மஹ்தி காதியானில் தோன்றுவாரா?

அல்மஹ்தி கத்ஆ எனும் ஊரிலிருந்துவருவாரா???- காதியானி பித்தலாட்டம் --------------------------------------- அவர்கள் கருதும் ஆதாரங்கள்.: ١- [عن عبدالله بن عمرو:] يخرجُ المهديُّ من قريةٍ باليَمَنِ يُقالُ لها كَرِعَةٌ ابن القيسراني (ت ٥٠٨)، ذخيرة الحفاظ ٥‏/٢٧٨٠ • [فيه] عبد الوهاب بن الضحاك ضعيف • أخرجه ابن عدي في «الكامل في الضعفاء» (٥/٢٩٥) அப்துல்லாஹ் ப்னு அம்ர் (ர) அறிவிக்கிறார்கள்: அல்மஹ்தி யமனிலுள்ள "கரிஆ" என்கிற ஓர் ஊரிலிருந்து வெளிப்படுவார். இதில் அப்துல்வஹ்ஹாப் ப்னு ளஹ்ஹாக் பலவீனமானவர். ٥- [عن سهل بن سعد الساعدي:] يخرجُ المهديُّ من قريةٍ باليمنِ يقالُ لها كَرِعَةُ، وعلى رأسهِ عمامةٌ فيها منادٍ ينادي ألا إن هذا المهديَّ فاتَّبِعوه الذهبي (ت ٧٤٨)، ميزان الاعتدال ٢‏/٦٨٠ • [فيه عبد الوهاب بن الضحاك ذكر من جرحه] ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதி (ர) அறிவிக்கிறார்கள்: அல்மஹ்தி யமனிலுள்ள "கரிஆ" எனப்படும் ஓர் ஊரிலிருந்து வெளிப்படுவார். அவரது தலையில் ஒரு தலைப்பாகை இருக்கும். அதிலிருந்து ஓர் அழைப்பாளர் "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இவரே அல்மஹ்தி. ஆகவே அவரை பின்பற்றுங்கள்!" என அழைப்பார். இதிலும் அதே அப்துல்வஹ்ஹாப் இப்னு ளஹ்ஹாக் இடம் பெறுகிறார். முதலில் இவை அனைத்தும் பலவீனமானவைகள் --- 1.இவை ஒன்றிலும் காதியான் என இல்லை. மாறாக கரிஆ என்றே உள்ளது. 2.அந்த கரிஆ ஹிந்தில் (இந்தியாவில்) உள்ளது என்று இல்லை. மாறாக யமன் பிரதேசத்தில் உள்ளது என்றே கூறப்பட்டுள்ளது. 3.ஒருபேச்சுக்கு கதிஆ என ஹதீஸில் உள்ளது என கருதினாலும், இது இவங்களுக்கு சரிப்பட்டு வராது. காரணம் மிர்சாஜியின் ஊர் காதியான் 4.காதியான் அஜமி பெயர். அதனுடைய அரபு பெயர் தான் கதிஆ என வாதிட்டால் அது அபத்தம். காரணம்: இங்கே "ஐன் ع" உள்ளது. காதியான் என்பதிலோ "யா ي" தான் உள்ளது. குறைந்தது ஐனுக்கு பதிலாக "ஆ" சவுண்டாவது இருக்குமே. இல்லைனா முன்னறிவிப்பே ஒரு மாதிரியாக இருக்குமே? 5. சரி யமனுக்கு பதிலாக இந்தியா, கரிஆவுக்கு பதிலாக காதியான் என வைத்தாலும், நம்ம ஜி அவர்களின் தலைக்கு மேல் இருந்த தலைப்பாகை மேல் இருந்து, "இவரு தான் மகதி.. இவர பின்பற்றுங்கோ" என சொன்னது யாரு? அப்படி எந்த தகவலும் இல்லையே. 6.சரிப்பா இதெல்லாத்தையும் விட்றுவோம். காதியான்ல தான் மகதி வருவாரு என ஹதீஸ் வந்து சஹீஹாகவும் இருக்கு என வச்சுக்குவோம். இப்போ மிர்சா தான் மகதினு எப்படி சொல்ல முடியும்? ஏனெனில் அ.மஹ்தியின் பெயர் முகம்மது (ஸல்) அவர்களின் பெயரை ஒத்ததாகும், அவரது தந்தையின் பெயர் நபிகளாரின் தந்தையின் பெயரை ஒத்தும் இருக்குமே. ஆனால் ஜி அவர்கள் அப்படி இல்லையே. ஆ. மஹ்தி அரபுகளை ஆட்சி செய்வார் என்று உள்ளதே. ஆனால் ஜி அவர்களோ பிரிட்டிஷ் பெண்ணால் ஆளப்பட்டவர். சோ காதியான்ல இருந்து அரபுகளை இப்படி ஆட்சி செய்து , நபிகளாரின் முன்னறிவிப்பு படி பெயருடையவராக வரட்டும். ஜி அவர்கள் இதற்கு பொருந்தமாட்டார். 7.அல்மஹ்தி என்றால் நேர்வழி காட்டப்பட்டவர் என அர்த்தம். நபிகளார் தன்னை وانا خَاتَمُ النبيين، لا نَبِيَّ بعْدِي நான் காதமுல் நபிய்யீன் ஆவேன். எனக்கு பின் எந்த நபியும் இல்லை-திர்மிதி 2219 وانا خاتِمُ النَّبِيّن நான் நபிமார்களில் கடைசியானவர் ஆவேன்- புகாரி 3535 என தெளிவாக சந்தேகமின்றி சொல்லியிருக்க, ஒரு நபர், முகம்மது நபி கடைசி நபி தான். நான் என்னை முகம்மது நபிக்குள் மாய்த்துக் கொண்டேன். அதனால் நானும் முகம்மது நபியாகவும் அகமது நபியாகவும் ஆகிவிட்டேன். இதன்மூலம் முகம்மது நபியின் நுபுவ்வத்தையே நான் பெற்றுள்ளேன் . அதனால் நானும் நபி என "எக் கலாததிகாஇஸாலா " என்ற தன் நூலில் எழுதியவர், மஹ்தி என்ற பெயருக்கே பொருந்தாதவர். அதுவும் தன்னை மர்யம் என்று உளறிவைத்தவர் எப்படி மஹ்தி ஆவார்? பச்சை வழிகேடர் எப்படி மஹ்தி ஆவார்???

Comments

Popular posts from this blog

இறுதி நபித்துவம் பற்றி இஸ்லாமிய இஜ்மாவும் காதமுன்நபிய்யின் பற்றி அரபு அகராதிகளும்

இமாம் அல்-மஹ்தியும் போலிகளும்

நபிகளாரின் மகன் இப்ராஹீம் பற்றிய அறிவிப்பில் காதியானி பித்தலாட்டம்.