மூசாவும் ஈசாவும் உயிருடன் இருந்தால்- காதியானி பித்தலாட்டம்.

மூசாவும் ஈசாவும் உயிருடனிருந்தால் என்னை பின்பற்ற வேண்டும்- காதியானி பித்தலாட்டகாட்டுகிறார்கள்
------------------------------------


மிர்சா குலாம் அஹ்மது காதியானி என்பவர் தன்னை ஈசா நபி என வாதிட்டார். அவரை ஒருகூட்டம் உண்மை என நம்பி நம்முடன் வாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் ஈசா நபியை மரணித்தவராக காட்டுவதற்கே முயற்சிப்பார்கள். அப்படி செய்தால் தானே அவர்களின் மிர்சா காதியானியை ஈசா நபி என நிருவ முடியும்?


அதற்காக சம்பந்தமே இல்லாத அல்லது ஆதாரமே இல்லாத தகவல்களை பகிர்ந்து தமக்கு ஆதாரம் கிடைத்துவிட்டதாக வாதாடுவார்கள்.


அந்த வகையில் இவர்கள் காட்டும் ஒரு செய்தியை பார்ப்போம்:


ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﺣﻴﻴﻦ ﻟﻤﺎ ﻭﺳﻌﻬﻤﺎ ﺇﻻ ﺍﺗﺒﺎﻋﻲ-

முசாவும் ஈசாவும் இரு உயிருடன் உள்ளவர்களாக இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவர்களிருவருக்கும் (வேறு எதுவும்) முடியாது./அனுமதியில்லை.
(தஃப்சீர் இப்னு கசீர் -குர்ஆன் 3:81க்கான விளக்கத்தில் வரும் செய்தி) இதே செய்தியை ச-அஃரானி, இப்னுல் கையும் உட்பட பலர் தம் நூல்களில் பதிந்துள்ளார்கள்.


ஆனாலும் ஸஹீஹான ஹதீஸ்களில் மூசா நபியை குறித்து மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை குறித்தி அவற்றில் இல்லை.



உதாரணமாக ஃபத்ஹுல் பாரி 13/384 இல்,

ﻻ ﺗﺴﺄﻟﻮﺍ ﺃﻫﻞ ﺍﻟﻜﺘﺎﺏ ﻋﻦ ﺷﻴﺊ ” ﻭﺍﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻟﻮ ﺍﻥ ﻣﻮﺳﻰ ﻛﺎﻥ ﺣﻴﺎ ﻣﺎ ﻭﺳﻌﻪ ﺇﻻ ﺍﻥ ﻳﺘﺒﻌﻨﻰ

வேதக்காரரிடம் எதைக்குறித்தும் கேட்க வேண்டாம். என்னுடைய உயர் எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! மூசா உயிரோடு இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு எதுவும் இயலாது.

அதேபோல முஸ்னத் அஹ்மதில் ஜாபிர் (ர) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் அறிவிப்பில்,

மூசா உங்களுக்கு மத்தியில் உயிரோடு இருந்தால், என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு எதுவும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

இதேபோல கன்சுல்உம்மால் 1/51 ,முஸ்னத் தாரமீ உட்பட பல நூல்களிலும் ஹதீசாக மூசா நபி மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஈசா நபி என்பது அவற்றில் இல்லை.

அதேபோல சில நூல்களின் காப்பிகளில் ஈசா என்பது தவறுதலாக எழுதப்பட்டுள்ளது.

அனைத்து ஆதார பூர்வமான செய்திகளிலும் மூசா நபி மட்டுமே இவ்வாறு கூறப்பட்டுள்ளார்.


----------
இதை உண்மை என கருதினால் எப்படி புரிவது?
-------


ஆனாலும் நபிகளாரை குறித்து எந்த ஆதாரபூர்வமான ஹதீசும் இவ்விசயத்தில் ஈசா நபி பற்றி கூறப்படாமல் மூசா நபி பற்றி மட்டுமே கூறப்பட்டிருந்தாலும், சில இமாம்கள் ஈசா நபியையும் மூசா நபியுடன் இணைத்து கூறுவதன் அர்த்தம்:



ﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﺣﻴﺎ ﻭﻋﻴﺴﻰ ﻣﻮﺟﻮﺩﺍ ﻋﻠﻰ ﺍﻷﺭﺽ

மூசா உயிருடனும் ஈசா பூமியிலும் இருந்தால் - என்று தான் அர்த்தம் வரும்.

மவ்ஜூதன் ஃபில் அர்ள் + ஹய்யன் - என்ற இரு அர்த்தங்களை தங்லீப் ( - ﺍﻟﺘﻐﻠﻴﺐ) செயவதன் மூலமாக இரண்டையும் சேர்த்து "ஹய்யைனி" என கூறப்படுகிறது.

இவ்வாறு அரபியில் சாதாரணமாகவே உள்ள ஒன்றாகும்.

உதாரணமாக - சூரியனையும் (ஷம்ஸ்), சந்திரனையும் (கமர்) சேர்த்து இரு சந்திரன்கள் (கமரான்) என பாவிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் சூரியனும் சந்திரனும் ஒரே வகை என்பதல்ல..

அதேபோல தந்தை (அப்), தாய் (உம்) ஆகிய இரண்டையும் சேர்த்து "இரு தந்தைகள் (அபவான்)" என குர்ஆனிலும் பாவிக்கப்பட்டுள்ளது.


அதே போல 33:43, 56 வசனங்களில் , "அல்லாஹ்வும் மலக்குகளும் முஃமின்கள் மீதும், நபி(ஸல்) அவர்கள் மீது சலவாத் சொல்கிறார்கள்" என ஒரே அரபு வார்த்தையை ஒரு தடவையில் பாவிக்கப்பட்டிருப்பதை காணலாம்.

ஆனால் அல்லாஹ்வின் சலவாத் என்பது அருள்புரிவதையும், மலக்குகளின் சலவாத் அருளை வேண்டுவதையும் குறிக்கும்.


இது போன்று தான் இப்னு கசீர் (ரஹி) உட்பட பலர் இந்த அறிவிப்பை பதிந்துள்ளார்கள்.



குர்ஆன் 3:55இற்கு தஃப்சீர் இப்னு கசீரில் ஈசா நபி தூங்க செய்யப்பட்டு வானத்திற்கு உயர்த்தப்பட்டார் என்றும், 4:157-159 இற்கான தஃப்சீரில் ஈசா வானத்திற்கு உயர்த்தப்பட்டதாகவும் மறுமை நெருங்கும்போது இறங்கி பூமிக்கு வருவார்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளார்கள்.

இதுபோன்றே இச்செய்தியை பதிவிடும் அத்தனை இமாம்களும் கூறியுள்ளார்கள்.


அதாவது இந்த அறிவிப்பில் "ஈசா நபி பூமியில் இருந்தால், மூசா நபி உயிருடன் இருந்தால்" ஆகிய இரண்டையும் தங்லீப் செய்து தான் பதிவிட்டுள்ளார்கள். அதனால் தான் ஈசா நபி மரணிக்கவில்லை வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் என்றும் திரும்பி மறுமையின் அடையாளமாக வருவார்கள் என்றும் எழுதியுள்ளார்கள்.



இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இப்னுல் கைய்யும் (ரஹி) அவர்கள் தன் "மதாரிகுஸ்ஸாலிகீன் 2/243இல் இவ்வாறு எழுதுகிறார்கள்:



ﻭﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺒﻌﻮﺙ ﺇﻟﻰ ﺟﻤﻴﻊ ﺍﻟﺜﻘﻠﻴﻦ ﻓﺮﺳﺎﻟﺘﻪ ﻋﺎﻣﺔ ﻟﻠﺠﻦ ﻭﺍﻹﻧﺲ ﻭﻟﻮ ﻛﺎﻥ ﻣﻮﺳﻰ ﻭﻋﻴﺴﻰ ﻋﻠﻴﻬﻤﺎ ﺍﻟﺴﻼﻡ ﺣﻴﻴﻦ ﻟﻜﺎﻥ ﻣﻦ ﺍﺗﺒﺎﻋﻪ ﻭﺍﺫﺍ ﻧﺰﻝ ﻋﻴﺴﻰ ﺑﻦ ﻣﺮﻳﻢ ﻋﻠﻴﻬﻢ ﺍﻟﺴﻼﻡ ﻓﺈﻧﻤﺎ ﻳﺤﻜﻢ ﺑﺸﺮﻳﻌﺔ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ


முஹம்மது (ஸல்) ஒட்டுமொத்த சகலைனுக்கும் (மனித+ஜின்) அனுப்பப்பட்டவர்கள் ஆவார்கள். ஆகவே அவருடைய ரிசாலத் ஜின்களுக்கும் மனிதர்களுக்கும் பொதுவானது ஆகும். மேலும் மூசாவும் ஈசாவும் (அலைஹிமஸ்ஸலாம்) ஹையைனாக இருந்தால், அவர்களும் அவரை பின்பற்றுவோராக இருந்திருப்பர். மர்யமின் மகன் ஈசா (அலை) இறங்கும்போது நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்களின் ஷரீஅத்தின்படியே தீர்ப்பளிப்பார்கள்.
(மதாரிகுஸ்ஸாலிகீன் 2/243)


இங்கே இமாம் அவர்கள் ஈசா நபியை மூசா நபியின் நிலையுடன் தங்லீப் செய்து கூறிவிட்டு, ஈசா நபி திரும்பி வருவார். நபிகளாரை பின்பற்றி நபிகளாரின் சரீஅத் அடிப்படையிலேயே தீர்ப்பளிப்பார்கள் என்கிறார்கள். இதே போல தான் மற்ற இமாம்களும் பதிந்துள்ளார்கள்..

யாருமே இதை பதிந்துவிட்டு ஈசா நபி உயிரோடு இல்லை என கூறவில்லை!! மாறாக நபிகளாரின் சரீஅத் அடிப்படையில் தீர்ப்பளிப்பார்கள் நபிகளாரை பின்பற்றுவார்கள் என்பதற்கு ஆதாரமாக பதிந்து உள்ளார்கள்.

அவர்களுக்கு அரபு தெரியும் இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின்படி ஈசா நபி வானத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அவர் பின்னர் திரும்பி வருவார் என்று கூறுவதால், அவற்றையும் ஈமான் கொண்டு அவற்றையும் பதிவு செய்துவிட்டு, ஈசா நபி பூமிக்கு வந்து நபிகளாரின் சரீஅத்படி நடப்பதை தவிர வேறு எதுவும் தகாது என்பதை கூறுவதற்காகவே இச்செய்தியை பதிந்துள்ளார்கள்.


ஆகவே.

1.ஆதாரபூர்வமான செய்திகளில் மூசா நபியை மட்டுமே இவ்வாறு குறித்து கூறப்பட்டுள்ளது. ஈசா நபியை மூசா நபியுடன் இணைத்து எந்த சஹீஹாக ஹதீசும் இந்த கருத்தில் இல்லை!



2.மேலதிகமாக ஈசா நபயை மூசா நபியுடன் இணைத்து வரும் செய்திகளை பதிந்த இமாம்கள் அனைவருமே ஈசா நபி வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள், மறுமை நெருங்கும்போது திரும்பி வருவார்கள் என்பதையும் தம் தஃப்சீர்களிலும் நூல்களிலும் எழுதியுள்ளார்கள்.

யாருமே ஈசா நபி உயிருடன் இல்லை என்ற கருத்தில் அதை பார்க்கவில்லை.



3."மூசா நபி உயிருடன் இருந்தால் " என்பதுடன் "ஈசா நபி பூமியில் இருந்தால்" என்பதை தங்லீப் செய்வதால் வரும் அர்த்தத்தில் தான் அந்த இமாம்கள் எல்லோரும் பதிந்துள்ளார்கள்.

இவ்வாறு தங்லீப் செய்வது அரபியில் சாதாரணமாக உள்ள ஒரு விசயமாகும்.



4.ஆகவே இதை ஒரு சஹீஹான ஹதீசாக கருதினாலும் காதியானிகளுக்கு ஆதாரமாக அமையாது.

அந்த இமாம்கள் அரபியிலும் குர்ஆன்,ஹதீசிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள் என்பதால் அவற்றை சரியாக புரிந்து பதிவு செய்துள்ளனர்.

ஆனால் காதியானிகளுக்கு இந்த இரண்டும் இல்லாததால், தமது குஃப்ரியத்தான கொள்கைக்கு இவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள்

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.