இரு வெவ்வேறு ஈசா நபிகளா? - காதியானிகளுக்கு மறுப்பு

இரண்டு ஈசா நபியா?
காதியானி பித்தலாட்டம்

------------------------------------------------



ஈசா நபியை பற்றி நபிகளார் பனு இஸ்ராயீலிய ஈசா , வரக்கூடிய ஈசா என நபிகளார் ஒருபோதும் பிரித்து சொன்னதில்லை.


ஆனாலும் சில அறிவிப்புகளை போதிய ஞானமின்றி படித்துவிட்டு,


பனுஇஸ்ராயீலிய ஈசா சிவப்புநிறத்தவராகவும் சுருள்முடியை உடையவர் என்றும், வரக்கூடிய ஈசா மாநிற படிந்த வாரிய முடி உடையர் என்றும் கூறுவதாக இவர்கள் அடித்துவிட்டு,

பனு இஸ்ராயீலிய ஈசா வேறு, வரக்கூடிய ஈசா வேறு என்றும் பனு இஸ்ராயீலிய ஈசா மரணித்துவிட்டார் என்றும்  காதியானிகள் அடித்துவிடுகிறார்கள்



அதில் அவர்கள் கூறும் இரு அறிவிப்புகளையும் பார்ப்போம்:


1.ஈசா நபி சுருள் முடி ( جَعْدٌ), சிவந்த நிறம்




‏ رَأَيْتُ عِيسَى وَمُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدٌ عَرِيضُ الصَّدْرِ، وَأَمَّا مُوسَى فَآدَمُ جَسِيمٌ سَبْطٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِّ ‏"

‏‏‏

Narrated Ibn `Abbas:



Sahih al-Bukhari 3438
In-book : Book 60, Hadith 109
USC-MSA web (English) : Vol. 4, Book 55, Hadith 648  (deprecated)
Sahih Bukhari

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மிஅராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3437.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்





2. மாநிறமானவர், படிந்த முடி






‏ أُرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ، فَرَأَيْتُ رَجُلاً آدَمَ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنْ أُدْمِ الرِّجَالِ، لَهُ لِمَّةٌ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ مِنَ اللِّمَمِ، قَدْ رَجَّلَهَا، فَهْىَ تَقْطُرُ مَاءً مُتَّكِئًا عَلَى رَجُلَيْنِ، أَوْ عَلَى عَوَاتِقِ رَجُلَيْنِ، يَطُوفُ بِالْبَيْتِ فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ‏.‏ وَإِذَا أَنَا بِرَجُلٍ جَعْدٍ، قَطَطٍ، أَعْوَرِ الْعَيْنِ الْيُمْنَى كَأَنَّهَا عِنَبَةٌ طَافِيَةٌ، فَسَأَلْتُ مَنْ هَذَا فَقِيلَ الْمَسِيحُ الدَّجَّالُ ‏"

‏‏‏

Sahih al-Bukhari 5902
In-book : Book 77, Hadith 119
USC-MSA web (English) : Vol. 7, Book 72, Hadith 789  (deprecated)
Sahih Bukhari


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
இன்றிரவு (இறையில்லம்) கஅபாவின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்ட முடிகளில் நீ பார்த்தவற்றிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது. அதை அவர் வாரிவிட்டிருந்தார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவர் “இரண்டு மனிதர்களின் மீது சாய்ந்தபடி“ அல்லது “இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது சாய்ந்தபடி“ இறையில்லத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார். நான், “யார் இவர்?“ என்று கேட்டேன். மர்யமின் குமாரர் மஸீஹ்(ஈசா)“ என்று பதிலளிக்கப்பட்டது. அப்போது அங்கே கடும் சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், “யார் இவன்?“ என்று கேட்டேன். “மஸீஹுத் தஜ்ஜால்“ என்று பதிலளிக்கப்பட்டது.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 105
ஸஹீஹ் புகாரி : 5902.
அத்தியாயம் : 77. ஆடை அணிகலன்கள்
-------



இதை வைத்து இரண்டு ஈசாக்கள் என இந்த காதியானிகள் வாதம் வைக்கிறார்கள்.


இந்த வாதம் அடிப்படையிலேயே தவறு ஆகும்.

இதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்!


முதலாவது அவரது நிறம், இரண்டாவது தலைமுடியின் தன்மை



1.ஈசா நபியின் நிறம்:


இதில் ஒரு அறிவிப்பு சிவப்பு என்றும் மறு அறிவிப்பு மாநிறம் என்றும் கூறுகிறது. இது முரண்பாடு போல தென்பட்டாலும், அதை தெளிவுபடுத்தும்விதமாக ஒரு ஹதீஸ் உள்ளது.


அதாவது ஈசா நபியை நபிகளார் சிவப்பு நிறத்தவர் என சொல்லவில்லை என இப்னு உமர் (ர) அவர்கள் கூறுகிறாசெய்திகள்.


أَبِيهِ،، قَالَ لاَ وَاللَّهِ مَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعِيسَى أَحْمَرُ، وَلَكِنْ قَالَ ‏
‏ بَيْنَمَا أَنَا نَائِمٌ أَطُوفُ بِالْكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ سَبْطُ الشَّعَرِ، يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، يَنْطِفُ رَأْسُهُ مَاءً أَوْ يُهَرَاقُ رَأْسُهُ مَاءً فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا ابْنُ مَرْيَمَ، فَذَهَبْتُ أَلْتَفِتُ، فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ، جَعْدُ الرَّأْسِ، أَعْوَرُ عَيْنِهِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ‏.‏ قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الدَّجَّالُ‏.‏ وَأَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ ‏"

‏‏‏ قَالَ الزُّهْرِيُّ رَجُلٌ مِنْ خُزَاعَةَ هَلَكَ فِي الْجَاهِلِيَّةِ‏‏





Sahih al-Bukhari 3441
In-book : Book 60, Hadith 111
USC-MSA web (English) : Vol. 4, Book 55, Hadith 650  (deprecated)
Sahih Bukhari

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து “அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்“ என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க... அல்லது வழிந்து கொண்டிருக்க... அங்கே இருந்தார். நான், “இவர் யார்?“ என்று கேட்டேன். “மர்யமின் குமாரர்“ என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், “யார் இது?“ என்று கேட்டேன், “தஜ்ஜால்“ என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் “இப்னு கத்தன்“ தான்.

இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:
இப்னு கத்தன் “குஸாஆ“ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.
ஸஹீஹ் புகாரி : 3441.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்



இங்கே இப்னு உமர் (ர) அவர்கள், ஈசா நபியை நபியவர்கள் சிவப்பு நிறத்தவர் என கூறவில்லை என மறுக்கிறார்.


இதிலிருந்து எம்மால் புரிந்துகொள்ளக்கூடிய விசயமானது,

ஈசா நபி  சிவப்பு நிறத்தவர் என வரும் அறிவிப்பில் அவ்வாசகம் அறிவிப்பாளரால் தவறுதலாக கூறப்பட்டுள்ளது என புரிந்துகொள்ள முடிகிறது.





*இதை பற்றி இன்னும் தெளிவாக இப்னு அப்பாஸ்(ர) அவர்களை தொட்டு வேறொரு அறிவிப்பு இவ்வாறு கூறுகிறது.







قَالَ ‏‏ رَأَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي مُوسَى رَجُلاً آدَمَ طُوَالاً جَعْدًا، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى رَجُلاً مَرْبُوعًا مَرْبُوعَ الْخَلْقِ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ، سَبْطَ الرَّأْسِ، وَرَأَيْتُ مَالِكًا خَازِنَ النَّارِ ‏"‏‏.‏ وَالدَّجَّالَ فِي آيَاتٍ أَرَاهُنَّ اللَّهُ إِيَّاهُ، فَلاَ تَكُنْ فِي مِرْيَةٍ مِنْ لِقَائِهِ‏.‏ قَالَ أَنَسٌ وَأَبُو بَكْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏"‏ تَحْرُسُ الْمَلاَئِكَةُ الْمَدِينَةَ مِنَ الدَّجَّالِ ‏"‏‏.‏"




Sahih al-Bukhari 3239
In-book : Book 59, Hadith 50
USC-MSA web (English) : Vol. 4, Book 54, Hadith 462  (deprecated)
Sahih Bukhari



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவாக்ளை “ஷனூஆ“ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
“தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்“ என்று நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3239.
அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்




இந்த அறிவிப்பின்படி ஈசா நபியை பற்றி மிஃராஜ் பயணத்தின்போது ,

வெள்ளையும் சிவப்பும் கலந்த நிறமுடையவராகவே கண்டார்கள்.


அதாவது வெள்ளை நிறத்தவராகவோ அல்லது சிவப்பு நிறத்தவராகவோ அல்லாமல் இரண்டுக்கும் மத்தியதரத்தில் அவரை கண்டார்கள்.

அதே நிறத்தை தான் மாநிறம் என்றும் சொல்கிறது.

இரண்டும் வேறுவேறான நிறங்கள் அல்ல.





*ஈசா நபியை சிவப்பு நிறத்தவராக அறிவிக்கும் அறிவிப்பை பற்றி இமாம் நவவீ (ரஹி) கூறும்போது,


இது அறிவிப்பாளரின் பகுதியிலுள்ள சந்தேகமாகும். சிலவேளை சிவப்பை மாநிறமாக கருதியிருக்கலாம்.  இதனால் நாடப்படுவது சிவப்போ மாநிறமோ அல்ல மாறாக அதற்கு சமீபமானது.
(இமாம் நவவீ  , சஹீஹ் முஸ்லிமின் விரிவுரை , கிதாபுல் ஈமான் 1/302)


*ஒரு மனிதருடைய நிறத்தை இலகுவாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது ஒரு சில நிறத்தவர்களை தவிர.

இதனால் தான் நபிகளாரை பற்றி அனஸ்(ர) அறிவிக்கும் அறிவிப்பில், (சமாயிலுத்திர்மிதீயில் 1&2 ஹதீஸ்கள்)

ஒன்றில் நபிகளார் மாநிறம் அல்ல என்றும் மற்றதில் மாநிறம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மனிதனுடைய தோலின் நிறத்தை கூறுவதில் பிரச்சினைகள் வரும்..

காதியானிகள்வகூறுவது போல பார்த்தால்,  இரண்டு முகம்மது (ஸல்) இருக்கிறார்கள் என கூறவேண்டி வரும்.

------------------



2. தலைமுடி


ஈசா நபியின் தலைமுடியை பற்றி சுருள் முடி என்றும், படிந்த முடி என்றும் வந்துள்ளது.


உண்மையில் அதற்காக பாவிக்கப்பட்டுள்ள அரபு மூல வார்த்தைகளை பார்க்க வேண்டும்.


ஈசா நபியின் முடி சுருள் முடி என்னு வரும் ஹதீஸில்

" جَعْدٌ"

என்ற வார்த்தையே பாவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சுருள் முடி என்ற அர்த்தம் மட்டுமே வராது.

மாறாக

"பலமான கட்டமைப்பு"  என்ற அர்த்தமும் உண்டு என இமாம் இப்னு அதில்(ர) கூறுகிறார்கள்.
(நிஹாயா ஃபீ ஙரிப் அல் அஸர் 1/767)



மேலும் இமாம் இப்னு ஹஜர் அவர்கள்,

இதை பற்றி சொல்லும்போது,

இது உடலிலுள்ள உறுதிப்பாட்டை பற்றியது ஆகும் முடியை பற்றி அல்ல.(ஃபத்ஹுல் பாரீ 10/242, கிதாபுல் அஹாதீஸல் அன்பியா)

இதையே இமாம் நவவீயும்  முஸ்லிம் கீரந்தத்துக்கான தனது விரிவுரையில் , கிதாபுல. ஈமான் 1/296 இல் கூறுகிறார்கள்.




எனவே சுருள் முடி என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல.



அது உறுதியான உடல் கட்டமைப்பையே குறிக்கிறது.



நபிகளார் ஈசா நபியை எப்படி மிஃராஜில் கண்டார்களோ அதே போன்றே இரண்டாம் வருகையிலும் கூறப்பட்டிருக்கிறார்கள்.



அதாவது,

"நான் அழைத்துசெல்லப்பட்ட இரவில் .....

ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும. வெண்மையும் சார்ந்த மிதமான சருமமைப்பை கொண்டவர்களாகவும், படிந்த தொங்கலான தலைமுடி உடையவராகவும் கண்டேன்"
(புகாரி 3239, அத்தி 59, படைப்பின் ஆரம்பம்)


மேலும் ஈசா நபியின் வருகையை பற்றி கூறும்போது,



எனக்கும் அவருக்கும் இடையில் நபி இல்லை அதாவது ஈசா.   நிச்சயமாக அவர் இறங்குபவராக இருக்கிறார். அவரை நீங்கள் காணும் போது அறிந்துகொள்வீர்கள். நடுத்தர உயரமுடையவர் சிவப்பும் வெண்மையும் சார்ந்த சரும அமைப்பு உடையவராகவும் மஞ்சல் நிற இரு ஆடைகளை அணிந்தவராகவும்..... இருப்பார்.

அவர் இஸ்லாத்திற்காக மனிதர்களுடன் யுத்தம் செய்வார். சிலுவையை முறிப்பார், பன்றியை கொல்வார், ஜிஸ்யவை விட்டுவிடுவார். அவருடைய காலத்தில் அல்லாஹ இஸ்லாத்தை தவிர மற்ற அனைத்து மார்க்கங்களையும் அழித்துவிடுவான்., மசீஹ் தஜ்ஜாலை கொல்வார்.  பூமியில் 40 வருடங்கள் இருப்பார். பிறகு மரணிப்பார். முஸ்லிம்கள் அவருக்காக தொழுவார்கள்.
(அபூதாவூத் 4324)





இதன்படி இங்கே காதியானிவாதம் சுக்குநூறாகிவிடுகிறது!!



இவர்கள் கூறுவதுபோல பார்த்தால் இரண்டு ஈசா அல்ல... மாறாக மூன்று ஈசா இருப்பதாக நம்பவேண்டி வரும்.


உதாரணமாக


இவர்கள் மொழிபெயர்ப்புப்படியே


1. சிவப்புநிற ,சுருள் முடிகொண்ட ஈசா
(புகாரி 3437)

2.மாநிறமும், படிந்த முடி கொண்ட ஈசா
(புகாரி 3439,3440,3441,    5902,6999,7128,7026))

3.சிவப்பு+வெண்மை நிறமும், படிந்த முடியும் கொண்ட ஈசா
(முஸ்லிம் 267, புகாரி 3239, )




இதுமட்டுமா என பார்த்தால்
.அதில் இரண்டு ஈசா நபி திரும்பி வருவார் என வரும்.

அதாவது  மாநிறமும் படிந்த முடியுமடைய ஈசா, சிவப்பு+வெண்மை கலந்த ஈசா  (புகாரி 3440,3441 & அபூதாவூத் 4324)




அதேபோல இரண்டு மூசா நபி இருப்பதாக நம்ப வேண்டி வரும்.


அதாவது

1.மாநிறம் , படிந்த முடி கொண்ட மூசா
(புகாரி 3437, 3294, 3436)

2.மாநிறம் , சுருள் முடிகொண்ட மூசா
(புகாரி 3239)


இப்படி பார்த்தால் இரண்டு மூசா நபி இருப்பதாக நம்பவேண்டும்.


ஆகவே இவர்களின் இவ்வாதம் தவறு ஆகும்.


காரணம், சுருள்முடி என வந்த இடத்திலுள்ள வார்த்தை உடலின் உறுதியான கட்டமைப்பை குறிப்பது ஆகும்.

முடியை பற்றியது அல்ல.



இது புரியாமலே இவர்களின் இவ்வாதம் அமைந்துள்ளது


முடிவு:

1. இரண்டு ஈசா என்ற கதை போலி

2. சிவப்பு நிறம் என்று அறவிப்பாளர் தவறாக கூறியிருக்கிறார்.

3.வெள்ளையும் சிவப்பும் கலந்த நிறமுடையவரே ஈசா நபி ஆவார். அந்த நிறமே மாநிறம் எனப்படுகிறது.

4.ஈசா நபியின் முடி சுருள் அல்ல.. படிந்த வாரப்பட்ட முடி ஆகும்.

5. சுருள்முடி என மொழிபெயர்த்த இடத்திலுள்ள வார்த்தை வலிமையான உடல் கட்டமைப்பை குற்றிப்பது ஆகும். முடியை அல்ல


6.இப்படி தவறாக புரிந்திகொண்டு வாதம் வைப்பதானால், மூன்று ஈசா நபி இருப்பதாகவும் அதில் இருவர் திரும்பி வருவர் என்றும், இரண்டு மூசா நபிகள் உள்ளனர் என்றும் வாதிட வேண்டிவரும்.


7.நபிகளார் தனக்கு பின் நபி இல்லை என கூறியிருப்பதால், பனூஇஸ்ராயீலிய ஈசாவே வரக்கூடிய ஈசா ஆவார். இல்லாவிட்டால் அது புது நபி என்று ஆகிவிடும்.


8.ஈசா நபி வந்தவுடன் தொழுகையில் இமாமத் செய்ய அழைக்கபடுவார். ஆனால் அவரோ மறுத்துவிட்டு, உங்களில் சிலரே சிலருக்கு இமாம். இது இந்த உம்மத்திற்கு அல்லாஹ் கொடுத்த கண்ணியம் என கூறுவார்கள் என நபிகளார் சொல்லியுள்ளார்கள்.
(முஸ்லிம் 247)

இந்த ஹதீஸ் ஈசா நபி இந்த உம்மத்தை சேர்ந்தவர் அல்ல. அதனால் தான் அவரால் நமக்கு தொழுகை நடத்தும் இமாமாக இருக்கமுடியவில்லை என காட்டுகிறது. அது அவர் இஸ்ராயீலியர் ஆவார்.
எனவே காதியானிவாதம் க்ளீன் போல்ட்

9. இரண்டு ஈசா இல்லை. வரக்கூடியவரும் வந்தவரும் ஒருவரே என காதியானிகளுக்கு புரியவைக்கும் இன்னொரு பதிவு

https://answeringqadianism.blogspot.com/2020/01/blog-post_27.html?m=0


Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.