எக் கலாத்தி கா இஸாலா- பொய்யாகும் காதியானிய கற்பனை

எக் கலாதி கா இஸாலா -"ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" மூலம் பொய்யாக்கப்படும் காதியானிசம்
------------------------------------------------

"எக் கலா(த்)தி கா இஸலா" எனப்படும் உருது நூலின் தமிழாக்கமே "ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது" என நூலாகும்.

இதை உருது மொழியில் மிர்சா காதியானி கி.பி. 1901ல் எழுதியது ஆகும்.

இது காதியானி கொள்கைக்கே வேட்டுவைக்கும் ஒன்று தான் இந்நூல்.

மிர்சா காதியானி என்பவர் தன்னை இமாம் மஹ்தி என்றும், மர்யம் என்றும் ஈசா நபி என்றும் நபி என்றும் வாதிட்டவர். இவரை சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் "ஒரு தஜ்ஜால்" என சொல்லிவிடலாம். இவர் எப்படி நபியாக மாறினார் என்பதை விளக்கும் நூலே இது.

அதாவது 
-"முகம்மது நபி நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார். அவருக்கு பின் நபி இல்லை! ஒருவர் முகம்மது நபிக்கு பின் தன்னை நபி என யாருக்கும் சொல்லமுடியாதாம்.

ஆனால் ரசூலில் ஃபனா ஆகினால் மட்டும் விதிவிலக்காம்." (பக்கம் 8)

"இப்படி முகம்மது நபியில் ஃபனாவாகி அதனால் நபித்துவம் மெற்றால், அவர் முகம்மது நபியின் நுபுவ்வத்தை தான் பெறுகிறார். (அதாவது அந்த நபித்துவத்தை வாதிடுபவர் அதே முகம்மது நபி தானாம்)'"
(பித்தலாட்டம்

பக்கம் 9 இன் இறுதி பகுதி தொடக்கம் பக்கம் 10இன் ஆரம்பம்வரை

"சுருங்க கூறுவதென்றால், நான் நுபுவ்வத்தையும் ரிசாலத்தையும் பெற்றது, நான் முஹம்மதும் அஹ்மதும் ஆனதினாலேயே அன்றி என் சுய தன்மையால் பெற்றது அல்ல. நான் ஃபனா ஃபிர்ரசூல் ஆனதினாலேயே எனக்கு இத்தகுதி கிடைத்தது. எனவே காத்தமுன்னபிய்யீன் என்பதில் இதனால் யாதொரு மாற்றமும் இல்லை.

ஆனால் சுதந்திரமான நபியாகிய ஹஸ்ரத. ஈசா (அலை) அவர்கள் இறங்குவதால. காத்தமுன்னபிய்யீன் என்பதற்கு கண்டிப்பாக மாற்றம் ஏற்படும்.
(பக்கம் 9-10)

பக்கம் 11இன் நடுப்பகிதியில்

" தம்மை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாகவே அல்லாமல் எவரும் நபிப்பட்டம் பெற முடியாது. தம்மை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிலே ஃபனாவாக்கி விடுவதால் தமது பெயர் வானத்தில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் ஆகாதவரை எவரும் நுபுவ்வத்தின் பட்டத்தை நேரடியாக பெறமுடியாது."
(பக்கம் 11இன் முதல் பந்தியின் இறுதி பகுதி)

இந்த பக்கத்தின் (11) இறுதி பந்தியில்,

"ஒருவர் தன்னை வெறுமையாக்கி முகம்மது நபிக்குள் தன்னை ஃபனாவாக்கிவிட்டால் அவரும் முஹம்மது , அஹ்மது ஆக இருப்பதால் (அதாவது முகம்மது & அஹ்மது முகம்மது நபியின் பெயர்கள்) , அவர் தன்னை நபி என வாதிட்டாலும் முஹம்மது (ஸல்)
அவர்கள் காதமுன்னபிய்யீன் ஆகவே இருப்பார்." (அதாவது கடைசி நபியாக இருப்பார்).
(பக்கம் 11 கடைசி பந்தி சுருக்கம்)

இங்கே மிஸ்டர் பொய்யர் காதமுன்னபிய்யீன் என்றால் கடைசி நபி அவருக்கு பின் நபி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். 

அது தான் அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட. 

அதை சமாளிக்கத்தான் அவர் இவ்வாறு எழுதுகிறார். 

அதை சுருக்கமாக கீழே தருகிறேன்.:

 "முகம்மது (ஸல்) அவர்கள் காதமுன்னபிய்யீன் ஆக இருந்தால், அவருக்கு பின் யாரும் நபியாக முடியாது. 

ஆனால் ஒருவர் முகம்மது நபிக்குள் தன்னை ஃபனாவாக்குவதால் (மாய்த்துக்கொள்வதால்) , அம்மனிதரே முகம்மதாகவும் அஹ்மதாகவும் ஆகிவிடுகிறார்.

இதனால் அவர் தன்னை நபி என வாதிட்டால், அவரும் நபி தான். ஏனெனில் முகம்மது (ஸல்) நபியாக இருப்பதாலும், இம்மனிதர் முகம்மதாகவும் அஹ்மதாகவும் மாறிவிட்டதால், இவரும் அதே முகம்மது நபியின் நுபுவ்வத்தை தான் பெறுகிறார்"

என்னவொரு பித்தலாட்டம் இது?

முகம்மது (ஸல்) அவர்களுக்குள் ஒருவர் தன்னை எப்படி மாய்த்துக்கொள்வது??

அப்படி மாய்த்துக்கொள்வதால் அவர் எப்படி முகம்மது நபியாக ஆகுவார்?

இதற்கு பெயர் தான் மறுபிறவி கோட்பாடு!

இவருடைய ஆதாரமே இது போன்ற கற்பனைகள் தான்.

இதன்மூலம் இவர் மாபெரும் பொய்யர் என தெளிவாக்குகிறார்.

ஏனெனில்

1.முகம்மது நபிக்காக தன் உயிரை கொடுக்கவும் முன்வந்த நபித்தோழர்கள் யாராலும் முகம்மது (ஸல்) அவர்களுல் தம்மை ஃபனாவாக்க (மாய்த்துக்கொள்ள) முடியவில்லையா?

2.அபூபக்ர் (ர) எனும் சிறந்த மனிதர் நபிகளாரின் மரணத்தின் பின் ஏன் நபியினுள் ஃபனாவாக முடியவில்லை?

3.முஸ்லிம்களுக்கு எத்தனையோ ஃபித்னாக்கள் ஏற்பட்டபோதும், அவர்களை சீர்திருத்த ஒருவராலும் நபிகளாரில் ஃபனாவாகி முகம்மது (ஸல்) அவர்களாக மாறி சீர்திருத்த இயலவில்லையா?

4.அதெல்லாம் இருக்கட்டுமே..

 ஒரு பேச்சுக்கு

ஒரு கயவர் (மிர்சாகாதியானி) தன்னை முகம்மது (ஸல்)இனுள் ஃபனாவாக்குவதன் மூலம் நபியாக முடியும் எனில்,

ஒருவர் தன்னை ஈசா நபிக்ககுள் ஃபனாவாக்கினால் அவரும் நபியாக தானே ஆவார். ஏனெனில் ஈசா நபியும் ஒரு நபி தானே..

 அதுவும் நம் தலைவருக்கு 600 வருடங்கள் முன் பூமியில் இருந்தவர் என்பதால், அவரினுள் ஃபனா ஆகினாலும் காதியானி கொள்கைப்படி காதமுன்னபிய்யீனாக முகம்மது நபி இருப்பார் என்பதில் மாற்றம் வராது தானே!

அப்படியெனின் ஒருவர் ஈசா நபிக்குள் ஃபனாவானவர் என்றால் அவரும் ஈசா நபி என்பதால் அவரும் நபி தான் என்று வரும்.

இதேபோல மூசா நபிக்குள் ஃபனாவானால் அவரும் மூசா நபி என்பதால், அதுவும் காதமுன்னபிய்யீன் என்பதற்கு மாற்றம் வராது தானே?

5.ஒருவர் முகம்மது நபிக்குள் ஃபனாவானால் நபியாக இருக்கலாம் எனில், ஈசா நபிக்குள் ஃபனாவானவர் ஈசா நபியாக இருக்க முடியும். அதுவும் காத்தமுன் நபிய்யீனுக்கு மாற்றமாக அமையாது. (மிர்சாவின் புழுகுமூட்டையின்படி இதுதான் கருத்து)

6.ஈசா நபிக்குள் ஃபனாவானவர் பூமியில் ஈசா நபியாக இருப்பது காதமுன்னபிய்யீனுக்கு மாற்றம் இல்லை எனின்,

ஏற்கனவே ஈசா நபியாக இருந்தவர் , ஈசா நபியாகவே இறங்குவார் என்றால் மட்டும் ஏன் காத்தமுன்னபிய்யீன் என்பது உடைகிறது?

(இதற்கு காரணம் வேறொன்றும் இல்லை.. மிஸ்டர் பொய்யர் தன்னை ஈசா என்று வாதிடவேண்டுமானால் , தான் கற்ற வாத திறமைகளை வைத்து ஈசா நபியை மரணிக்க செய்யவேண்டும் என்பது தான் இவரது நோக்கம்)

ஆகவே இங்கே காதமுன்னபிய்யீன் என்பது ஈசா நபி திரும்ப வருவதால் மிர்சாவின் லாஜிக்கின்படி மாற்றம் இல்லை!

பிறகு ஏன் இந்த புத்தகத்தில் அவ்வாறு உலருகிறார்??

7.மிர்சா முகம்மது நபிக்குள் ஃபனாவாகி முகம்மது நபியாக ஆனார் எனின், எப்படி ஈசா நபியாக ஆனார்? ஈசாநபிக்குள்ளும் ஃபனாவானாரா?

எப்படி மர்யமாக மாறினார்?? மர்யமுக்குள்ளும் ஃபனா ஆகினாரா?

இதற்கு பெயர் தான் பித்தலாட்டம்

8.முஸ்லிம்கள் குழம்பாமல் இருப்பதற்காக:

ஈசா நபி முன்பே நபியாக இருக்கிறார். அவர் திரும்ப வந்தாலும் அவர் முகம்மது நபிக்கு பின் தோன்றும் நபி அல்ல.. மாறாக முன்னுள்ள நபியாகவே இருக்கிறார். அதனால் நபிகளாருக்கு பின் நபி இல்லை என்பதில் எந்த முரணும் இல்லை!












Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.