் முஃஜிஸாத் , மலக்குகள் மற்றும் லைலத்துல் கத்ர் (கழாகத்ரை தான் ஐயா மாற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன்) ஆகியவற்றை மறுப்பவன் அல்ல.

நிச்சயமாக,  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காதமுன் நபிய்யீன்'  என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையும் உறுதியான ஈமானும் உள்ளது. நமது நபிகளாருக்குப் பிறகு இந்த உம்மத்திற்குப் புதியவராகவோ அல்லது பழையவராகவோ எந்த ஒரு நபியும் வரமாட்டார்கள் என்பதையும், திருக்குர்ஆனின் ஒரு புள்ளியோ அல்லது ஒரு சிறு பகுதியோ கூட மாற்றப்படாது (மன்சூக் ஆகாது) என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இருப்பினும், 'முஹத்தஸ்கள்' வருவார்கள்; அவர்கள் அல்லாஹ்வுடன் உரையாடுவார்கள். அவர்கள் முழுமையான நபித்துவத்தின் சில பண்புகளை நிழலைப் போல (நிழல் வடிவில்) கொண்டிருப்பார்கள். சில காரணங்களால் அவர்கள் நபித்துவத்தின் தன்மையால் நிறமூட்டப்படுவார்கள். அத்தகையவர்களில் நானும் ஒருவன்"

ரூஹானி கஸாயின் 4/390-391 ,நிசான்ஆஸ்மானி  28

https://archive.org/details/RuhaniKhazainVol04/page/n423/mode/1up

(423-424of584)

இங்கே பொய்யர் அவர்கள் இந்த உம்மத்தில் முஹத்தஸ்கள் தான் இருப்பார்கள் என்றும் நபிமார்கள் இருக்க மாட்டார்கள் என்றும் வாதிடுகிறார். உண்மையில் முந்தைய உம்மத்களில் நபிமார்கள் அல்லாதவர்களில் இறைவன் உள்ளுதிப்பு வழங்கி பேசியவர்களான முஹத்தஸ்கள் அநேகமானோர் இருந்தனர். இந்த உம்மத்தில் அப்படி முஹத்தஸ்கள் சொற்பமானவர்களே இருப்பார்கள் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் புகாரி 3469,3689 போன்ற ஹதீஸ்களிலிருந்து முடிவுக்கு வந்துள்ளனனர்.

இங்கே பொய்யர் தன்னை முஹத்தஸ் என இங்கே வாதிட்டு , நுபுவ்வத் பெற யாருக்கும் முடியாது என்பதை முன்னிருத்தி பேசுகிறார். காரணம் ஈஸா நபியை மவ்த்தாக்குவதற்காக தான்! ஆனால் ஈஸா நபி மீண்டும் வருவதால் முகம்மது நபியிற்கு பிறகு நபி வந்துவிட்டார் என்றாகாது. காரணம் ஏற்கனவே நபியானவரே வருகிறார். புதிதாக நுபுவ்வத் பெற்றாலே காதமுன்நபிய்யீனுக்கும் எனக்குப்பின் நபியில்லை என்ற நபிமொழிக்கும்  முரண்பாடாக அமையும்!

அடுத்த தலைப்பில்  ஐயா அவர்கள் எப்படி நபியானார் என கதைவிடுகிறார் என்பதை பார்ப்போம்

 

 

 

9.மிர்சா காதியானி நபியாகிய அற்புதமுறை

 

1.முகம்மது நபி காதமுன்நபிய்யீன் ஆக இருப்பதால், அவருக்கு பிறகு பழைய நபியோ புதிய நபியோ வர முடியாது என்கிறார்:

سو اگر یہ کہا جائے کہ آنحضرت صلی اللہ علیہ وسلم خاتم النبیین ہیں - پھر آپ کے بعد اور نبی کس طرح آ سکتا ہے - اس کا جواب یہی ہے کہ بیشک اس طرح سے تو کوئی نبی نیا ہو یا پرانا نہیں آ سکتا

 

"அப்படியானால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காத்தமுன் நபிய்யீன் என்று சொல்லப்பட்டால் - பிறகு அவர்களுக்குப் பிறகு வேறு நபி எப்படி வர முடியும்? இதற்கான பதில் என்னவென்றால், நிச்சயமாக இப்படிப்பட்ட முறையில் புதிய நபியோ பழைய நபியோ வர முடியாது." (ஏக் கலத்தி கா இஸாலா ப.3, ரூஹானிகஸாயின் 18/207)

https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n237/mode/1up (238 of 787)

(இதை ஈஸா நபியை மவ்தாக்குவதற்காகவும் ஈஸா நபி வருவார் என்ற முஸ்லிம்களின் நம்பிக்கையை மறுப்பதற்கும் பாவிக்கிறார்)

2.நபித்துவத்தின் ஒரே ஒரு ஜன்னல் மட்டுமே திறந்துள்ளது மற்ற ஜன்னல்களெல்லாம் மூடியுள்ளது என புதிதாக உருட்டுகிறார் (இந்த ஜன்னல் வழியாக ஐயா நுழைந்து நபியாகிவிடுகிறாராம்!)

*உருது வாசகம்:*

اور ممکن نہیں کہ اب کوئی ہندو یا یہودی یا عیسائی یا کوئی رسمی مسلمان نبی کے لفظ کو اپنی نسبت ثابت کر سکے - نبوت کی تمام کھڑکیاں بند کی گئیں مگر ایک کھڑکی سیرہ صدیقی کی کھلی ہے یعنی فنا فی الرسول کی - پس یہ شخص اس کھڑکی کی راہ سے خدا کے پاس آتا ہے اُسی ظلی طور پر وہی نبوت کی چادر پہنائی جاتی ہے جو نبوت محمدی کی چادر ہے

 

*தமிழ் மொழிபெயர்பு:*

இனி ஒரு இந்து, யூதன், கிறிஸ்தவன் அல்லது ஒரு சாதாரண முஸ்லிம் கூடநபிஎன்ற சொல்லை தன்னுடன் தொடர்புபடுத்தி நிரூபிப்பது சாத்தியமில்லை. நபித்துவத்தின் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டுவிட்டன. ஆனால் ஒரு ஜன்னல் மட்டும் திறந்தே உள்ளது - அது சித்தீக்கியின் வழிமுறையானஃபனா ஃபீ ரஸூல்” ( ரஸூலில் அழிந்து போதல் என்னும் ஜன்னலாகும்). எனவே, எந்த மனிதன் இந்த ஜன்னல் வழியாக அல்லாஹ்விடம் செல்கிறானோ, அவன் மீது நிழல் வடிவில் அதே நபித்துவத்தின் போர்வை போர்த்தப்படுகிறது - அதுவே முஹம்மதிய நபித்துவத்தின் போர்வையாகும்." (ஏக் கலத்தி கா இஸாலா ப.3 , ரூஹானி கஸாயின் 18/207)

https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n237/mode/1up  (238 of 787)

இப்படி அந்த திறந்துள்ள ஜன்னல் வழியாக நபியானாராம். அதென்ன வழினு கீழே சொல்லுவாரு.

3.ஜில்லி (நிழல்) முறையில் நபித்துவ சால்வை முகம்மது நபியின் நுபுவ்வத்தின் சால்வையாக இருந்து, முகம்மது நபியின் மகிமைக்காக நுபுவ்வத் பெறுவாராம். இதனால் நுபுவ்வத்தை பெறுபவரும் முகம்மது&அஹ்மது ஆக வானத்திலே பெயர் பெறுவாராம். இதன்படி கடைசியில் முகம்மது நபியின் நுபுவ்வத் அதே முகம்மது நபியிற்கே கிடைக்கிறதாம். இதனால் காதமுன்நபிய்யீனுக்கு மாற்றம் வராதாம். (காரணம் முகம்மது நபி தானே முகம்மது நபியின் நுபுவ்வத்தை பெறுகிறார்.- இது ஐயாவின் அற்புத கண்டுபிடிப்பு)

*உருது வாசகம்:*

اس لئے اس کا نبی ہونا غیرت کی جگہ نہیں کیونکہ وہ اپنی ذات سے نہیں بلکہ اپنے نبی کے چشمہ سے لیتا ہے اور نہ اپنے لئے بلکہ اسی کے جلال کے لئے -

اس لئے اس کا نام آسمان پر محمد اور احمد ہے - اس کے یہ معنی  ہیں کہ محمد کی نبوت آخر محمد کو ہی ملی - گو بروزی طور پر مگر نہ کسی اور کو - پس یہ آیت کہ _مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلٰكِن رَّسُولَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيِّينَ_ - اس کے معنی یہ ہیں کہ لیس محمد ابا احد من رجال الدنیا ولکن ھو اب لرجال الاخرۃ لانه خاتم النبيين  - ولا سبیل الی فیوض الله من غیر توسطه - غرض میری نبوت اور رسالت باعتبار محمد اور احمد ہونے کے ہے نہ میرے نفس کے رُو سے - اور یہ نام بَحثییت فنا فی الرسول مجھے ملا  - لہذا خاتم النبیین کے مفہوم میں فرق نہ آیا - لیکن عیسیٰ کے اُترنے سے ضرور فرق آئے گا -

 

*தமிழ் மொழிபெயர்பு:*

ஆகவே அவர் நபியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல. ஏனெனில் அவர் தனது சுயத்திலிருந்து பெறுவதில்லை, மாறாக தனது நபியின் ஊற்றிலிருந்தே பெறுகிறார். மேலும் தனக்காக அல்ல, மாறாக அந்த நபியின் மகிமைக்காகவே பெறுகிறார்.

 

அதனால்தான் அவருடைய பெயர் வானத்தில்முஹம்மதுமற்றும்அஹ்மதுஎன்று உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், முஹம்மதின் நபித்துவம் இறுதியில் முஹம்மதுக்கே கிடைத்தது - அதுவும் பரூஸீ தோற்றத்தில் மட்டுமே, வேறு யாருக்கும் அல்ல.

ஆகவே, “முஹம்மது உங்கள் ஆண்களில் ஒருவரின் தந்தையாக இல்லை. ஆனால் அவர் அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கிறார்என்ற இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால்: முஹம்மது இவ்வுலக மனிதர்களில் எவருக்கும் தந்தையல்ல. மாறாக அவர் மறுவுலக மனிதர்களுக்குத் தந்தையாவார். ஏனெனில் அவரே நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். அவர் மூலமின்றி அல்லாஹ்வின் அருள்களைப் பெற வேறு வழியே இல்லை.

சுருக்கமாக, எனது நபித்துவமும் ரிஸாலத்தும்முஹம்மதுமற்றும்அஹ்மதுஎன்ற நிலையின் காரணமாகவே ஆகும், எனது சுயத்தின் காரணமாக அல்ல. மேலும் இந்தப் பெயர்ஃபனா ஃபீ ரஸூல்என்ற நிலையின் காரணமாகவே எனக்குக் கிடைத்தது. எனவேகாதமுன் நபிய்யீன்என்ற கருத்தில் எந்த வேறுபாடும் ஏற்படவில்லை. ஆனால் ஈஸா இறங்குவதால் நிச்சயமாக வேறுபாடு ஏற்படும்.

(ஏக் கலத்தி கா இஸாலா ப.4, ரூஹானி கஸாயின் 18/208)

https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n238/mode/1up (239 of 787)

இங்கே முகம்மது நபியிற்குள் ஃபனா ஆவதால் (தன்னை அழித்துக்கொள்வதால்), முகம்மது நபியினுள் அழிந்துபோனவர் அதே முகம்மது நபியின் பெயரை பெற்று அவரது நுபுவ்வத்தையும் பெற்றுக்கொள்வாராம். இங்கே முகம்மது நபியே மீண்டும் நபியாவதால் முகம்மது நபி காதமுன்நபிய்யீன் என்பதில் மாற்றம் வராது என்கிறார். காரணம் முகம்மது நபி தானே மீண்டும் நபியாகியிருக்கிறார்.

ஆனால் ஈஸா நபி வந்தால் மாற்றம் ஏற்படுமாம்!! அது எப்படினா, ஈஸா நபி வேறு முகம்மது நபி வேறு அல்லவா? மீண்டும் முகம்மது நபி மட்டுமே வரவேண்டுமாம்! என்னவோர் அற்புதம்!!

4.புது ஷரீஅத் உடனோ அல்லது முகம்மது நபியிற்குள் தன்னை அழித்துக்கொள்ளாமல் வானத்திலே அஹ்மதாகவோ முகம்மதாகவோ ஆகாமல் யாரும் நபியாக முடியாது என அற்புத வழி இருப்பதாக கூறுகிறார்:

*உருது வாசகம்:*

فرق درمیان یہ ہے کہ ہمارے نبی صلی اللہ علیہ وسلم کے بعد قیامت تک ایسا نبی کوئی نہیں جس پر جدید شریعت نازل ہو - یا جسکو بغیر توسط اس  آنجناب اور ایسی فنا فی الرسول کی حالت کے جو آسمان پر اس کا نام محمد اور احمد رکھا جائے یو نہی نبوت کالقب عنایت کیاجائے ومن ادعى فقد كفر

 

*தமிழ் மொழிபெயர்பு:*

இதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு கியாமத் வரை, புதிய ஷரீஅத் அருளப்படும்  வேறு எந்த நபியும் வரமாட்டார். அல்லது, அந்தத் திருத்தூதரின் மத்தியஸ்தம் இல்லாமலும், “ஃபனா ஃபீ ரஸூல்” (அதாவது ரஸூலில் அழிந்துபோன நிலை இல்லாமலும்), அவருடைய பெயர் வானத்தில் முஹம்மது மற்றும் அஹ்மது என்று வைக்கப்படாமலும், வெறுமனே நபித்துவம் என்ற பட்டம் கொடுக்கப்பட மாட்டாது.

மேலும் யார் இவ்வாறு உரிமை கொண்டாடினாலும் அவர் நிராகரித்தவராகி விட்டார்." (ஏக் கலத்தி கா இஸாலா ப.4, ரூஹானி கஸாயின் 18/208) https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n238/mode/1up (239 of 787)

அதாவது கடைசி நபி என்பது குழம்பாமல் இருக்க அதே கடைசி நபியாக ஆக வேண்டும் என்கிறார் பொய்யர் அவர்கள். முகம்மது நபியாக மாறாமல் நபித்துவத்தை வாதிட்டவன் காஃபிராகிவிட்டான் என்று முடிக்கிறார்.

5.முகம்மது நபியிலே தன்னை மாய்த்துக்கொள்பவன் அதே முகம்மது நபியாகவும் அதே காதமுன்நபிய்யீனாகவும் ஆகிவிடுகிறானாம்.

*உருது வாசகம்:*

 

لیکن اگر کوئی شخص اسی خاتم النبیین میں ایسا گم ہو کہ بباعث نہایت اتحاد اور نفی غیریت  کے اسی کا نام پا لیا ہو اور صاف آئینہ کی طرح محمدی چہرہ کا اس میں انعکاس ہو گیا ہو تو وہ بغیر مُہر توڑنے کے نبی کہلائے کے   کیونکہ وہ محمد ہے گو ظلی طور پر  - پس باوجود اس شخص کے دعوی نبوت کےاور جس کانام ظلی طور پر محمد اور احمد رکھا گیا پھر بھی سیدنا محمد خاتم النبیین ہی رہا کیونکہ یہ محمد ثانی اسی محمد صلی اللہ علیہ وسلم  کی تصویر اور اسی کا نام ہے مگر

 

*தமிழ் மொழிபெயர்பு:*

ஆனால், ஒருவர் இந்தகாதமுன் நபிய்யீன்என்பதிலேயே முற்றிலும் மூழ்கிப்போய், முழுமையான ஒன்றிப்பு மற்றும் பிறத்தன்மையை மறுத்தலின் காரணமாக, அவருடைய பெயரையே பெற்றுவிட்டு, தெளிவான கண்ணாடியைப் போல முஹம்மதிய முகத்தின் பிம்பம் அவரில் பிரதிபலித்துவிட்டால், அவர் முத்திரையை உடைக்காமலேயே நபி என்று அழைக்கப்படுவார். ஏனெனில் அவர் நிழல் வடிவில் முஹம்மதாகவே இருக்கிறார்.

எனவே, அந்த நபரின் நபித்துவக் வாதம் இருந்தாலும், அவருடைய பெயர் நிழல் வடிவில் முஹம்மது மற்றும் அஹ்மது என்று வைக்கப்பட்டிருந்தாலும்,  செய்யிதுனா முஹம்மது காதமுன் நபிய்யீனாகவே இருப்பார். ஏனெனில் இந்த இரண்டாம் முஹம்மது, அந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிம்பமும் அவர்களின் பெயருமே ஆவார்." (ஏக் கலத்தி கா இஸாலா , ரூஹானிகஸாயின் 18/209) https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n239/mode/1up (240 of 787)

இங்கேயும் காதமுன்நபிய்யீனுக்கு பிறகு வேறொரு நபி வர முடியாது. அதே முகம்மது நபி மட்டுமே வரமுடியும் என்ற புது உருட்டையே வாதிக்கிறார் பொய்யர்.

 

6..மிர்சா நபியானது அதே முகம்மது நபியின் வருகை தானாம். அதரால் புரூஸி ரீதியில் மிர்சாவும் காதமுன்நபிய்யீன் தானாம்.

۔ اور نہ اس سے مہر ختمیت ٹوٹتی ہے کیونکہ میں بار ہا بتلا چکا ہوں کہ میں بموجب آیت وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ بروزی طور پر وہی نبی خاتم الانبیاء ہوں اور خدا نے آج سے بیس برس پہلے براہین احمد یہ میں میرا نام محمد اور احمد رکھا ہے اور مجھے آنحضرت صلی اللہ علیہ وسلم کا ہی وجود قرار دیا ہے پس اس طور سے آنحضرت صلی اللہ علیہ وسلم کے خاتم الانبیاء ہونے میں میری نبوت سے کوئی تزلزل نہیں آیا کیونکہ ظل اپنے اصل سے علیحدہ نہیں ہوتا اور چونکہ میں ظلی طور پر محمد ہوں صلی اللہ علیہ وسلم پس اس طور سے خاتم النبیین کی مہر نہیں ٹوٹی کیونکہ محمدصلی اللہ علیہ وسلم کی نبوت محمد تک ہی محدود رہی یعنی بہر حال محمد صلی اللہ علیہ وسلم ہی نبی رہانہ اور کوئی یعنی جبکہ میں بروزی طور پر آنحضرت صلی اللہ علیہ وسلم ہوں اور بروزی رنگ میں تمام کمالات محمدی مع نبوت محمدیہ کے میرا ے  آئینہ ظلیت مین منعکس ہین  توپھر کونسا الگ انسان ہوا جس نے علیحدہ طور پر نبوت کا دعوی کیا

*தமிழாக்கம்:*

இதனால் 'காத்தமிய்யத்' என்ற முத்திரையும் உடையவில்லை. ஏனென்றால், *" ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹகூ பிஹிம்"* என்ற வசனத்தின் அடிப்படையில், நான் புரூஸ் ரீதியாக அதே காத்தமுல் அன்பியா ஆவேன் என்று நான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளேன்.

மேலும், இன்றிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் 'பராஹீன் அஹ்மதிய்யா'வில் எனக்கு முஹம்மத் மற்றும் அஹ்மத் என்று பெயரிட்டு, என்னை ஹழ்ரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுய வடிவமாகவே தீர்மானித்துவிட்டான்.

ஆகவே, இந்த வகையில் ஹழரத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காத்தமுல் அன்பியா ஆக இருப்பதில் எனது நுபுவ்வத்தால் எந்தக் குறையும் ஏற்படவில்லை. ஏனென்றால் நிழல் அதன் மூலத்திலிருந்து பிரிவதில்லை.

நான் நிழல் வடிவில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவதால், இந்த வகையில் காத்தமுன் நபிய்யீன் என்ற முத்திரை உடையவில்லை. ஏனென்றால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நுபுவ்வத் முஹம்மதுடனேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது - அதாவது எப்படியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நபியாக இருந்தார்கள், வேறு யாரும் அல்ல.

(ஏக் கலத்தி கா இஸாலா, ரூஹானி கஸாயின் 18/212)

https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n242/mode/1up (243 of 787)

 

7.மிர்சா புரூஸியாகி இப்படி நபியானதால், முகம்மது நபியிற்கே தான் நுபுவ்வத் கிடைத்துள்ளதாம்!

 

مجھے بروزی صورت نے نبی اور رسول بنایا ہے اور اسی بنا پر خدا نے بار بار میرا نام نبی اللہ اور رسول اللہ رکھا مگر بروزی صورت میں ۔ میر انفس درمیان نہیں ہے بلکہ حمد مصطفی صلی اللہ علیہ وسلم ہے اس لحاظ سے میرا نام محمد اور احمد ہوا۔ پس نبوت اور رسالت کسی دوسرے کے پاس نہیں گئی محمد کی چیز محمد کے پاس ہی رہی ، علیہ الصلوۃ والسلام

தமிழில்

இந்த 'புரூஸி' நிலை தான் என்னை நபியாகவும் ரசூலாகவும் ஆக்கியுள்ளது. இதன்படிப்படியே அல்லாஹ் மீண்டும் மீண்டும் என்னை 'நபியுல்லாஹ்'  என்றும் 'ரசூலுல்லாஹ்'  என்றும் அழைத்தான். ஆனால், இது புரூஸி நிலையில் மட்டுமே. இதில் என்னுடைய சுயமான ஆன்மா இடையில் இல்லை, மாறாக முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே இருக்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் எனது பெயர் 'முஹம்மது' என்றும் 'அஹ்மது' என்றும் ஆனது. எனவே, நுபுவ்வத்  மற்றும் ரிசாலத் வேறொருவரிடம் செல்லவில்லை; முஹம்மதுக்குரிய விஷயம் முஹம்மதுவிடமே தங்கிவிட்டது (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்)."

" (ஏக் கலத்தி கா இஸாலா ப.12 , ரூஹானிகஸாயின் 18/216)

https://archive.org/details/RuhaniKhazainVol18_201707/page/n245/mode/1up (246 of 787)

இவ்வாறு பொய்யர் மிர்சா காதியானி தன்னை முகம்மது நபியிற்குள் அழித்துக்கொண்டதால், அதே முகம்மது நபியாக வெளிப்பட்டுவிட்டாராம். அதன் காரணமாக முகம்மது நபியின் நுபுவ்வத் முகம்மது நபியாகிய மிர்சாவுக்கே கிடைத்ததால், காதமுன்நபிய்யீன் என்பதிலே மாற்றம் வராது என்றும் புரூஸீ ரீதியாக மிர்சாவும் காதமுன்நபிய்யீன் தான் என்று வாதிக்கிறார். ஆனால் ஈஸா நபி வந்தால், காதமுன்நபிய்யீன் என்ற முத்திரை உடைந்துவிடும் என வாதிட்டு, வரவேண்டிய ஈஸா நான் தான் என்றும் நான் நபியாக இருந்தாலும் காதமுன்நபிய்யீனுக்கு பாதிப்பு வராது என்று தந்திரமாக தன் பக்தர்களை ஏமாற்றியுள்ளார்.

மிர்சா காதியானியின் இந்த தந்திரமான வாதத்திற்கு சுருக்கமான நம் மறுப்பு:

1.புரூஸீ ரீதியாகவோ ழில்லீ ரீதியாகவோ நுபுவ்வத் பெற முடியும் என்று 1300 வருடமாக மிர்சா காதியானிவரை யாரும் சொன்னதில்லை! இது ஐயாவின் தந்திரமான வாதம் மட்டுமே ஆகும்.

2.ஒருவர் புரூஸீ முறையிலோ ழில்லீ முறையிலோ நபியானால்,  முகம்மது நபி போதனைகளை எத்திவைப்பதில் குறைவைத்துவிட்டதால், இன்னொரு முறை வரவேண்டி ஏற்படுவதாக முகம்மது நபியின் மீது அவதூறு கூறுவதாகவே அமைகிறது.

3.புரூஸீ முறையோ ழில்லீ முறையோ, எதுவானாலும் நபியாக வேண்டுமானால்  புதிதாகவே நுபுவ்வத் பெற வேண்டும். ஆனால் நபிகளாரோ, நுபுவ்வத்தும் ரிஸாலத்தும் முடிந்துவிட்டது என்றும் என்க்கு பின்பு நபியோ ரஸூலோ கிடையாது என்றும் (திர்மிதீ 2272) தெளிவாக கூறியுள்ளார்கள். வெறுமனே முபஷ்ஷிராத் ( முஃமின் காண்கிற நல்ல கனவு) மட்டுமே நுபுவ்வத்தில் எஞ்சியுள்ளது.! ஆக ழில்லீ முறையிலோ புரூஸீ முறையிலோ எவரும் நபியாக முடியாது!

4.மிர்சாவின் இந்த வாதம் எப்படி உள்ளது எனில், மனிதன் கடவுளாக முடியாது என்பதற்காக, நான் கடவுளுக்குள்ளே என்னை மாய்த்துக்கொண்டேன் இதனால் நானே அல்லாஹ்வாக ஆகிவிட்டேன். நான் அல்லாஹ்வாக ஆகினாலும் அல்லாஹ் ஒருவன் தான் என்பதிலும் அவனை தவிர வேறு கடவுள் இல்லை என்பதிலும் எந்த மாற்றமும் வராது என்று வாதிடுவது போன்றதே ஆகும்! இது எப்படி தெளிவான குஃப்ராக இருக்கிறதோ, அதுபோன்றே ஒருவர் தன்னை முகம்மது நபியாக ஆக்கி அதன்மூலம் தன்னை நபி என்று வாதிடுவதும் தெளிவான குஃப்ர் ஆகும்! ஏனெனில் எவ்வளவு தந்திரமாக பேசினாலும், முகம்மது நபிக்கு பின்னாலுள்ள போலிநபித்துவ வாதமே இது. (உதாரணமாக ஹாரூன் ரஷீத் காலத்தில் ஒரு பெண் தன்னை நபிய்யா (பெண் நபி) என்று வாதிட்டாள். அத்தோடு முகம்மது நபி தனக்கு பின் நபி (ஆண்) இல்லை என்று தான் சொன்னார்கள். நபிய்யா (பெண் நபி) இல்லை என்று கூறவில்லையே என்று சொன்னது போன்ற கேலிக்குரிய வாதமே இந்த ஃபனாஃபிர்ரஸூல் மூலம் முகம்மது நபியாக முடியும் என்பதும் ஆகும்.)

4.ஈஸா நபியோ ஏற்கனவே நுபுவ்வத் பெற்றவர் என்பதால், அவர் முகம்மது நபியிற்குபின்னுள்ள நபியாக மாட்டார்! அதனால் முகம்மது நபியே காதமுன்நபிய்யீன் ஆவார். முகம்மது நபியிற்கு பின்பு ஈஸா நபி புதிதாக நுபுவ்வத் பெறுவதில்லை! ஈஸா நபி  அவருடைய ஆயுளில் எஞ்சியுள்ளதையே முகம்மது நபியிற்கு பின் வாழ்ந்து மரணிப்பார் என்பதை அபூதாவூத் 4324 ஹதீஸும் வெளிப்படுத்துகிறது! இதனால் ஈஸா நபியின் வருகை ஒருபோதும் காதமுன்நபிய்யீனுக்கு முரணாக ஆகாது. ஆனால் வேறொருவர் புதிதாக நபியாகி ஈஸா என வாதிட்டால், அப்போது தான் காதமுன்நபிய்யீன் முத்திரையை உடைப்பதாக அமையும். அது மிர்சா காதியானியின் செயல் அதை உடைப்பதற்கு சமனான குஃப்ர் ஆகும்!

5.பொய்யர் மிர்சாவின் வாதப்படி, முகம்மது நபியிற்குள் ஃபனாவாகி முகம்மது நபியாக ஆவதால் முகம்மது நபி கடைசி நபி என்பதில் பாதிப்பு வராது எனின், ஒருவன் மூஸா நபிக்குள் ஃபனாவாகினால் அவனும் மூஸா நபியாக ஆகி அதே மூஸா நபியின் நுபுவ்வத்தை தானே பெறுவான். மூஸா நபியின் நுபுவ்வத் காதமுன்நுபுவ்வத்துக்கு முன்புள்ளது என்பதால் இதுவும் சாத்தியம் தானே?

இப்படி ஒருவன் ஈஸா நபிக்குள் ஃபனாவாக ஆகினாலும், மிர்சாவின் அனுகுமுறையின்படி இறுதிநபித்துவத்திற்கு முந்திய ஈஸாவின் நுபுவ்வத்தை தானே பெறுகிறான்.  இப்படி ஈஸா நபியின் புரூஸாக ழில்லீயாக இருப்பதால் கத்முன்நுபுவ்வத் பாதிக்கப்படாது அல்லவா? அப்படியானால், அதே ஈஸா நபி வந்தால் எப்படி  கத்முன்நுபுவ்வத் பாதிக்கப்படும்?

6.இடையிலே காமடியாக, ஈஸா நபி தஜ்ஜாலை கொன்றால் முகம்மது நபியின் மனதை நோகடிக்கும் செயலாம். (ரூஹானி கஸாயின் 18/215) அதற்காக முகம்மது நபியே மிர்சாவின் உடலிலே வெளிப்பட்டு தஜ்ஜாலை கொல்ல வேண்டுமாம்.  தஜ்ஜாலை ஈஸா நபி கொன்றால் என் மனம் புண்படும் என்று முகம்மது நபி சொல்லவில்லை!! ஆனால் தஜ்ஜாலை கொல்லவந்துவிட்டு தஜ்ஜால் சாக முன்பே தஜ்ஜாலின் வாகனத்திலேயே பிணமாக ஏற்றி அனுப்பப்பட்டார் என்று சொன்னால் அப்படியே முகம்மது நபி (ஸல்) சந்தோசப்படுவார்களா? சிலுவையை முறிக்க வந்து முறிந்து அவரே போனால் சந்தோசப்படுவார்களா? காரணம் இன்றும் சிலுவை ஆதிக்கம் செலுத்துகிறதாகவே உள்ளது!

ஆக இந்த தந்தரமான வாதங்கள் செல்லுபடியாகாது.

7.இங்கே முகம்மது நபியின் வெளிப்பாடு என்றும் நிழல் என்றும் கூறிய அதே வாய் தான், தன்னை முகம்மது நபியை விடவும் சிறந்தவர் என்றும் கூறியுள்ளது.

உதாரணமாக

அ.அல்லாஹ்வின் மகனுடைய அந்தஸ்திலே இருக்கிறாராம்

أنت مني بمنزلة توحيدي وتفريدي ، أنت مني بمنزلة عرشي، أنت مني بمنزلة ولدي ، أنت مني بمنزلة لا يعلمها الخلق

நீ என்னிடத்தில் எனது தவ்ஹீதுடையதும் தனித்துவத்தினதும் அந்தஸ்தில் இருக்கிறீர், நீர் என்னிடத்தில் என் அர்ஷுடைய அந்தஸ்தில் இருக்கிறீர். நீர் என்னிடத்தில் என் மகனுடைய அந்தஸ்தில் இருக்கிறீர். நீர் என்னிடத்தில் படைப்புகள் அறியாத அந்தஸ்தில் இருக்கிறீர் (தத்கிரா 718 (ஆங்கிலம்), 1905பெப்ரவரி 1இலே வந்த வஹீ)

அதாவது ஐயா அல்லாஹ்விடம் அவனுடைய மகனுடைய அந்தஸ்திலே இருப்பதாக அல்லாஹ்வே சொன்னதாக கூறுகிறார்.. ஆனால் குர்ஆனின் அடிப்படையே அல்லாஹ்வுக்கு மகன் இருப்பதாக கூறுவதை எச்சரிப்பதாக உள்ளது. (அல்லாஹ் மகனை எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதை இறக்கினான்)- குர்ஆன் 18:4)

ஆ.மிர்சாவின் வருகை முகம்மது நபியின் வருகையைவிட பூரணமானது என்கிறார்.

இந்த நுட்பமான ரகசியத்தை நினைவில் கொள்வது அவசியமாகும்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாம் வருகையில் (بعث دوم), மிகவும் முழுமையான மற்றும் பூரணமான அந்தப் பேரொளி (تجلی اعظم), 'அஹ்மத்' என்ற பெயரின் வெளிப்பாடாகும்.

ஏனெனில், இந்த இரண்டாம் வருகை ஆறாயிரம் ஆண்டுகளின் இறுதியில் நிகழ்கிறது. இந்த ஆறாவது ஆயிரமாண்டு வியாழன் (Jupiter/مشتری) கோளுடன் தொடர்புடையது. இது வானில் பின்வாங்கிச் செல்லும் (مخنس كنس) ஆறு கோள்களில் ஆறாவதாகும். இந்தக் கோளின் தாக்கம் என்னவென்றால், இது இறைத்தூதர்களை இரத்தம் சிந்துவதைத் தடுத்து, அறிவு, ஞானம் மற்றும் ஆதாரங்களைக் கொண்டு வாதிடும் திறனை (Logics/Reasoning) வளர்க்கிறது. (தொஹ்ஃபாகோல்ராவியா ,ரூகானி கஸாயின் 17/253 footnote) 

https://archive.org/details/RUHANI_KHAZAIN_VOL_17/page/n252/mode/1up

.முகம்மது நபியிலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர்:

ومن فرق بيني وبين المصطفى،  فما عرفني ومارأى

எவன் எனக்கும் முஸ்தஃபாவுக்கும் இடையில் வேறுபடுத்தி பிரிக்கிறானோ, அவன் என்னை அறியவுமில்லை என்னை காணவுமில்லை.(ரூஹானிகஸாயின் 16/259, குத்பதுல்இல்ஹாமியா)

https://archive.org/details/ruhani-khazain-vol-16/page/n278/mode/1up  (279of520)

.தன் முன்னறிவிப்பு நிறைவேறாதபோது, முகம்மது நபியை வம்புக்கு இழுத்து, முகம்மது நபி சொன்னதும் நடக்காமல் போயுள்ளது என்று பொய்யாக அவதூறு கூறும் அளவுக்கு நபியின் மீது பேரன்புடையவர்

மிர்சா அஹ்மதுபேக் விசயத்திலுள்ள முன்னறிவிப்பு நிகழாததை இவ்வாறு எழுதுகிறார்.

*தமிழ் மொழிபெயர்பு:*

அல்லாஹ்வின் இந்த நடைமுறையை மறுப்பவரின் நம்பிக்கை எத்தகைய ஆபத்தில் இருக்கிறது!

அவர் என் தீர்கதரிசனத்தை மட்டும் விமர்சிக்கவில்லை, புனித நபியையும் கூட பொய்யாக்குகிறார். உண்மையில், இது கட்டாயமாக எல்லா நபிமார்களையும் மறுப்பதாகவே முடிகிறது.

புனித நபியின் ஹுதைபிய்யா ஒப்பந்த நிகழ்வைக் கருதுங்கள். அதில் மூத்த தோழர்களில் பலர் தடுமாறினர். இருப்பினும் அல்லாஹ் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களைக் காப்பாற்றினான். அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வானாக - ஹஜ்ரத் உமரும் கூட அதில் ஈடுபட்டிருந்தார்.

மற்றொரு நிகழ்வு: புனித நபி அவர்கள் அபூ ஜஹ்ல் இஸ்லாத்தை ஏற்பான் என்று கூறியது.

இவை தவிர, ஈஸா அலைஹிஸ்ஸலாமின் பன்னிரு சீடர்களுக்குப் பன்னிரு சிம்மாசனங்கள் என்ற விஷயம் உள்ளது; யூனுஸ் நபியின் கூட்டத்தின் விஷயமும் உள்ளது. இதே போன்ற ஒரு நிகழ்வு மூஸா அலைஹிஸ்ஸலாமின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது.

இப்படி இருக்க, ஒருவன் முஸ்லிம் என்று அழைக்கப்பட்டாலும், இன்னும் என்னென்ன விஷயங்களை அவன் மறுத்துப் பேசுவானோ என்று நான் ஆச்சரியப்படுகிறேன். (மல்பூஸாத் ஆங்கில மொழிபெயர்ப்பு  பாகம் 10, பக்கம் 282, தலைப்பு Reply to an objection concerning the prophecy about Mirza Ahmad Baig (11/April/1908)

அதாவது அபூஜஹ்ல் முஸ்லிமாவான் என்று நபிகளார் முன்னறிவித்தார்களாம். அது நிகழவில்லையாம். அது போன்று தான் இவர் மிர்சாபேக் குடும்ப விசயத்தில் சொன்னதும் நடக்காமல் போனது என சமாளிக்கிறார்.

இது தான் முகம்மது நபியை நேசிக்கும் லட்சணம்!!

இறுதி நபித்துவம் -முடிவுரை

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.