அஹ்மது நபியும் காதியானிகளின் பித்தலாட்டமும்!!
அஹ்மது என்ற இறைதூதர் யார்?
- காதியானிகளின் குருட்டுத்தன்மை
------------------------------------------------கண்ணியமிக்க இறைவன் தன் வேதத்தில், ஈசா நபி அஹ்மது என்ற தூதரை பற்றி முன்னறிவித்ததை இவ்வாறு கூறுகிறான்:
وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ
மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் : 61:6)
இங்கே ஈசா நபி தனக்கு பின்னால் அஹ்மத் என்ற பெயருள்ள இறைதூதர் வருவார் என்று முன்னறிவித்ததை ஞாபகப்படுத்துமாறு இறைவன் கூறிவிட்டு,
அவர் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த போது, " இது தெளிவான சூனியம்" என்று கூறினார்கள் என்று குர்ஆன் கூறுகிறது..
இதன்படி நபிகளார் காலத்திலேயே அத்தூதர் கொண்டுவந்ததை பார்த்து சூனியம் என கூறிவிட்டதாக இவ்வசனம் கூறுகிறது.
இதைப்பற்றி நபிகளார் மிக தெளிவாக கூறியுள்ளார்கள்:
Hadith
قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ
إِنَّ لِي أَسْمَاءً، أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ "
நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்:
நிச்சயமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன.
நான் முகம்மது ஆவேன் (அன முகம்மதுன்).
மேலும் நான் அஹ்மது ஆவேன் (வ அன அஹ்மது).
மேலும் நான் அல்மாஹீ (அழிப்பவர்) ஆவேன். அல்லாஹ் என்மூலம் இறைமறுப்பெ அழிக்கிறான்.
மேலும் நான் அல்ஹாசிர் (ஒருங்கிணைப்பவர்) ஆவேன். என் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கபடுவார்கள்.
மேலும் நான் அல்ஆகிப் (இறுதியானவர்) ஆவேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம் (ரழி)
புகாரி 4896
அத்தியாயம்:65. திருக்குர்ஆன் விளக்கவுரை.
இங்கே நபிகளார், எனக்கு முகம்மது என்பதை தவிர,
அஹ்மது என்ற பெயரும் உள்ளது என தெளிவாக கூறியுள்ளதுடன்,
நான் அஹ்மது ஆவேன் (அன அஹ்மது) என தெளிவாக கூறிவிட்டார்கள்.
இதன்படி நானே அந்த ஈசா நபி சொன்ன அஹ்மது என தெளிவாக்கிவிட்டார்கள்.
மேலும் சில ஹதீஸ்களில்
நான் என் தந்தை இப்ராஹீமின் பிரார்த்தனை ஆவேன், ஈசா நபியின் நன்மாராயம் ஆவேன்.
(முஸ்னத் அஹ்மது)
இப்படி தெளிவாக நபிகளார் கூறியிருக்கும்போது, 1400 வருடமாக முஸ்லிம்கள் இதை நம்பியிருக்கும்போது, இந்த பொய்யர் மிர்சா காதியானி தன்னை அந்த குர்ஆன் கூறும் ஈசா நபி முன்னறிவித்த அஹ்மத் என வாதிட்டார்.
இதை அப்படியே ஏற்றுக்கொண்ட இந்த காதியானிகள் ,,
முகம்மது நபி தன்னை அஹ்மது என சொன்னதை நேரடி அர்த்ததில் எடுக்க கூடாது, ஒருத்தருக்கு ஒரு பெயர் தான் இருக்கும்... என கூறி மிர்சா காதியானியே அந்த அஹ்மது என்கிறார்கள்.
நபிகளார் தன்னை அஹ்மது என கூறிவிட்ட பின்னாலும், நீங்கள் அஹ்மது இல்லை மிர்சா தான் அஹ்மது என இந்த காதியானிகள் நபிகளாருக்கே சொலிக்கொடுக்கிறார்கள்.
இந்த கயவர்கள் இப்படி ஒருத்தருக்கு ஒரு மெயர் தான் இருக்கும், முகம்மது என்பதே நபிகளாரின் பெயர் மற்றவை உவமை என கூறுகிறார்கள்.
ஆனால் இதே பொய்யர்களின் தலைவர் மிர்சா காதியானி தன்னை
"மர்யம் என கூறியுள்ளார்"
மர்யம் என்பது பொம்புள ...
"மர்யமின் மகன்" என்றும் கூறியுள்ளார்.
"கல்கி அவதாரம்" என்றும் கூறியுள்ளார்
"மைத்ரேய புத்தர்" என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதையெல்லாம் கண்ணைமூடி ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
நீங்கள் எப்படி மர்யம் ஆவீர்கள்? நீங்கள் என்ன பெண்ணா? என்று கேட்டு மறுத்தார்களா??
இல்லையே
நீங்கள் எப்படி மர்யமின் மகன் ஆவீர்கள்? உங்களின் தாய் சிராக்பீபி அல்லவா? என்று கேட்டார்களா?
இல்லையே!
அஹ்மது எப்படி மர்யமாக ஆவார் என கேட்டீர்களா??
ஆனால் முகம்மது நபி தன்னை அஹ்மது என கூறினால் , அதை ஏற்க மாட்டார்களாம்...
ஆனால் ஒரு பொய்யர் தன்னை "மர்யம்" என்று பொய்யாக சொன்னதைகூட அப்படியே ஏற்றுள்ளார்கள்!!!
இவர்கள் எவ்வளவு குருடர்கள் பார்த்தீர்களா???
வேடிக்கை என்ன தெரியுமா??
இந்த பொய்யரின் பெயரே, "குலாம் அஹ்மது" ஆகும்.
அதாவது அஹ்மதின் அடிமை என்பதே அவரது பெயர்.
குர்ஆன் சொல்வது அஹ்மதின் அடிமையை அல்ல..
அஹ்மதை ஆகும்.
நபிகளாரே தன்னை அஹ்மது என கூறிவிட்டார்கள்.
ஆனால் அஹ்மதின் அடிமை என பெயருள்ளவர் எப்படி அஹ்மது ஆவார்??
மேலும் நபிகளார் கூறினார்கள்:
நான் ஃகாதிமுன் நபிய்யீன் ஆவேன் (நபிமார்களில் இறுதியானவர்).
என தெளிவாக கூறியுள்ளார்கள்.
(புகாரி 3535)
அதே முகம்மது நபி,
ஈசா நபியை பற்றி கூறும்போது
லைஸ பைனீ வபைனஹூ நபிய்யுன்-
எனக்கும் ஈசாவாகிய அவருக்கும் இடையில் எந்த நபியும் இல்லை (புகாரி 3442)
இதன் அடிப்படையில்,
ஈசா நபி தனக்கு பின் அஹ்மது என்ற தூதர் வருவார் என கூறியதிலிருந்தும் இவற்றிலிருந்தும் பெறும் முடிவு
1. ஈசா நபிக்கு பின் வந்த ஒரே நபி முகம்மது நபி ஆவார். (புகாரி 3442)
2.முகம்மது நபிக்கு பின் எந்த நபியும் இல்லை. அவரே நபிமார்களில் கடைசியானவர்.
(புகாரி 3535)
ஆகவே ஈசாவுக்கு பின்னுள்ள ஒரே ஒரு நபி/ரசூல் முகம்மது நபி மட்டுமே!
ஆகவே புது அஹ்மதுக்கு இடமே இல்லை!!!
3.மேலும் அஹ்மது வந்த போது, அவர் கொண்டுவந்தவற்றை சூனியம் என்றனர் (61:6)
மிர்சா எந்த அத்தாட்சியும் கொண்டுவரல.. நபிகளார் காலத்தில் மிர்சா இருக்கல.
அக்கால மக்கள் மிர்சாவை சூனிய காரன் என சொல்லல.
நபிகளார் முகம்மது (ஸல்) கொண்டுவந்ததை தான் சூனியம் என்றனர் (74:24)
மிர்சாவை தஜ்ஜால் என்றே சொன்னார்கள்.
4.நபிகளார் தன்னை அஹ்மது என தன் வாயாலேயே சொல்லியுள்ளார்கள்.
(புகாரி 4896)
ஆகவே வேறு தெரிவே இல்லை காதியானிகளுக்கு.
5.நான் ஈசாவினால் முன்னறிவுப்பு செய்யப்பட்டேன் (முஸ்னது அஹ்மது) என நபிகளார் கூறினார்கள்.
6.மிர்சா குலாமின் பெயர் "குலாம் அஹ்மது" அதாவது அஹ்மதின் அடிமை
எனவே இவற்றிலிருந்து மிக தெளிவாவது, பொய்யர் மிர்சாவை பற்றி ஈசா நபி கூறவே இல்லை.
மாறாக ஈசா நபிக்கு பின்னால் உள்ள ஒரே ஒரு தூதரும் எவருக்கு பின்னால் எந்த தூதரும் இல்லையோ அத்தகைய முகம்மது நபியை பற்றியே ஆகும்.
அவரே அஹ்மதும் ஆவார் முகம்மதும் ஆவார்.
குறிப்பு: ஈசா நபி திரும்பி வருவதால் அவர் நபிகளாருக்கு பின்னால் உள்ள நபி ஆகமாட்டார். ஏனெனில் அவர் நபிகளாருக்கு முன்னரே நபித்துவம் கிடைத்த முன்னுள்ள நபி ஆவார். புது நபி அல்ல.
ஆனால் புதிதாக ஒரு மனிதரை ஈசா என கூறினால், அது பொய்யானதாகிவிடும். ஏனெனில் நபிகளாருக்கு பின்னால் எந்த புது நபியும் இல்லை!!!
Comments
Post a Comment