கமாலுத்தீன் வதமாமுன்நிஃமா எனும் நூல் ஈசா நபி காஷ்மீரில் மரணித்ததாக சொல்கிறதா?
கமாலுத்தீன் வ தமாமுன்நிஃமா எனும் நூலும் ஈசா நபியின் பெயரில் காதியானி பித்தலாட்டாம்
------------------------------------------------
காதியானிகள் எப்போதும் தமக்கு தேவையான வாதங்களை குர்ஆன்,ஹதீஸ் மற்றும் மற்றவர்களின் புத்தகங்களிலிருந்தும் கட்டிங் ஒட்டிங் செய்து வாதிடுவார்கள்.
இந்த வகையில் ஈசா நபி காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கமாலுத்தீன்-வதமாமுன்நிஃமா எனும் நூல் கூறுவதாக அடித்துவிடுகிறார்கள்.
இது பச்சை பொய் மற்றும் பாரிய மோசடி ஆகும்.
இதை பார்க்க முன் இப்புத்தகம் பற்றி பார்ப்போம்:
இப்புத்தகம் சீஆக்களின் இஸ்னாஅசரிய்யா என்ற பிரிவினரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.
அதில் முகம்மது இப்னு ஹசன் அல்அஸ்கரி (பிறப்பு ஹி.255-258) அவர்கள் தான் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி மற்றும் 12ம் இமாம் என கூறுகிறது. அவர் சிறு வயதிலிருந்து மக்களிடமிருந்து ஒளிந்து வாழ்வதாகவும் , மறுமை நெருங்கும்போது ஈசா நபியின் வருகைக்கு முன் மீண்டும் மக்களிடம் தோன்றுவார் என்றும் இந்நூல் கூறுகிறது.
இனி நம் விசயத்திற்கு வருவோம்.
இப்புத்தகம் ஈசா நபி எனும் யூசாஆசாஃப்/யூசாசிஃப் காஷ்மீரில் மரணித்துவிட்டதாக கூறுகிறது என காதியானி முல்லாக்கள் கூறுகிறார்கள். அதை சற்றும் உறுதி செய்துகொள்ளாத இப்பாமரர்கள் , "பார்த்தீர்களா? ஆரம்ப காலத்திலேயே ஈசா நபி மரணித்துட்டார்" என வரலாற்று நூல்களில் எழுதியிருக்கு என நம்மிடம் வாதிடுகிறார்கள்.
உண்மையில் இப்புத்தகம், ஈசா நபி மரணிக்கவில்லை என்று தான் சொல்கிறது.
அதை அப்படியே மூடி மறைத்து, யூசாஆசாஃப் என்ற நபர் மரணித்ததை வைத்து ஈசா நபி மரணித்ததாக இவர்கள் வாதிடுகிறார்கள்.
இப்புத்தகத்தின் ஆங்கில மொழபெயர்ப்பை www.al-islam.org எனும் சீஆ விழிகேடர்களின் இணையத்தளத்தில் தரவிறக்கி கொள்ளலாம்
இப்புத்தகத்தின் முதலாம் பாகம், 8ஆம் பாடம், 1ம் அறிவிப்பு
(Vol 1 , chapter 8, narration 1)
He said......"O Isa, I am going to raise you towards myself and in the last period of time I will make you descend to the earth........"
இறைவன் ஈசாவிடம் , "ஈசாவே உம்மை என்பால் உயர்த்திக்கொள்ள போகிறேன். இறுதிக்காலத்தில் உம்மை பூமியில் இறங்கச் செய்வேன்..."
(கமாலுதீன் தமாமுன்நிஃமா vol-1 chap-8 narration-1)
மேலும் 22வது பாடத்தில் 20வது அறிவிப்பில்
Allah lifted him up into the heavens
அல்லாஹ் அவரை வானத்திற்கு உயர்த்திக்கொண்டான்.
(கமாலுத்தீன் வதமாமுன்நிஃமா vol-1 chapter-22 narration: 20)
ஸ்க்ரீன்ஷாட்களில் உள்ளதை முழுமையாக படித்துப்பாருங்கள்.
இப்புத்தகத்தில் ஈசா நபி மரணிக்கவில்லை, 3:55, 4:159 வசனங்களின்படி வானத்திற்கு உபூஉயர்த்தமிப்டக்கபட்டார் பூமிக்கு மீண்டும் இறங்குவார். அவர் ஒரே ஈசா தான் என்று தான் இப்புத்தகம் சொல்கிறது.
இப்போது காதியானிகள் காட்டும் யூசாஆசாஃப் விசயம், அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் vol-2 chapter 54 இன் கடைசித்தலைப்பாக "Incident of Yuzasif and Bilohar" இன் கீழ் யூசாஆசாஃப் யார் என சொல்கிறது.
"The king named his son as Yuzasif "
மன்னர் தன் மகனுக்கு யூசாசிஃப் என பெயரிட்டான்.
என தெளிவாக உள்ளது.
அதற்கு மேலே உள்ள பந்தியில் (paragraph) , இந்த பிள்ளை மன்னனுக்கு பிறந்ததற்காக மன்னர் மிகவும் சந்தோசப்பட்டதாகவும், அது அவன் வணங்கிய சிலைகடவுள்களின் பரிசாக பார்த்ததாகவும் அது கூறுகிறது.
அதாவது யூசாசிப் என்பவர், சிலைகளை வணங்கிய இந்திய மன்னருக்கு பிறந்த மகன் என்றும் அம்மகனுக்கு இப்பெயரை அம் மன்னனே இட்டதாகவும் கூறுகிறது.
ஆனால் தந்தையற்ற ஈசா நபி இறைவனால் பெயர்சூட்டப்பட்டவர்.
ஆகவே இந்திய இளவரசன் கடைசியில் காஷ்மீரில் மரணித்ததுவரை கூறும் செய்தியை, ஈசா நபி பலஸ்தீனிலிருந்து காஷ்மீருக்கு வந்து மரணித்தார் என இப்புத்தகம் கூறுவது போன்று அடித்துவிடுகிறார்கள்.
இதனால் நாம் காதியானிகளிடம் கேட்டுக்கொள்வது,
இதுபோன்று கட்டிங் ஒட்டிங் செய்யாமலும், உங்கள் முரப்பிமார் மற்றும் முல்லாக்கள் கட்டிங் ஒட்டிங் செய்து கூறுவதை கண்ணை மூடி பின்பற்றாமல், அவர்கள் மேற்கோள் காட்டும் பகுதிகளை முறையாக படித்து ஆராயுங்கள்! ஆட்டு மந்தைகளாக இருக்காதீர்கள்.



Comments
Post a Comment