இமாம் மஹ்தியும் ஈசா நபியும் ஒரே நபரா? -காதியானி பித்தலாட்டம்

இமாம் மஹ்தியும் வரக்கூடிய ஈசா நபியும் ஒருவரா? - காதியானி பித்தலாட்டத்திற்கு பதில்:
------------------------------------------------



நபிகளார் தம் குடும்பத்திலிருந்து
 ஒரு ஆட்சியாளர் வருவார் , அவர் அரபுகளை ஆட்சி செய்வார், பூமியை நீதத்தால் நிரப்புவார் என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அவரை அல்மஹ்தி அல்லது இமாம் மஹ்தி என அழைக்கிறோம்.

அதேபோல ஈசா நபி மறுமை நெருங்கும்போது, தஜ்ஜால் புறப்பட்டு 40 நாட்களின்பின் இரு மலக்குமார்களின் இறக்கைகளில் கைவைத்தவராக இறங்குவார். தஜ்ஜாலை கொல்வார். அவர் ஹஜ் உம்ரா செய்வார். அவர் இந்த உம்மத்தில் தொழுகையில் இமாமத் செய்யமாட்டார். காரணம் அவர் இந்த உம்மத்தில் பிறந்தவர் அல்ல என்பன ஹதீஸ்களில் காண முடிகிறது.


ஆனால் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் தம்மை இயேசு என வாதிட்டது போலவே, முஸ்லிம் பெயர்தாங்கிகளும் தம்மை ஈசா நபி என வாதிட்டு காஃபிர்களாகி தம் மக்களையும் காஃபிர்களாக மாற்றினர்.

அந்த வகையில் பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சாபிலுள்ள காதியான் என்ற ஊரில் ஒரு பொய்யர் தோன்றி தம்மை ஈசா, மஹ்தி, கல்கி,புத்தர் என அடித்துவிட்டார்..

ஈசா நபி இந்த உம்மத்தவர் அல்ல என்றும், மஹ்தி இந்த உம்மத்தில் நபிகளாரின் குடும்பத்தவர் என்றும் இருப்பதால் இதை வைத்து விளையாடினார்.


தன்னை மஹ்தி என வாதிட்டு, சில ஹதீஸ்களில் ஈசாவை தவிர மஹ்தி இல்லை என்பது போன்ற பலவீனமான செய்திகளை காட்டி தன்னை ஈசா என வாதிட்டார்.

ஆனால் ஹதீஸ்களில் வெறும் ஈசா என வராமல் மர்யமின் மகன் ஈசா என்று உள்ளதால், அதை சமாளிக்க,

அல்லாஹ் என்னை மர்யமாக ஆக்கினான். பின்பு என்னுள் ஈசாவின் ரூஹை ஊதினான். அதனால் நான் மர்யமிலிருந்து ஈசாவாக மாறி மர்யமின் மகன் ஈசாவாக மாறிவிட்டதாக வாதிட்டார்.

அதுமட்டுமின்றி அவர் முகம்மது நபிக்குள் ஃபனாவாகியதால், முகம்மது நபியாக மாறியதாகவும் அதனால் அவரும் ஒரு நபி (அதாவது இவரும் முகம்மது நபி தானாம்) என்றும் வாதிட்டார்.


இவர் ஒரு மகா பொய்யர் என இந்த வாதங்களே அடையாளம் காட்டுகின்றன.


ஆகவே ஈசாவும் மஹ்தியும் ஒருவர் என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரங்களையும் அதற்கான சரியான விளக்கங்களையும் பார்ப்போம்.

இவர்கள் இந்த வாழ்தத்திற்கு இரு வகையான ஹதீஸ்களை காட்டுகிறார்கள்:

1.ஈசா நபி இமாம் மஹ்தியாக இருப்பார் என நபிகளார் சொன்னதாக காதியானிகள் காட்டும் ஹதீசை பார்ப்போம்.
-------

ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻣُﺤَﻤَّﺪُ ﺑْﻦُ ﺟَﻌْﻔَﺮٍ ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﻫِﺸَﺎﻡُ ﺑْﻦُ ﺣَﺴَّﺎﻥَ ﻋَﻦْ ﻣُﺤَﻤَّﺪٍ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﻋَﻦْ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﻳُﻮﺷِﻚُ ﻣَﻦْ ﻋَﺎﺵَ ﻣِﻨْﻜُﻢْ ﺃَﻥْ ﻳَﻠْﻘَﻰ ﻋِﻴﺴَﻰ ﺍﺑْﻦَ ﻣَﺮْﻳَﻢَ ﺇِﻣَﺎﻣًﺎ ﻣَﻬْﺪِﻳًّﺎ ﻭَﺣَﻜَﻤًﺎ ﻋَﺪْﻟًﺎ ﻓَﻴَﻜْﺴِﺮُ ﺍﻟﺼَّﻠِﻴﺐَ ﻭَﻳَﻘْﺘُﻞُ ﺍﻟْﺨِﻨْﺰِﻳﺮَ ﻭَﻳَﻀَﻊُ ﺍﻟْﺠِﺰْﻳَﺔَ ﻭَﺗَﻀَﻊُ ﺍﻟْﺤَﺮْﺏُ ﺃَﻭْﺯَﺍﺭَﻫَﺎ



உங்களில் வாழ்பவர் மர்யமின் மகன் ஈசாவை நேர்வழிகாட்டப்பட்ட தலைவராகவும், நீதமான தீர்ப்பாளராகவும் சந்திப்பார். அவர் சிலுவையை உடைப்பார். பன்றியை கொல்வார். ஜிஸ்யாவை நீக்குவார். போரிடுவோர் தம் ஆயுதங்களை வைத்துவிடுவர்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ர).
நூல்: முஸ்னத் அஹ்மத் (முஸ்னத் அபீஹுரைரா என்பதின் கீழ் வருகிறது).




இதைவைத்து அரபு அறியாதவர்களை மடையர்களாக்கி காதியானிகள் தப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.

அவர்கள் மொழிபெயர்ப்புப்படி, 
" ஈசாநபியை இமாம் மஹ்தியாகவும் , நீதமான தீர்ப்பாளராகவும் சந்திப்பார்" என்று மொழிபெயர்க்கிளார்கள்.


அல்மஹ்தி எனும் ஆட்சியாளர், ஆட்சியாளராகவும் தலைவராகவும் இருப்பதால் , முஸ்லிம்கள் அவரை "இமாம் மஹ்தி" என கூறுவதுண்டு.. அதை இந்த ஹதீசுடன் ஜாயின் பண்ணி தில்லுமுல்லை செய்கிறார்கள்.


"இமாம்" என்றால் தலைவர் என அர்த்தம்.

"மஹ்தி" என்றால், நேர்வழிகாட்டப்பட்டவர் என அர்த்தம்.

இந்த ஹதீசில் "இமாமன் மஹ்திய்யன்" என்றும் "ஹகமன் அத்லன்" என்றும் ஈசா நபியை செயற்படுபொருளில் குறித்து கூறப்பட்டுள்ளது


இமாம் என்பதை விபரிக்கும் அடைமொழியாக "மஹ்தீ-நேர்வழிகாட்டப்பட்டவர்" என்பது பாவிக்கப்பட்டுள்ளது.

ஹகம் (தீர்ப்பளிப்பவர்) என்பதை விபரிக்கும் அடைமொழியாக "அத்ல் -நீதமானவர்" என்பது பாவிக்கப்பட்டுள்ளது.


மற்றபடி ஈசா நபியும் நபிகளாரின் குடும்பத்தில் வரும் அல்மஹ்தியும் வெவ்வேறானவர்களே.


இதே போன்று விவரிக்கும் இன்னொரு ஹதீசில்


Hadith

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏

‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ عِيسَى ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا وَإِمَامًا عَدْلاً فَيَكْسِرُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيَفِيضُ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ ‏"

‏ ‏‏

மர்யமின் மகன் ஈசா நீதமான தீர்ப்பாளராகவும், நீதமான தலைவராகவும் இறங்காதவரைக்கும் மறுமை ஏற்படாது. அவர் சிலுவையை உடைப்பார். பன்றியை கொல்வார். ஜிஸ்யாவை நீக்குவார். மேலும் யாரும் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு செல்வம் பெருகும்.
சுனன் இப்னுமாஜா 4078 



இந்த ஹதீசில் ஈசா நபி எத்தகைய இமாம் என விபரிக்கும்போது "இமாமன் அத்லன்" என கூறுகிறார்கள்.

காதியானிகள் கூறுவதுபோல பார்த்தால், "இமாம் அத்ல்" என்ற ஒரு நபர் உள்ளார். அவரும் ஈசா நபியும் ஒரே நபர்களே என சொல்வது போல ஆகிவிடும்.



இது இவர்களின் அறியாமை அல்லது வேண்டுமென்றே திரிக்கும் விளையாட்டு என்றே புலப்படுகிறது.


ஆகவே அந்த ஆரம்ப ஹதீஸ் கூறும் அர்த்தம்,


ஈசா நபி சாதாரண தலைவராக அல்லாமல், நேர்வழிகாட்டப்பட்ட தலைவராக இருப்பார்கள் என்பதே இதன் அர்த்தம்..

அதுவல்லாமல் நபிகளாரின் குடும்பத்தில் வரும் முகம்மது இப்னு அப்துல்லாஹ் அல்மஹ்தி என்பவராக இருப்பார் என கூறுவது மாபெரும் பித்தலாட்டம்.


மஹ்தி பற்றியும் ஈசா பற்றியும் பதிவின் இறுதியில் தருகிறேன்.


------------------------------------------------


 



2.காதியானிகள் காட்டும் அல்லது திரிக்கும் இரண்டாவது அறிவிப்பு:




حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏

‏ لاَ يَزْدَادُ الأَمْرُ إِلاَّ شِدَّةً وَلاَ الدُّنْيَا إِلاَّ إِدْبَارًا وَلاَ النَّاسُ إِلاَّ شُحًّا وَلاَ تَقُومُ السَّاعَةُ إِلاَّ عَلَى شِرَارِ النَّاسِ وَلاَ الْمَهْدِيُّ إِلاَّ عِيسَى ابْنُ مَرْيَمَ ‏"

‏ ‏‏

(மார்க்க) காரியங்கள் கடுமையையே அன்றி அதிகரிக்காது. உலகம் கஷ்டத்தையே அன்றி அதிகரிக்காது. மனிதர்கள் கஞ்சத்தனத்தையே அன்றி அதிகரிக்க மாட்டார்கள்.

கெட்ட மனிதர்களின் மீதே அன்றி மறுமை நிலைபெறாது. ஈசாவே அன்றி அல்மஹ்தி இருக்கமாட்டார்.
(இப்னுமாஜா 4039)



இந்த ஹதீஸ் பலவீனமானது என அநேகமாக எல்லா ஹதீஸ்துறை அறிஞர்களும் உடன்படுகிறார்கள்.

இது பலவீனமானது என பைஹகீ, அல்ஹாகிம், இப்னுதைமியா மின்ஹாஜுஸ்ஸுன்னா (8/256) இலும், இப்னுல் கைய்யிம் அல்மனாருல்முனீஃப் (ப.148) இலும் பலவீனமானது என கூறியுள்ளார்கள்.

தஹபீ அவர்கள் மீஸானுல் இஃதிதால் (3/355) இல் , இது நிராகரிக்கப்பட்ட அறிவிப்பு என்கிறார்கள்.

இமாம் ஷவ்கானி தன் கவாயிதுல் மஜ்மூஆ 127 இல் "இது மவ்ழூஆனது -இட்டுக்கட்டப்பட்டது" என்கிறார்கள்.

அல்பானி அவர்கள் இதை ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அழ்ழயீஃபா 77 இல், இது நிராகரிக்கப்பட்ட செய்தி (முன்கர்) என்கிறார்கள்.



ஒரு பேச்சுக்கு இந்த கருத்தில் வரும் ஹதீஸ்களை ஸஹீஹ் என வைத்துக்கொண்டாலும் , அதன் அர்த்தம்,


மர்யமின் மகன் ஈசாவை விட மிகவும் நேர்வழிகாட்டப்பட்டவரோ (மஹ்தி), பாவத்திலிருந்தும் பிழைகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவரோ வேறு யாரும் இல்லை என்பதாகும்.


இது தான் இப்னுல் கைய்யிம், அல்குர்துபீ, இப்னு கசீர் ஆகியோரால் கூறப்பட்டது ஆகும்.



அதாவது அல்மஹ்தி (நேர்வழிகாட்டப்பட்டவர்) என்ற பட்டத்திற்கு நபிகளாரின் குடும்பத்தில் வரும் முகம்மது இப்னு அப்துல்லாஹ் அல்ஹஸனியை விட இந்த உம்மத்தில் நபிகளாருக்கு அடுத்தபடியாக மிகவும் தகுதியானவர் மர்யமின் மகன் ஈசா மட்டுமே.



அதன் அர்த்தம் அவர் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்று ஆகிவிட மாட்டாது.


ஏனெனில் சஹீஹான ஹதீஸ்களுக்கு பலவீனமான ஹதீசால் எதுவும் செய்துவிட இயலாது.!!

-------------+


நபிகளார் முன்னறிவித்த இமாம் மஹ்தியும் ஈசா நபியும் வெவ்வேறானவர்கள் என்பதை காண்போம்:



1.*மஹ்தி - நபிகளாரின் குடும்பத்தை சேர்ந்தவர். பாத்திமா (ர) அவர்களின் சந்ததியில் உள்ளவர். (அபூதாவூத் 4284)

*ஈஸா நபி இந்த உம்மத்தை சாராதவர். அதனால் தொழுகையில் இமாமத் செய்ய மாட்டார். (முஸ்லிம் 247)



2.*மஹ்தியின் பெயர் நபிகளாரின் பெயருக்கு ஒத்தது. அதாவது முகம்மது. 
(முஸ்னத் அஹ்மத்5/199, ஹதீஸ் 3573)

*ஈசா நபியின் பெயர் மர்யமின் மகன் ஈசா.


3.*மஹ்தி ஒரு நபி அல்ல. ஏனெனில் முகம்மது (ஸல்) அவர்களே கடைசி நபி. அவருக்கு பின் நபி இல்லை (புகாரி 3535, திர்மிதி 2219 குர்ஆன் 33:40)

*ஈசா ஒரு நபி ஆவார். (முஸ்லிம் 5629)

அதாவது அவர் நபிகளாருக்கு முன்பே நுபுவ்வத்தையும் ரிசாலத்தையும் பெற்றவர் ஆவார்.




4.*மஹ்தி பிற்காலத்தில் பிறப்பவர் ஆவார். அதாவது நபிகளாரின் குடும்பத்தில் வருபவர். (அபூதாவூத் 4284)

*ஈசா நபி இரு மலக்குகளின் இறக்கைகளில் தம் கைகளை வைத்தவாறு திமிஷ்க் நகரத்தின் கிழுக்குப்புறத்திலுள்ள வெள்ளை மினாராவின் அருகில் இறங்குவார். (முஸ்லிம் 5629)


ஆகவே இவையே போதுமானதாக இருக்கின்றன.

Comments