ஈசா நபியும் காஷ்மீரில் அடக்கப்பட்ட யூசா ஆசாஃபும்

யூசா ஆசாஃபும் ஈசா நபியும் -(கஷ்மீர் கல்லறை) -காதியானி பித்தலாட்டம்!!

------------------------------------------------




மிர்சா குலாம் காதியானி என்பவர் தன்னை வாக்களிக்கப்பட்ட ஈசா என வாதிட்டார். அத்துடன்  அன்னை மர்யமிடம் பிறந்த ஈசா நபி மரணித்துவிட்டதாகவும் கூறினார்.

இவரை ஒரு கூட்டம் ஏற்றுக்கொண்டது.


மர்யமின் மகன் மரணித்துவிட்டிருந்தால், அவருக்கு கல்லறை இருக்கும் அல்லவா?? அதை சீடர்கள் கேட்பதால் எப்படியாவது சமாளிக்கணும் என அவர் கல்லறைவதேடிக்கொண்டிருந்தார்.



ஆரம்பத்தில் ஈசாநபியின் கல்லறை

ஜெருசலேமில் இருக்கிறது என சொன்னார்.

பின்பு சிரியாவில் இருந்த ஒரு காதியானி மௌலவி முகம்மது சயீத் அல்திரப்லிசி என்பவர் அவர் இருக்கும் ஏரியாவில் தான் ஈசா நபியின் கல்லறை இருப்பதாக உறுதிப்படுத்தினார் என கூறி சிரியாவில் தான் கல்லறை இருக்குனு சொன்னார்.
(இத்மாமுல் ஹுஜ்ஜா 18-19, ரூஹானி கஸாயின் பா-8 பக்-296-297)




இதன்பின் கடைசி காலத்தில், மௌலவி நூர்தீன் காஷ்மீரில் இருந்தபோது, அங்கே ஒரு கல்லறையை காண்கிறார். அதை பிரபுவான நபி சாஹிபுடைய கல்லறை என மக்கள் சொன்னார்களாம். அவர் தான் யூஸாஸாஃப் என்றும் சொன்னார்களாம்.


உடனே ஈசா மற்றும் யூசா என்பது பொருத்தமாக இருக்கு என பார்த்த மிர்சா குலாம், அந்த யூசாஸாஃப் தான் ஈசா நபினு கூறினார்.


இந்த விசயத்தை ஒரு புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் "masih Hindustan mein" -"Jesus in India"  என்பதாகும்.



சரி நாம் யூசா ஆசாஃபை பார்க்க முன், ஈசா நபியை பற்றி பார்ப்போம்:



 *ஈசா நபி யார்?:

---------


1.அவருக்கு மனிதர்களில் தந்தை இருக்கவில்லை.
(19:19-21)

2.அவரது தாய்  அன்னை மரியம்
(3:45)


3.அவர் ஒரு ரசூல்.(3:49)

4.குழந்தையாக இருக்கும்போதே பேசியவர்.
(3:46, 19:29-33)

5.அவர் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லைல்லை, அல்லாஹ் தன் பக்கம் உயர்த்திக்கொண்டான்.
(4:157-159)

6.அவருக்கும் முகம்மது நபியிற்கும் இடையில் எந்த நபியும் இல்லை
(புகாரி 3442)

7.அவர் இப்போதைய பலஸ்தீனத்தில் வாழ்ந்தவர்.

8.அவர் மரணிப்பதற்கு முன் வேதக்காரர்கள் அவரை ஈமான் கொள்வார்கள். (4:159)

9.அவர் டமஸ்கஸுக்கு கிழக்கிலுள்ள வெள்ளை மினாராவில் இரண்டு மலக்குகளின் மீது கைகளை வைத்தவாறு இறங்குவார்.

தஜ்ஜாலை கொல்வார்.

அதன் பின் யஃஜூஜ் மஃஜூஜ் வெளிப்படுவர்.

 சிறிது காலத்தில் அவர்களை அல்லாஹ் அழிப்பான்.

ஈசா நபி பூமியில் வாழ்வார்.
(முஸ்லிம் 5629)

10.ஜிஸ்யாவை நீக்குவார். இஸ்லாத்தை மட்டுமே ஏற்றுக்கொள்வார். அவரது காலத்தில் யுத்தமே இருக்காது.
(முஸ்லிம் 243)


11.அவர் இந்த உம்மத்தை சேராதவர் என்பதால், அவர் இந்த உம்மத்தில் தொழுகைக்காக இமாமத் செய்யமாட்டார்.
(முஸ்லிம் 247)



இனி யூசா ஆசபை பற்றி பார்ப்போம்!


*யூஸாஸாஃப் யார்?

--------------



கமாலுத்தீன் வதமாமுன் நிஃமா என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் யூசாசாஃப் பற்றி தகவல் உள்ளது.

இந்நூலை எழுதியவர் சீஆக்களின் அறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஆவார்.


இதே நூலை தான் காதியானிகள் "ஈசா நபி இந்தியாவில் வாழ்ந்தார், அவரே யூசாசாஃப் " என்று காட்டுவதற்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்!


அந்த யூசாசாஃப் அவர்களின் கல்லறையே கஷ்மீரில் உள்ளது!


இந்த யூசாசாஃப் அவர்களை பற்றி அந்நூலில்

"Incident of Bilohar and Yuza Asif " என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி யூசாசாஃப் பற்றி சுருக்கமாக தருகிறேன்.



1. யூசாசாஃப் அவர்களின் தந்தை ஒரு சிலைகளை வணங்கிய  மன்னர் ஆவார்.


2.அவரது தந்தை இந்தியாவை ஆண்ட மன்னர் ஆவார்.


3.யூசாசாஃபின் பிறப்பை அவரது தந்தை அவர் வணங்கிய சிலைகளின் அன்பளிப்பு என கருதினார்



4.யூசாசாஃப் தந்தையின் கொள்கைகளை விட்டுவிட்டு மார்க்கபற்றுள்ளவாராக ஆகிவிடுவார் என சோதிடன் அவரது தந்தையிடம் சொன்னார்.


5.யூசாசாஃப் அப்படி ஆகிவிட கூடாது என்பதற்காக அவரது தந்தை, அவரை பராமரிக்க சிலரை ஏற்பாடு செய்து,

"இறப்பு, அழிவு,மறுவாழ்வு, நோய், துன்பம்" ஆகியவற்றை பற்றி யூசாசாஃப் எதுவும் அறியாமல் பார்த்துக்கொள்ளும்படி கட்டளையிட்டார்



6.ஒருநாள் யூசாசாஃப் வெளியே பயணம் போனபோது, தொழுநோயாளி மற்றும் குருடனான இரு பிச்சைகாரர்களை காண்கிறார். வேறொரு நாள் வயோதிபமான தோல் சுருங்கிய மனிதனை காண்கிறார். இவற்றை பார்த்து உலகவாழ்க்கையை பற்றி சிந்திக்கிறார்.




7.பிலோஹர் என்ற துறவி யூசாசாஃப் அவர்களுக்கு ஞானத்தை கற்றுக்கொடுக்கிறார்! உலக இன்பங்களை துறப்பதுவே சிறந்தது என போதிக்கிறார்.

புத்தருடைய கதையில் வரும் உதாரண கதைகளை போதிக்கிறார்.

உதாரணமாக, 
"செல்வம், பிள்ளைகள், நற்செயல்கள் என்ற மூன்று நண்பர்கள் பற்றிய கதை"


இதுபோன்ற உதாரணங்களை கூறி ஞானத்தை கொடுக்கிறார் யூசாசாஃப் அவர்களுக்கு!!


8.பிறகு அவருக்கு வஹீ வந்ததாம்! ஒவ்வொரு ஊராக மார்க்கத்தை பரப்பி போதித்து சென்றாராம்!
கடைசியாக கஷ்மீருக்கு வந்து அங்கே மரணித்தாராம்!


இப்படி கதை நீண்டுகொண்டே போகிறது!


இதன்படி பாருங்கள்: யூசாசாஃப் தான் ஈசா நபியா?? என்னவொரு பித்தலாட்டம்??



சுருக்கமாக சொல்வதானால்,


*ஈசா நபிக்கு தந்தை இல்லை! யூசாசாஃபுக்கு சிலைவணங்கி மன்னரான தந்தை இருந்தார்


*ஈசா நபி குழந்தை பருவத்திலேயே பேசினார். ஆனால் யூசாசாஃப் தந்தையால் அடைத்துவைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்.


*ஈசா நபி இறைவனிடமிருந்து வஹி மூலம் அறிவை பெற்றவர். யூசாசாஃப் பிலோஹர் என்ற துறவியிடம் கற்று ஞானத்தை பெற்றவர்.


*ஈசாநபியின் தாய் பலஸ்தீனியர். ஆனால் யூசாசாபின் பெற்றோர் இந்தியர். காஷ்மீரில் மரணித்தவர்!


இதிலிருந்தே யூசாசாஃப் ஈசா நபி அல்ல என மிக தெளிவாக புரிந்துவிடுகிறது.



காஷ்மீரில் உள்ளது யூசாசாஃப் அவர்களின் கல்லறை ஆகும்!! ஈசா நபியினுடையது அல்ல!!


இதையெல்லாம் அறிந்துகொண்டு மக்களை ஏமாற்ற இவ்வாறு கூறப்படவற்றை விட்டுள்ளார்கள்.


ள்.!

Comments

Popular posts from this blog

Answering Qadianism- ebook

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

பொய்யர் மிர்சா காதியானியின் பார்வையில் இறுதி நபித்துவமும் நம் மறுப்பும்