ஈசா நபியின் கப்ரை வணக்கஸ்தலமாக எடுத்துக்கொண்டார்களா?
ஈசா நபியை மரணித்து விட்டதாக சித்தரிப்பதற்கு அகமதிகள் ஹதீஸிலிருந்து காட்டும் அறியாமை வாதமும் நம் பதிலும்
--------------------------------
காதியானிகளின் வாதம்:
நபிகளார் மரணப்படுக்கையில் இருக்கும்போது,
"யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் சபிப்பானாக! அவர்கள் தம் நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜித்களாக (வனக்கஸ்தலங்களாக) ஆக்கிக் கொண்டார்கள். (புகாரி)
இங்கே யூதர்கள் தம் நபிமார்களது கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டது போல கிறிஸ்தவர்களும் தம் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.. ஈசா நபி தவிர வேறு யார் கிறிஸ்தவர்களுக்கு நபியாக வந்தது? ஆகவே ஈசா நபியின் கப்ரை வணக்கஸ்தலமாக எடுத்திருக்க வேண்டும்.. ஆகவே, ஈசா நபி மரணித்து விட்டார்.
இது தான் இவர்களது வாதம்!
நம் பதில்:
இதை சில பகுதிகளாக பிரித்து பதில் சொல்கிறோம்.
1.யூதர்களுடைய நபிமார்கள் அனைவரும் கிறிஸ்தவர்களுக்கும் நபிமார்கள் தான். யூதர்கள் ஏற்காத ஆனால் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்ட நபிமார்கள் என இங்கே கூறப்படவில்லை! அதனால் ஈசா நபியை தேவையின்றி சொருக வேண்டியதில்லை!
2.யூதர்கள் ஏற்றுக்கொள்ளாத, ஆனால் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்ட நபிமார்கள் ஈசா நபியை தவிர்த்து, சகரியா (அலை), யஹ்யா (அலை) ஆகியோர் இருந்தனர். ஆகவே ஈசா நபியை இங்கு சொருக வேண்டியதில்லை!
3.கிறிஸ்தவர்களை பொருத்தமட்டில், அவர்கள் தம் நல்லவர்களது கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள்.
யூதர்கள் தம் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள். இந்த இரண்டையும் சேர்த்து சொல்லும்போது, தங்லீப் (அரபு இலக்கணவிதியொன்று) செய்து "அவர்களது நபிமார்கள்" என இருவருக்கும் பொதுவாக கூறப்பட்டுள்ளது.
அதை வைத்து யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனித்தனியாக "அவரவர்களது நபிமார்கள்" என கூறப்படவில்லை!
4.யூதர்களை மட்டும் தனியாக கூறிய சந்தர்ப்பங்களில் நபிகளார் இவ்வாறு சொன்னார்கள்.
"அல்லாஹ் யூதர்களை தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தமது நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள். அறி:அபூஹுரைரா (ர). நூ:புகாரி 437
இதே போல, கிறிஸ்தவர்களை குறித்து தனியாக கூறும்போது, "அவர்களது நல்லடியார்களது கப்ருகளை" என வேறுபடுத்தி கூறியிருக்கிறார்கள்.
தாம் கண்ட மரியா எனும் கிறிஸ்தவ ஆலயத்தை குறித்து நபிகளாரது மனைவியரான உம்முஹபீபா (ர), உம்முசலமா(ர) ஆகியோர் நபிகளாரிடம் விபரித்து கூறியபோது,
"அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே 'நல்ல அடியார்' அல்லது 'நல்ல மனிதர்' ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது, அவரது கப்ரின்மீது மஸ்ஜிதை (வணக்கஸ்தலம் ஒன்றை) கட்டிவிடுவார்கள். அதில் அந்த உருவங்களை வரைந்தும்விடுவார்கள். இத்தகையோர் தான் அல்லாஹ்விடம் மறுமையில் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்" என நபிகளார் கூறினார்கள். அறி:ஆயிஷா (ர). நூ. புகாரி 427,434
ஆகவே கிறிஸ்தவர்கள் நல்லடியார்களது கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள்.
யூதர்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள்.
இரண்டையும் இணைத்து சொல்லும்போது, அவர்களது நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள் என கூறியுள்ளார்கள்.
மற்றபடி கிறிஸ்தவர்கள் தம் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக எடுத்துக்கொண்டார்கள் என கூறவில்லை!!!
5.இன்றுவரை ஈசா நபியின் கப்ரு என உடம்பு இல்லாத கப்ரே பாலஸ்தீனில் உள்ளது.. அதாவது உயிர்த்தெழுந்த இடமென்றே கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
இந்த அகமதிகள் ஈசா நபி காஷ்மீரில் அடக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
ஆனால் அந்த கப்ரை கிறிஸ்தவர்கள் வணங்கவில்லை...
அதுவும் யூதாஸாஃப் என்பவருடைய கப்ரு ஆகும். அவர் சிலைவணங்கி வந்த ஒரு ராஜாவுக்கு பிறந்த இளவரசனாக இருந்தார். ஈசா நபியோ தந்தையின்றி பிறந்தவராவார்
ஆகவே, அறிவுபூர்மற்ற வகையில் இது போன்று தம் நிலைப்பாட்டுக்கேற்ப குர்ஆனையும், ஹதீஸையும், அறிஞர்களின் கூற்றுகளையும் திரித்து சொல்வதே இவர்களது வேலை
Comments
Post a Comment