Answering Qadianism- ebook
இஸ்லாத்திலே பல வழிகெட்டபிரிவுகள் தோன்றிக்கொண்டே இருப்பதோடு தம்மையே ஒரிஜினல்
முஸ்லிம் என்றும் கூறிக்கொள்கின்றனர்.
அந்த வகையில் போலி நபித்துவத்திலே தோற்றுவிக்கப்பட்ட ஒன்றே இந்த அஹ்மதிய்யா
என்பதாகும்.
அஹ்மதிகள் என்போர் இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் மிர்சா
காதியானி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
முஸ்லிம் சமூதாயம் 72 கூட்டமாக பிரிந்ததாகவும், அதனால் 73வது கூட்டமாக ஒரு கூட்டத்தை உருவாக்குவதாக நினைத்து ஒரு ஜமாத்தை உண்டாக்கி, மிஷ்காதுல் மஸாபீஹ்
என்ற ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையாளர் 73 பிரிவாக பிரிவார்கள் என்ற ஹதீஸுக்கு கீழே நேர்வழிபெற்றவர்கள்
யாரென்றால் ஜமாஅதுல் முகம்மதிய்யா வ
அஹ்மதிய்யா என்று சொல்லியிருப்பதால் , அதனோடு
ஒத்துப்போகும் பெயரை தன் பெயரின் இறுதிப்பகுதியிலிருந்து வெட்டி "அஹ்மதிய்யா" என்று பெயரிட்டார்
மிர்சா காதியானி. (அதாவது ஜமாஅதுல் முஸ்லிமீன் எனும் இயக்கம் ஹதீஸிலுள்ள வாசகத்தை தம்
இயக்கத்திற்கு பெயராக இட்டது போன்றே இதுவும் 130 வருடங்கள் முன்பே
ஐயா செய்துவிட்டார்.)
இதேபோன்று இவருக்கு முன்பே சேர் சையது அஹமது என்பவர் தன் தஃப்சீருக்கு
தஃப்சீருல் அஹ்மதீ என்று பெயரிட்டுள்ளார்.
இந்த மிர்சா காதியானி தன்னை ஆரம்பத்தில் முஜத்தித் (சீர்திருத்தவாதி) என்று வாதிட்டார். தனக்கு இல்ஹாம் (உள்ளுதிப்பு) வருவதாகவும் பிறகு
வஹீ வருவதாகவும் வாதிட்டார்.
பிறகு ஈஸா நபி மரணித்துவிட்டார் என்ற சேர் சையது அகமது தன் தஃப்சீரில்
எழுதியதை இவரும் பேசினார். தன்னை இமாம் மஹ்தி என்றும் ஈஸா நபி என்றும் வாதிட்டார். ஈஸா நபி மர்யமின்
மகன் அல்லவா என்று பிரச்சினை வந்ததும், நானே மர்யம் தான். எனக்குள் ஈஸாவின்
ரூஹ் ஊதப்பட்டது. உவமையாக கர்ப்பமாகி ஈஸாவை பெற்று உடனே மர்யமின் மகன் ஈஸாவாகிட்டேன் என்றார்.
முகம்மது நபி தானே கடைசி நபி என்ற
பேச்சு பரவியபோது 1901வாக்கில் எக்காலாத்திகாஇஸாலா என்ற புத்தகத்தை எழுதினார். அதிலே முகம்மது நபி தான் கடைசி நபி
என்றும் ஈஸா நபி வந்தால் கடைசி நபி என்ற வாதம் குழம்பிவிடும் என்றும் நானே என்னை
முகம்மது நபியிற்குள் மாய்த்துக்கொண்டேன். இதனால் நானே முகம்மதாகவும்
அஹ்மதாகவும் ஆகிவிட்டேன் என்றும் என் நுபுவ்வத் முகம்மது நபியின் அதே கடைசி
நுபுவ்வத் தான் என்று கதைவிட்டார்.
இவர் தன் உண்மைத்தன்மைக்கு ஆதாரமாக ஏற்கனவே நடந்தவற்றை, முன்கூட்டியே
அல்லாஹ் எனக்கு வஹீயாக அறிவித்தான் என்று நடந்து முடிந்த பின் சொல்வார். அத்தோடு தன்
விருப்பத்தையும் வெறுப்பையும் வஹீயாக வந்ததாக கூறுவார். இவர் சொன்னது
நடக்காமல் போகும்போது "நான் வஹீயை பிழையாக புரிஞ்சுட்டேன்" அல்லது "எதிரிகள் தவ்பா
செய்துவிட்டதால் அல்லாஹ் தாமதப்படுத்துகிறான்" என்று கதைவிடுவார். ஆனால் இவர் சொன்னது தற்செயலாக நிகழ்ந்துவிட்டால், "பார்த்தீர்களா? அல்லாஹ்வே எனக்கு
சாட்சி கொடுத்து உதவுகிறான். பொய்யனுக்கு அல்லாஹ் உதவுவானா? என்றெல்லாம் கேட்டு சமாளிப்பார்.
இதிலே குறிப்பாக முகம்மதி பேகம் என்ற தாயை திருமணம் முடிக்க விரும்பி, அப்பெண்ணையும் அவரது
கணவரையும் தொல்லைகொடுத்துக்கொண்டேயிருந்தார். அப்பெண்ணை
நிர்வாணமாக மொட்டையடித்தவளாக கனவில் கண்டேன் என்றும் இது அவளது கணவன்
செத்துப்போவதை குறிப்பதாகவும் கடைசியில் நான் தான் முடிப்பேன் என்றும் அல்லாஹ்வே
இதை செய்துவைப்பதாக வஹீ அறிவித்தான் என்றெல்லாம் உருட்டினார். ஆனால் கடைசி வரை
அந்த திருமணம் நிகழவில்லை. இதை சமாளிக்க முகம்மதி பேகத்தின் கணவர் தவ்பா செய்திருப்பார் என்று
கதைவிட்டார்.
அப்துல்லாஹ் ஆதம் என்ற முன்னால் முஸ்லிமாக இருந்து கிறிஸ்தவத்திற்கு
மாறியவனோடு விவாதத்தில் குதித்து, இறுதியிலே 15 மாதத்திலே அவன் செத்துப்போவான் என்றார். அவனோ சாகாதபோது , அவன் பயப்பட்டு
தன்னை தாழ்த்திக்கொண்டிருக்கிறான் அதனால் அல்லாஹ் அவகாசம் கொடுக்கிறான் என்று
சமாளித்தார்.
இப்படி சமாளிப்புக்கேசனிலேயே தன்னை காப்பாற்றிக்கொள்ளும் பெரும்
தந்திரமுள்ளவராக மிர்சாகாதியானி இருந்தார்.
72 கூட்டங்களாக பிரிந்த உம்மத்தை நேர்வழிப்படுத்த 73வது கூட்டத்தை உண்டாக்கினாராம். ஆனால் இவரது ஜமாத் 14ஆக பிரிந்துள்ளதோடு
ஒருவன் மற்றவனை காஃபிர் என்கிறான்.
இதிலே நாம் இவர்களுக்கு மறுப்பாக,
1.இறுதி நபித்துவம்- முகம்மது நபி கடைசி நபி என்றாகிவிட்டால், இவர்களது அடிப்படையே
தூளாகிவிடும்
2.ஈஸா நபியின் மரணம்- ஈஸா நபி இறுதி மரணத்தை இன்னும் அடையவில்லை என்பதாகிவிட்டால், போலி ஈஸா வாதம்
தூளாகிவிடும்
3.மஹ்தீ யார்- உண்மையான மஹ்தீ யாரென அறிந்துகொண்டால், இவரது போலி மஹ்தீய வாதம் முறியடிக்கப்படும்
4.இவர் பொய்யர் என்பதற்கான ஆதாரம்
என்பதாக பிரதானமாக 4 பகுதிகளாக இதை தொகுத்திருக்கிறோம். இவர் குர்ஆனிலே
ஹதீஸிலே இட்டுக்கட்டிய பொய்கள் அநேகமாக உள்ளன அவற்றையெல்லாம் நான் இங்கே தொகுத்து
பதிவிடவில்லை. இல்லாவிட்டால் இது இன்னும் நீளமாக ஆகிவிடும்
இதிலுள்ள பல தகவல்கள் பல இணையத்தளங்களிலிருந்து பெற்றுக்கொண்டேன் என்பதோடு, நண்பர்கள் சேக் ரஹ்மானி, காதர் (அபூஷஃபீக்) போன்றவர்களிடமிருந்தும்
தகவல்களை பெற்று இதை தொகுத்துள்ளேன்.
இதிலுள்ள தவறுகள் குறைகள் என்னையே சாரும்.
https://answeringqadianism.blogspot.com , https://whatsapp.com/channel/0029VbB9xS73mFYFuPal3K35

Comments
Post a Comment